கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் குமார், அனுஷ்கா, த்ரிஷா மற்றும் பலர் நடித்து வரும் திரைப்படத்தின் டைட்டில் என்னை அறிந்தால் என்பது 30ஆம் திகதி 12 மணி ஆனதும் அறிவிக்கப்பட்டது.
இத்திரைப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே டிவிட்டரில் “என்னை அறிந்தால்″ தலைப்பு டிரெண்டிங்கில் வந்து விட்டது.
அடுத்த அரை மணி நேரத்திற்குள்ளாகவே இந்திய அளவிலும், பின்னர் உலக அளவிலும் என்னை அறிந்தால் திரைபடப் பெயரை அஜித் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் கமெண்ட்டுகளை அள்ளி வழங்கி விவாதிக்க ஆரம்பித்து விட்டனர்.
திரைப்படங்களின் விளம்பர யுக்தியில் சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றன. அதில் படத்தின் தலைப்பையே இந்த அளவிற்கு பேச வைத்திருப்பது இதுவே முதல் முறை.
Trisha 16 – Diwali Special Program by Jaya Tv