உலகின் அதிவேக ஓட்ட மனிதன் என வர்ணிக்கப்படும் ஹூசைன் போல்ட் மூன்றாவது முறையாக தொடர்ந்து 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.
இவர் 2008 மற்றும் 2012 ஒலிம்பிக் போட்டிகளிலும் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்க வென்று சாதனை படைத்தார்.
இவர் ரியோ டி ஜெனிரோவில் இம்முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 9.81 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.