கனடாவில் தரையிறங்கிய பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜோர்ஜை, அந்நாட்டு பிரதமர் Justin Trudeau மண்டியிட்டு வரவேற்றுள்ளார்.
பிரித்தானியா இளவரசர் குடும்பம் அரச குடும்ப சுற்றுப்பயணமாக கனடா வந்தடைந்துள்ளனர்.
விக்டோரிய சர்வதேச விமான நிலையம் வந்த இளவரசர் வில்லியம்ஸ், இளவரசி கேட், குட்டி இளவரசர் ஜோர்ஜ், குட்டி இளவரசி சார்லோட் ஆகியோரை கனடிய பிரதமர் Justin Trudeau, அவரது மனைவி சோபி உட்பட பலர் நேரில் வந்து வரவேற்றனர்.
இதன்போது, வில்லியம்ஸ், கேட் ஆகியோரை விட பிறந்து 16 மாதமே ஆன குட்டி இளவரசி சார்லோட், இளவரசர் ஜார்ஜ் ஆகியோர் பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இளவரசர் ஜோர்ஜை, கனடிய பிரதமர் மண்டியிட்டு வரவேற்ற நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
&