“வரலட்சுமி என் பொக்கிஷம்!”விஷால், பேக் டு ஃபார்ம்; ‘ஆம்பள’, ‘சண்டக்கோழி-2’ எனத் திமிறுகிறார். சரத்தோடு நடிகர் சங்க சண்டை, வரலட்சுமியோடு காதல்(!) என விஷாலைச் சுற்றி எத்தனை சர்ச்சைகள். அவரிடமே கேட்டுவிடலாமே… ” ‘பாண்டிய நாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’னு கான்செப்ட் சினிமா பண்ணீங்க.
இப்போ திரும்ப ஃபார்முலா கமர்ஷியலுக்கே வந்துட்டீங்களா?” ”ரெண்டுக்கும் கதாபாத்திரம்தான் வித்தியாசம். ‘பாண்டிய நாடு’ நான் பண்ணாத கேரக்டர்; ‘நான் சிகப்பு மனிதன்’ யாருமே பண்ணாத கேரக்டர்; ‘பூஜை’யில் பக்கத்து வீட்டுப் பையன் கேரக்டர்… அவ்வளவுதான் வித்தியாசம். மத்தபடி எல்லா படங்களும் எனக்கு கமர்ஷியல்தான்.”
”நடிகர் சங்கக் கட்டடத்துக்காக உங்க ஃப்ரெண்ட்ஸ் நாலு பேரோடு சேர்ந்து நடிக்கிறேன்னு சொல்லியிருந்தீங்களே… என்னாச்சு?” ”நாங்க இப்பவும் ரெடி. நாங்க சேர்ந்து நடிச்சா படம் நல்லா வரும்; நல்ல வசூல் கிடைக்கும். அதான் அப்படி ஒரு ஐடியா கொடுத்தோம். ஆனா, நடிகர் சங்கத் தலைவர்தான் இறுதி முடிவு எடுக்கணும்.” ”நடிகர் சங்கத். .
ஆமையும் முயலும் – குகுக்கூக்குகு பாடல் வீடியோ!
Tevar – Madamiyan Official Full Song Video