ilakkiyainfo

ilakkiyainfo

கொழும்பு உணவகத்தில் தமிழ் பேசக்கூடாது என அறிவிப்பு – காரணம் என்ன?

கொழும்பு உணவகத்தில் தமிழ் பேசக்கூடாது என அறிவிப்பு – காரணம் என்ன?
October 30
06:22 2019

தமிழ் மொழியில் உரையாட கொழும்பிலுள்ள உணவகமொன்று அதன் ஊழியர்களுக்கு தடை விதித்துள்ள சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

கொழும்பு 7 ஹொர்ட்டன் பிளேஷ் பகுதியில் உள்ள உணவகமொன்றில் தமிழ் மொழியில் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.

”அனைத்து ஊழியர்களும் கட்டாயமாக ஆங்கிலம் மற்றும் சிங்களம் மாத்திரமே பேச வேண்டும். தமிழ் மொழியில் பேசக்கூடாது”என அறிவித்தல் பலகையொன்றின் ஊடாக உணவகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து, இலங்கை வாழ் தமிழர்கள் பல்வேறு எதிர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குறித்த உணவகம் இந்த அறிவிப்பு விடுத்தமைக்கான காரணத்தை தெளிவூட்டியுள்ளது.

இந்த அறிவித்தலின் ஊடாக தவறாக புரிதலை ஏற்படுத்தியுள்ளமைக்காக பொதுமக்களிடம் மன்னிப்புக்கு கேட்பதாக அந்த உணவகத்தின் நிர்வாகம் கூறியுள்ளது.

ஊழியர்கள் தமிழ் மொழியில் பேசுகின்றமையினால், வாடிக்கையாளர்களை கேலி செய்வதை போன்று உள்ளதாக, வாடிக்கையாளர்களினால் புகார் அளிக்கப்பட்டதாக அந்த உணவகம் சுட்டிக்காட்டியுள்ளது.

_109456543_mano-ganeshan01

விசாரணைக்கு உத்தரவு – மனோ கணேசன்

கொழும்பிலுள்ள உணவகம் ஒன்றில் தமிழ் மொழி பேசக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மனோ கணேசன், அரச கரும மொழிகள் ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன் தனது டுவிட்டர் தளத்தில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

_109456713_6a9b818e-bec1-4df4-9f4f-b4d959953bbcகொழும்பில் உணவகமொன்றில் தமிழ் மொழி பேசக்கூடாது என செய்யப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் உடனடி விசாரணைகளை நடத்தி அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சமத்துவத்திற்கான உரிமையை மீறியோர் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2020
M T W T F S S
« Mar    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

Planned to Sumathrithan, but Sri Lankan Goverment saved him , and he had promissed to [...]

Its a planned accident by Lyca , to get insurance, if they do same again [...]

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News