அதுவாக மாறா விட்டாலும் கூட பெண்களே புது பேஷனை களம் இறக்கி களேபரப்படுத்தி விடுவார்கள். சேரனின் ஆட்டோகிராப் படம் வெளியான புதிதில் அதில் கோபிகா கட்டியிருப்பது போன்ற உயிரெழுத்துக்கள் டிசைன் போட்ட சேலைகள் பிரபலமாக விற்றது நினைவிருக்கலாம்.
அதில் பெண்மணி ஒருவர் சேலை கட்டியபடி செல்போனில் படு ஸ்டைலாக பேசிக் கொண்டிருக்கிறார். அவரது சேலையைப் பார்த்தால் செம வித்தியாசமாக இருக்கிறது.
அதாவது வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர், யாஹு மெயில் ஜி மெயில் என இணையதள கலக்கல்களின் சிம்பல்கள் வரையப் பட்டுள்ளன. ஏற்கனவே, பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் சிம்பல் வரையப்பட்ட கைப்பைகள்.
செருப்பு மற்றும் ஆபரணங்கள் சந்தையில் விற்கப் படுகின்றன. இந்நிலையில், புது வரவாக இந்த சேலையும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.
எந்நேரமும் பேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைதளப் பக்கத்தில் மூழ்கி இருப்பவர்களுக்கு நிச்சயம் இந்த சேலை பிடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. நியூசை படிச்சுட்டு எங்கங்க கிளம்பிட்டீங்க….? ஓ, அந்த சேலையை வாங்குறதுக்கா…. !