பிரதமர் மோடி சிவப்பாகுவதற்காக தினமும் 5 காளான்கள் சாப்பிடுகிறார். ஒரு காளானின் விலை 80 ஆயிரம் ரூபா என குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அல்பேஷ் தாகூர் தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் குஜராத் காங்கிரஸ் தலைவர் அல்பேஷ் தாகூர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
மோடிஜி சாப்பிடுவதை உங்களால் சாப்பிட முடியாது. ஏன் என்றால் அது ஏழைகளின் உணவு அல்ல என்று ஒருவர் என்னிடம் கூறினார். அப்படி என்ன அவர் சாப்பிடுகிறார் என்று கேட்டேன். காளான்கள் என்றார். காளான்கள் தான் எளிதில் கிடைக்குமே என்று நான் கூறினேன்.
காளான்கள் எளிதில் கிடைக்கும். ஆனால் மோடி சாப்பிடுவது தைவானில் இருந்து வரவழைக்கப்படுகிறது. ஒரு காளானின் விலை 80 ஆயிரம் ரூபா. அவர் தினமும் 5 காளான்கள் சாப்பிடுகிறார். ஆக நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட. 4 இலட்சம் ரூபாவை காளான்களுக்கு மட்டுமே செலவு செய்கிறார் என்றார் அந்த நபர்.
மோடி குஜராத் முதல்வர் ஆனதில் இருந்து விலை உயர்ந்த காளான்களை தினமும் சாப்பிடுகிறாராம். 35 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட மோடியின் புகைப்படத்தை பார்த்தேன்.
35 ஆண்டுகளுக்கு முன்பு மோடி என்னை போன்று கறுப்பாக இருந்துள்ளார். ஆனால் தற்போது சிவப்பாகிவிட்டார். மோடி காளான்களுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ. 4 இலட்சமும், மாதத்திற்கு ரூ. 1 கோடியே 20 இலட்சமும் செலவு செய்கிறார் என்றார்.