பாலிவுட் நடிகை பூனம் பாண்டே அவ்வப்போது ஏதாவது பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அதிரடி அறிவிப்புகள் அறிவிப்பது வழக்கம். இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்றால் மைதானத்தை நிர்வாணமாக சுற்றிவருவேன் என அதிரடியாக அறிக்கை விட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த நடிகை தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை மையமாக வைத்து ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த பிரேசில் மற்றும் கொலம்பியா அணிகளுக்கு இடையே நடந்த விறுவிறுப்பான போட்டி குறித்து தனது டுவிட்டரில் டுவிட் செய்த பூனம் பாண்டே, தனது டுவிட்டுக்கு ரீடுவிட் செய்பவர்களில் ஒருவருக்கு தனது பிராவை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதனால் அவரை பாலோ செய்யும் ஆயிரக்கணக்கான பாலோயர்கள் அவருடைய பிராவை பெறுவதற்கு ரீடுவிட் செய்து வருகின்றனர். இவர்களில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு பூனம்பாண்டேவின் பிரா கிடைக்கும் என தெரிகிறது.
யார் அந்த அதிர்ஷ்டசாலி என்பதை டுவிட்டர் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்று இரவு அவர் தனது முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பூனம் பாண்டே செய்த டுவிட் இதுதான் “I am all Set To give My Lovely #BRA To One Lucky Winner! who RETWEETS My Last Tweet if #BRA Wins Tonight #WorldCup” இந்த டுவிட்டுக்கு பலரும் பலவிதமாக ரீடுவிட் செய்து வருகின்றனர்.
அதில் ஒருவர் பூனம் பாண்டேவின் பிராவுக்கும் பிரேசில் அணிக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இரண்டிலும் கவர்ச்சியான கப் இருக்கும் என்று ரீடுவிட் செய்துள்ளார்.
கே.பாக்யராஜின் ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ ரீமேக்கில் சாந்தனு-ஸ்ரீதிவ்யா.
இந்தியாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெயரெடுத்த பாக்யராஜ், தன் மகனுக்கு ஒரு சிறந்த படைப்பை கொடுக்க முடியவில்லை. அவருடைய இயக்கத்திலும், மற்ற இயக்குனர்களின் இயக்கத்திலும் பாக்யராஜ் மகன் சாந்தனு நடித்தும் இன்னும் அவருக்கு ஒரு படம் கூட தேறவில்லை.
சாந்தனு கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் அம்மாவின் கைபேசி. இந்த படமும் குறிப்பிட்டு சொல்லும்படி ஓடவில்லை.எனவே ஒரு ஒரே ஒரு ஹிட் படத்திற்காக சாந்தனு காத்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பாக்யராஜ், அவரது மனைவி பூர்ணிமா நடித்து கடந்த 1982ஆம் ஆண்டு வெளியான டார்லிங் டார்லிங் டார்லிங் திரைப்படத்தை ரீமேக் செய்து அதில் சாந்தனுவை நடிக்க வைக்க பாக்யராஜ் முடிவு செய்துள்ளார். ஆனால் இந்த படத்தை அவர் இயக்கப்போவதில்லை. அதியமான் என்ற இயக்குனர் இயக்கப்போகிறார்.
பாக்யராஜ் வேடத்தில் சாந்தனுவும், பூர்ணிமா வேடத்தில் ஸ்ரீதிவ்யாவும் நடிக்க உள்ளனர். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் நடிக்கும்போதுதான் பாக்யராஜ், பூர்ணிமா மீது காதல் கொண்டு பின்னர் திருமணம் செய்துகொண்டார். அவருடைய வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய படம் அது. அதுபோலவே சாந்தனுவின் வாழ்விலும் இந்த ரீமேக் திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.