ilakkiyainfo

ilakkiyainfo

கோத்­த­பாய மீது வழக்கு தொடர்­வ­தற்கு இதுவே நல்­ல­தொரு சந்­தர்ப்­ப­மாகும் யஸ்மின் சூக்கா கூறு­கின்றார்

கோத்­த­பாய மீது வழக்கு தொடர்­வ­தற்கு இதுவே நல்­ல­தொரு சந்­தர்ப்­ப­மாகும்  யஸ்மின் சூக்கா கூறு­கின்றார்
April 11
11:16 2019

சித்­தி­ர­வதை செய்­வ­தற்­கான உத்­த­ர­வுகள் அனைத்தும் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வினால் வழங்­கப்­பட்­ட­தென உண்மை மற்றும் நீதிக்­கான அமைப்பின் பணிப்­பாளர் யஸ்மின் சூக்கா தெரி­வித்­துள்ளார். கோத்­த­பா­ய­வுக்கு எதி­ராக அமெ­ரிக்­காவில் வழக்கு தாக்கல் செய்­த­மையை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று லண்­டனில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்­றது.

குறித்த ஊடக சந்­திப்பில் வழக்­கினை தாக்கல் செய்த ரோய் சமா­தானம் மற்றும் பிர­பல சட்­டத்­த­ரணி ஸ்கொட் கிள்­மரே ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளி­யிட்ட யஸ்மின் சூக்கா,

முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ மீது தற்­போது நாம் வழக்கு தொடர்­வ­தற்கு இது சிறந்த சந்­தர்ப்­ப­மாக காணப்­ப­டு­கின்­றது.

ஏனென்றால் சித்­தி­ர­வதை செய்­வ­தற்­கான உத்­த­ரவு மற்றும் கட்­ட­ளைகள் அனைத்தும் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வினால் வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த செயற்­பா­டு­க­ளுக்கு கோத்­த­பாய சட்­ட­பூர்­வ­மாக பொறுப்­பு­கொண்­டவர்.

பாது­காப்புப் படை­யி­னரின் கட்­டுப்­பாட்டை மைய­மாகக் கொண்­டி­ருந்­த­தாக பல ஆண்­டு­க­ளாக கோத்­த­பாய தனது பகி­ரங்க அறிக்­கை­களில் தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார்.

இந்த சம்­ப­வங்கள் ஐ.நா. சபை­யினால் ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்டு அறி­விக்­கப்­பட்­ட­துடன் இலங்கை அர­சாங்கம் இந்த குற்­றச்­சாட்­டுக்­களை மீண்டும் மீண்டும் எதிர்­கொண்­டது.

பாது­காப்புச் செய­லாளர் என்ற ரீதியில் இந்த முறை­கே­டுகள் நடை­பெற்­றதா அல்­லது சரி­யான முறை­யி­லேயே செயற்­பட்­டார்­களா என நன்கு அறிந்­தி­ருந்தார்.

ஆனால் அவர் குற்­ற­வா­ளி­களை விசா­ரணை செய்ய அல்­லது தண்­டிக்க சட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை.

எனவே தற்­போது முன்னாள் பாது­காப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவில் இருக்கும் தருணத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளது” என மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News