பாடகி டெய்லர் ஸ்விப்டின் (Taylor Swift’s ) லுக் வட் யூ மேட் மீ டூ (Look What You Made Me Do) எனும் பாடல், புதிய சாதனைகளைப் படைத்துள்ளது.
கடந்த 24 ஆம் திகதி இப்பாடலின் லிரிக் வீடியோ அனிமேஷன் காட்சிகளுடன் வெளியாகியது. இவ்வீடியோ 24 மணித்தியாலங்களுக்குள் 1.9 கோடி தடவைகள் பார்வையிடப்பட்டது. 24 மணித்தியாலங்களுக்குள் அதிக தடவைகள் பார்வையிடப்பட்ட அனிமேஷன் லிரிக் வீடியோ இதுவாகும்.
இவ்வருட முற்பகுதியில் வெளியான சம்திங் லைக் திஸ் எனும் லிக் வீடியோ 24 மணித்தியாலங்களில் 90 லட்சம் பேரினால் பார்வையிடப்பட்டமையே இதுவரை சாதனையாக இருந்தது.
கடந்த 27 ஆம் திகதி லுக் வட் யூ மேட் மீ டூ பாடலின் உத்தியோகபூர்வ வீடியோ வெளியிடப்பட்டவுடன் 24 மணித்தியாலங்களில் 4.32 கோடி தடவைகள் பார்வையிடப்பட்டமையும் புதிய சாதனையாகும்.
2015 ஒக்டோபரில் ஹெலோ எனும் பாடல் வீடியோ 24 மணித்தியாலங்களில் 2.77 தடவைகள் பார்வையிடப்பட்டமை முந்தைய சாதனையாக இருந்தது.
27 வயதான டெய்லர் ஸ்விப்ட், லுக் வட் யூ மேட் மீ டூ பாடலை ஜெக் அன்டனோவ்வுடன் இணைந்து எழுதியுள்ளார். இப்பாடலின் உத்தியோகபூர்வ வீடியோவை ஜோசப் கான் இயக்கியுள்ளார். நேற்றுவரை 9 கோடிக்கும் அதிக மான தடவைகள் இவ்வீடியோ பார்வையிடப்பட்டிருந்தது.