Weather , , 0°C

ilakkiyainfo

அமெரிக்க காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைத் தலை பாம்புக்குட்டி

அமெரிக்க காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைத் தலை பாம்புக்குட்டி
September 07
21:11 2019

இரண்டு தலைகளை உடைய விரியன் பாம்புக் குட்டி ஒன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதி ஒன்றில் தென்பட்டுள்ளது. இரட்டைத் தலைப் பாம்புகளைப் பார்ப்பது அரிதினும் அரிதாகவே நிகழும்.

நச்சுத் தன்மை கொண்ட அந்தப் பாம்புக் குட்டிக்கு இரண்டு தலைகள், இரண்டு நாக்குகள் மற்றும் நான்கு கண்கள் உள்ளன. இரண்டு தலைகளும் ஒன்றோடு ஒன்றாக இல்லாமல் தனித்தனியாக இயங்குகின்றன.

‘டபுள் டேவ்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பாம்புக் குட்டி ஹெர்படோலாஜிக்கல் அசோசியேட்ஸ் எனும் சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்பில் உள்ளது.

சூழலியலாளர் டேவ் ஷ்னைடர் மற்றும் அவரது நண்பர் டேவிட் ஆகஸ்டு 25 அன்று பைன் பேரன்ஸ் எனும் காட்டுப் பகுதியில் விரியன் பாம்பு ஒன்று குட்டி போடுவதை கண்காணிக்கச் சென்றபோது, இந்த இரட்டைத் தலை பாம்புக்குட்டி பிறந்ததைக் கண்டுபிடித்தனர்.

இவர்கள் இருவரின் பெயரை ஒட்டியே அந்தப் பாம்புக்கு டபுள் டேவ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் பாம்பு காட்டுக்குள் தானாகவே வாழ்வது மிகவும் கடினமானது என்கிறார் டேவ் ஷ்னைடர்.

_108635478_14234b02-7cad-421a-b812-a661b10ca2f5  அமெரிக்க காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைத் தலை பாம்புக்குட்டி 108635478 14234b02 7cad 421a b812 a661b10ca2f5 e1567890620195வேட்டை விலங்குகளிடம் இருந்து இந்தப் பாம்புக்குட்டி தப்ப முயன்றால் தலைகள் ஒன்றுடன் ஒன்றாக மோதலாம் என்பதால் இவை தப்பித்து உயிர் வாழ்வது கடினம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒரே கருவில் இருந்து வளர்ந்து இரண்டாகப் பிரிவதைப் போலவே இரட்டைத் தலை பாம்புகளும் கருவில் உருவாகின்றன என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

இந்த அரிய பாம்பைத் தாங்கள் வைத்துப் பராமரிக்க அந்த சூழலியல் அமைப்பினர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுள்ளனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்