ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளிலிருந்த முதலைகள் வெளியேறி தெருக்களில் உலாவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் வட கிழக்கு பகுதியில் வரலாறு காணாத மழை பெய்கிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக குவின்ஸ் லெண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
வீடுகள், பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். சிலர் தங்களின் வீட்டு கூரைகளில் தஞ்சமாடைந்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்வதால் குவின்ஸ் லேன்டிலுள்ள அணை திறந்து விடப்பட்டது. அதிலிருந்து வெளியேறிய நீர் கைரனஸ், டவுன்ஸ்வில்லே பகுதிகளில் பாய்ந்து செல்கிறது. அணைகளிலிருந்த முதலைகள் வெளியேறி தெருக்களில், உலாவருகின்றன. இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் மண்சரிவும், மின் வெட்டும் நிலவுகிறது. தொடர்ந்து வெள்ளம் அதிகரிப்பதையடுத்து மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன.
எனவே வெள்ளம் பாதித்த பகுதிகளில் தங்கியிருப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.