ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் டீசர் உலகளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. #Sarkar #Vijay
#SarkarTeaser ‘s real-time views has crossed 13M+ views in 17Hrs! pic.twitter.com/hlfjrxoA5A
— Sun Pictures (@sunpictures) 20 octobre 2018
டீசர் வெளியான 10 நிமிடங்களிலேயே 10 லட்சத்துக்கும் அதிகமான முறை டீசர் பார்க்கப்பட்டது. 20 நிமிடங்களில் 20 லட்சம் பார்வை, 35 நிமிடங்களில் 30 லட்சம் பார்வை என நேரம் போகப்போக அதிகமான முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. பார்வைகள், விருப்பங்கள், ரசிகர்களின் கருத்துகள் என்று மூன்று விதங்களில் ‘சர்கார்’ டீசர் சாதனை படைத்துள்ளது. ஐந்தரை மணி நேரத்தில் ‘சர்கார்’ டீஸர் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. 17 மணிநேரங்களில் 1 கோடியே 30 லட்சம் பார்வையளர்களை பெற்றுள்ளது.
Record breaking 1M+ Likes on YouTube for #SarkarTeaser within 5hrs! pic.twitter.com/5MznnXCRqg — Sun Pictures (@sunpictures) 19 octobre 2018
5 மணிநேரத்தில் 10 லட்சம் லைக்குகளை பெற்ற ‘சர்கார்’ டீசர், உலகின் அதிக லைக்குகளை பெற்ற டீசர் என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும் 1 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் டீசர் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா மற்றும் இலங்கையில் ‘சர்கார்’ டீசர் யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்திலும், ஐக்கிய அரபு எமைரேட்சில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. #Sarkar #SarkarTeaser #Vijay