ஈரானில் ஜிம் ஒன்றில் காலை நேர உடற்பயிற்சியில் பிரபல தமிழ் பாடல் ஒன்றுக்கு சிலர் நடனம் ஆடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இன்று காலை, ஈரான் நாட்டில் உள்ள ஜிம் ஒன்றில் பிரபல தமிழ் பாட்டிற்கு ஆடியபடி வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை அனு சேகல் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடவே, அதனை ஆனந்த் மகேந்திரா பார்த்து விருப்பப்பட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ இப்போது வைரலாகி் வருகிறது.
இது குறித்து ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இது நிஜம்தானா? எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
இனி நானும் படுக்கையில் இருந்து எழுந்து, தமிழ் பாடல்களை ஒலிக்கச் செய்து புதிய நாளை சந்திக்கப் போகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
Are you serious? I love it. I’m going to make it my new morning routine. Going to get out of bed, put on some Tamil music & bounce out to meet the new day! @shivithukral https://t.co/JReqG0rmQE
— anand mahindra (@anandmahindra) 14 août 2019