ilakkiyainfo

ilakkiyainfo

‘ஹீரோவானார் தினேஷ் கார்த்திக்’ – கடைசி ஓவரில் இந்திய அணி திரில் வெற்றி!

‘ஹீரோவானார் தினேஷ் கார்த்திக்’ – கடைசி ஓவரில் இந்திய அணி திரில் வெற்றி!
March 18
21:31 2018

நிதாஹஸ் கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்த தொடரில் இந்திய அணி ஏற்கெனெவே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற நிலையில், நேற்று முன்தினம் நடந்த கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி வங்கதேசம் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்குப் பதிலாக, ஜெயதேவ் உனத்கட் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். தமீம் இக்பால் உட்பட தொடக்க வீரர்களை வாஷிங்டன் சுந்தர், சஹல் இணை விரைவாக வெளியேற்ற, வங்கதேச அணி நெருக்கடிக்கு உள்ளானது.

இருப்பினும், அந்த அணியின் ஷபீர் ரஹ்மான் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 50 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.

_100468901_chahal  'ஹீரோவானார் தினேஷ் கார்த்திக்' - கடைசி ஓவரில் இந்திய அணி திரில் வெற்றி! 100468901 chahalஇந்திய அணி தரப்பில் சஹல் 3 விக்கெட்டுகளும், உனத்கட் 2  விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிர்ச்சி அளித்தார். 10 ரன்களில் அவர் அவுட் ஆக, அடுத்து வந்த சுரேஷ் ரெய்னாவும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

எனினும் கேப்டன் ரோஹித் ஷர்மா பொறுப்பாகி விளையாடி அரைசதம் அடித்தார். 56 ரன்களில் அவர் அவுட் ஆக, ஆட்டம் பரபரப்பை எட்டியது.

கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 34 ரன்கள் தேவை இருந்த போது, மனிஷ் பாண்டே ஆட்டமிழக்க, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.

_100468900_dddd  'ஹீரோவானார் தினேஷ் கார்த்திக்' - கடைசி ஓவரில் இந்திய அணி திரில் வெற்றி! 100468900 dddd19-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள் என 6 பந்துகளில் 22 ரன்கள் குவிக்க, ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருப்பினும் கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட சிறப்பாக விளையாடிய மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் 19.5 ஓவரில் அவர் ஆட்டமிழக்க வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். இதன்மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி நிதாஹஸ் கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News