அந்த வீடியோ காட்சியில் சிரிய ஜனாதிபதி பஹார் அல் அஸாத்தின் அரசாங்கத்தைச் சேர்ந்த படைவீரர் ஒருவர் தலையை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தனது இறுதி செய்தியை தனது பின்வாங்கிச் சென்றுள்ள சகாக்களுக்கு அனுப்புவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்.
ஒரு கையில் கூர்மையான கத்தியொன்றை வைத்திருக்கும் போராளியொருவர் தம்மால் கைதியாக பிடிக்கப்பட்ட படைவீரர் ஒருவரின் கழுத்தை அழுத்திப் பிடிக்கிறார்.
அந்த வீடியோ காட்சியில் உள்ளடக்கப்பட்டுள்ள புகைப்படமொன்று கைவிரலில் திருமண மோதிரத்தை அணிந்துள்ள ஐ.எஸ். போராளியொருவர் கைதியாக பிடிக்கப்பட்ட படைவீரரின் கேசத்தை கையொன்றால் பற்றியவாறு அவரது கழுத்தை கத்தியால் வெட்டுவதை வெளிப்படுத்துகிறது.
இராணுவ விமான நிலைய சோதனைச் சாவடியொன்றின் மீது ஐ.எஸ் போராளி குழுவைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரி பீரங்கியொன்றைப் பயன்படுத்தி நடத்திய தாக்குதலில் குறைந்தது 19 பேர் பலியானார்கள்.
போராளிகள் தற்கொலைக்குண்டுத் தாக்குதலொன்றுக்கு பீரங்கியைப் பயன்படுத்தியுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய போராளி லிபியாவைச் சேர்ந்த அபு ஹதிதா அல் லிபி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலின் போது ஐ.எஸ் போராளிகள் இராணுவ விமானத்தளத்திலிருந்த இராணுவ உபகரணமொன்றை கொள்ளையிடுவதை வெளிப்படுத்தும் காட்சியையும் மேற்படி வீடியோ காட்சி உள்ளடக்கியுள்ளது.