நேற்று பிக்பாஸை ‘8 மணி வெள்ளைச்சாமி’ என்று குறிப்பிட்டதற்கு கோபித்துக்கொண்டார்போல இன்றைக்கு ’வேக்கப் சாங்’ ஒன்பது மணிக்குதான் ஒலித்தது. ’ரோமியோ ஜூலியட்’ படத்திலிருந்து ‘அடியே அடியே இவளே..’ என்ற பாடலை ஒலிக்கவிட்டார்கள்.
SOURCE-02
வழக்கம்போல சுஜாவும் கணேஷூம் கூட்டணி போட்டுக்கொண்டு குத்தாட்டம் போட்டார்கள். நேற்றைய டாஸ்கிற்கு தண்டனையாக ஹரீஷ், ஆரவ் மற்றும் பிந்துவின் கால்கள் ஒன்றாக கட்டப்பட்டிருந்ததால் மூவரும் சேர்ந்தே ஆடினார்கள்.
கால்கள் கட்டியிருந்தாலும்கூட ஆரவ்வும் பிந்துவும் கொஞ்சமாவது ஃபோர்ஸாக ஆடினார்கள். ஆனால் பாவம் ஹரீஷ்… என்ன சார் அது டான்ஸா? (சரோஜா குப்பை கொட்டுறியா.. கொட்டு கொட்டு..). இது எதிலும் ஒட்டாமல் ’காதல் கொண்டேன்’ தனுஷ் ஸ்டெப்களைப் போட்டுக்கொண்டிருந்தார் சிநேகன்.
நேற்றைய டாஸ்க்கில் ஹரீஷ், ஆரவ், பிந்து அணி 6 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்கள் அதை ஆளுக்கு 2 ஆக பிரித்துக் கொண்டார்கள். ’நாங்க எடுத்த பாயிண்ட்ஸெல்லாம் வெளில சொல்லாதீங்க பிக்பாஸ் கேவலமா இருக்கும்’ என்று பிக்பாஸூக்கு வேண்டுகோள் வைத்தார் பிந்து. (மார்க் மட்டும்தானுங்களா?). சரி விடிஞ்சிருச்சு அவிய்ங்களுக்கும் காலைல பல சோலி இருக்கும் என்று இரக்கப்பட்ட பிக்பாஸ் கால்கட்டிலிருந்து விடுதலை கொடுத்து தீர்ப்பளித்தார்.
நேரம் மதியம் இரண்டு மணி என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது சிநேகன் கோலம் போடுவதைக் காட்டினார்கள். சேவல் கூவும்போதுதான் கோலம் போடுவாங்க…
சேவலை அடிச்சு கொழம்பு வச்சு சாப்பிடுற மத்தியான வேளையில ஏன் இவரு கோலம் போடுறாரு. இறுதி நாளை எட்ட இன்னும் 10 நாள் இருக்கிறது என்பதைக் குறிக்கும் வகையில் 10 என்று வாசலில் எழுதினார்.
இனி ஒவ்வொரு நாளும் கவுண்டவுன் போல இப்படியே கோலம் போடுவார்கள் போல. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலரில் போடலாம் என்று வேற முடிவு செய்தார்கள். பக்கத்துல பிந்து சிகப்புகலர் ட்ரெஸ் செமயாக இருந்தார்.
தெரியாமதான் கேக்குறேன் 10னு எழுதுறது பெரிய கம்ப சூத்திரமா அதை சிநேகன் தான் போடணுமா? ஏன் பக்கத்துல இருந்த பிந்துகிட்ட கொடுத்து போட சொன்னாதான் என்னவாம்.
உடனே ‘ஏன் காலம் காலமாக பெண்கள்தான் கோலம் போடவேண்டுமா? ஏய் ஆணாதிக்கவாதியே..!’ என்று பாயாதீர்கள்.
கோலம் போடுவது என்ற கவித்துவமான காட்சியில் ரசனை சேர்க்காமல் கவிஞரின் தாடி குத்துதேன்னு சொன்னேன்.
அதுவுமில்லாமல் வரவர ரொம்பவும் சளிப்பூட்டும் டாஸ்க்குகளாக வந்துகொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற சில காட்சிகள்தான் மோட்டிவேசனாக இருக்கும்.