இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாவுள்ள கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை எதிர்பார்த்து ரசிகர்கள் இருந்தனர். படக்குழுவும் இன்று கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்றைய தினம் வெளியாகியுள்ளன.
விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்து வருகிறார். அவரது பிறந்தநாள் பரிசாக கத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்டுள்ளது. கத்தி படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் இந்தி ரீமேக்கான ஹாலிடே படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது அவருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.