ilakkiyainfo

ilakkiyainfo

117 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி

117 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி
May 25
18:27 2018

பெங்களூரு: கர்நாடக சட்டப் பேரவையில் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், ஹெச்.டி.குமாரசாமி தலைமையிலான மஜத – காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவாக 117 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானத்தை குமாரசாமி முன்மொழிந்தார்.

அப்போது, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், 117 எம்எல்ஏக்கள் குமாரசாமிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பின்னணி: கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை பலம் எந்த அரசியல் கட்சிக்கும் கிடைக்கவில்லை. பாஜக அதிக இடங்களில் வென்றதால், சட்டப் பேரவை பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடியூரப்பாவை ஆட்சியமைக்கும்படி ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார்.

இதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். எனினும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், அதற்கு முன்னதாக தனது பதவியை எடியூரப்பா ராஜிநாமா செய்தார்.

இதன்பின்னர், மஜத – காங்கிரஸ் கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, கர்நாடக முதல்வராக குமாரசாமி புதன்கிழமை மாலை பதவியேற்றார். துணை முதல்வராக காங்கிரஸ் மாநில தலைவர் ஜி. பரமேஸ்வர் பதவியேற்றார்.

சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க குமாரசாமிக்கு ஆளுநர் வஜுபாய் வாலா 15 நாள் அவகாசம் அளித்திருந்தார்.

எனினும், தனக்கு 15 நாள் அவகாசம் தேவையில்லை; கூடிய விரைவில் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவேன் என்று குமாரசாமி குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், புதிய அரசு மீது 25ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கர்நாடக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை பகல் 12.15 மணிக்கு கூடியது.

இக்கூட்டத்தில், முதலாவதாக பேரவைத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. அதில், கர்நாடக சட்டப்பேரவைத் தலைவராக மஜத – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை பிற்பகலில் முதல்வர் குமாரசாமி முன்மொழிந்தார்.

பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 117 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதையடுத்து, குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களிக்கும்படி, தங்கள் கட்சி எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம் பேசலாம் என்று மஜதவும், காங்கிரஸும் சந்தேகித்தன.

இதனால், அந்த 2 கட்சிகளும், தங்கள் கட்சி எம்எல்ஏக்களை ஹோட்டல்களில் கடந்த 9 நாள்களாக பாதுகாப்பாக தங்க வைத்திருந்தனர்.

தும்லூரில் உள்ள பிரபல 5 நட்சத்திர ஹோட்டலில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களும், பெங்களூரில் உள்ள பிரபல ஹோட்டலில் மஜத எம்எல்ஏக்களும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

எம்எல்ஏக்களை சந்தித்துப் பேசுவதற்கு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட யாருக்கும் அனுமதியளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு மட்டுமே மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இதில் பெரும்பான்மைக்கு 112 உறுப்பினர்களின் ஆதரவே போதுமானது. எனினும், குமாரசாமிக்கு ஆதரவாக 117 எம்எல்ஏக்கள் வாக்களித்துள்ளனர்.

Related Articles

1 Comment

  1. priya
    priya May 26, 23:04

    முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது எம்.பி.யாகவும் இருக்கிறார். பிரபல தமிழ், கன்னட நடிகை குட்டி ராதிகாவை சில ஆண்டுகளுக்கு முன் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் இவர். இதைத் தொடர்ந்து யார் கண்ணிலும் படமாமலிருந்து குட்டி ராதிகா, கடந்த ஆண்டு, குழந்தையோடு பெங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கினார். குழந்தையின் தந்தை குமரசாமிதான் என பகிரங்கமாக அறிவித்தார். இதனை குமாரசாமியும் ஒப்புக் கொண்டார். முதல் மனைவி இருக்கும்போதே குட்டி ராதிகாவுடன் திருமணம் இந்த நிலையில், குமாரசாமி மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பெங்களூரை சேர்ந்த வக்கீல் சசிதார் பெலகும்பா வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில், “ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி, நடிகை குட்டி ராதிகாவை 2-வதாக திருமணம் செய்து உள்ளார். அவரது முதல் மனைவி அனிதா உயிருடன் இருக்கும்போதே ராதிகாவை 2-வதாக மணம் முடித்துள்ளார். ராதிகா ஊடகத்தில் தெரிவித்ததன் மூலம் அவருக்கும், குமாரசாமிக்கும் இடையேயான திருமணம் உறுதியாகி உள்ளது. மேலும் குமாரசாமிக்கு ராதிகா மூலம் குழந்தை ஒன்றும் உள்ளது. குமாரசாமி இந்து மதத்தை சேர்ந்தவர். அவர் 2-வது திருமணம் செய்தது சட்ட விரோதமானது ஆகும். எம்.பி. பதவி தகுதியிழப்பு செய்ய வேண்டும் எனவே குமாரசாமியின் எம்.பி. பதவியை தகுதியிழப்பு செய்ய பாராளுமன்ற சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும். ஒவ்வொரு இந்திய குடிமகனும் சமமாக நடத்தப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது பிரிவு சட்டம் ஒவ்வொருவருக்கும் சமமாக பொருந்தும் என்று தெளிவாக கூறுகிறது. எனவே குமாரசாமியின் பதவியை தகுதியிழப்பு செய்ய பாராளுமன்ற சபாநாயகருக்கு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்று கூறியிருந்தார்.

    Read more at: https://tamil.oneindia.com/news/2012/04/10/india-secret-marriage-with-kutty-radhika-aid0136.html

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News