கிறங்கடிக்கும் அழகுப்பதுமை ..கையில் கலக்கல் நாயகர்களுடன் நடிக்கும் திரை வாய்ப்புகள் .. ” இப்ப நான் ரொம்ப பிசி ” என்று சொல்லும் அளவிற்கு அம்மணியின் காட்டில் அதிர்ஷ்ட மழை …
ஆனா நம்ம கீர்த்தி சுரேஷ் வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் இடம்பெறுகிறது என்பது லேட்டஸ்ட் தகவல் ..
ரஜனி முருகனில் வந்து ரகசியமாய் எம் நெஞ்சை கொள்ளை கொண்ட பொண்ணுக்கா திருமணம் ..காமடி நடிகர் சதீஷிற்கும் கீர்த்திக்கு இடையே காதல் என்று செய்திகள் வந்ததே
..அப்ப அவங்க வீட்டில பச்சைக்கொடி காட்டி விட்டார்களா ? என்றெல்லாம் நம்ம மனங்களில் ஓடிய ஆயிரம் வினாக்களிற்கு கீர்த்தியின் வீட்டில் இருந்து வரும் தகவல்கள் சற்று ஆறுதலைத் தருகிறது
நிஜமாகவே கீர்த்தி சுரேஷ் வீட்டில் கல்யாண மேளச்சத்தம் கேட்க போகிறதாம் ஆனால் அது நம்ம கீர்த்திக்கல்ல .
கீர்த்தி சுரேஷின் உடன்பிறந்த சகோதரி ரேவதி சுரேஷிற்கே திருமணம் நிச்சயமாகி உள்ளதாம். மணமகன் நிதின் மனோகர், சட்டம் மற்றும் மனித உரிமை தணிக்கையாளராக உள்ளார்.
கீர்த்தியை போல அவரது அக்கா ரேவதி சுரேஷும் திரைப்படத்துறையில் விஷுவல் டிசைனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் செப்டம்பர் 8 ஆம் தேதி கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் திருமணம் எளிமையாக நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து சென்னையில் வருகிற செப்டம்பர் 11ஆம் தேதி பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரபல நட்சத்திரங்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
அப்ப சதீஷ் கீர்த்தி காதல் பற்றி வந்த செய்திகள் பற்றி கேட்டால் எல்லாம் பட வாய்ப்பை தட்டிப்பறிப்பதற்காக போட்டியாளர்கள் கையாளும் யுக்தியோ என்று பேசப்படுகிறது… .
அனிருத்தின் “சிரிக்காதே” புரோமோசன் பாடல் – ரெமோ