ilakkiyainfo

ilakkiyainfo

2018 நோபல் அமைதி பரிசுக்கு டெனிஸ் முக்வேகய், நடியா முராத் தேர்வு: வன்புணர்வு எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள்

2018 நோபல் அமைதி பரிசுக்கு டெனிஸ் முக்வேகய், நடியா முராத் தேர்வு: வன்புணர்வு எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள்
October 05
19:48 2018

2018ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வன்புணர்வை ஒரு போர்க் கருவியாக பயன்படுத்துவதற்கு எதிரான செயற்பாட்டாளர் நடியா முராத் மற்றும் டெனிஸ் முக்வேகய் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த இருவரும் பாலியல் வன்புணர்வுக் குற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமானவர்கள் என்று நோபல் பரிசுக் குழுவின் தலைவர் பெரிட் ரெய்ஸ்-ஆண்டர்சன் தெரிவித்தார்.

யாசிதி சமூகத்தைச் சேர்ந்தவரான நடியா முராத் ஐ.எஸ். குழுவினரால் கொடுமைப்படுத்தப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளானவர்.

டெனிஸ் முக்வேகய் காங்கோ நாட்டைச் சேர்ந்த பெண் நலவியல் மருத்துவர். இவர் வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துவருகிறார்.

மதிப்புக்குரிய நோபல் அமைதிப் பரிசுக்கு இந்த ஆண்டு தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் அடங்கிய 331 பெயர்கள் முன்மொழியப்பட்டன. வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் நார்வே தலைநகர் ஓஸ்லோவில்

_103725439_gettyimages-459604766  2018 நோபல் அமைதி பரிசுக்கு டெனிஸ் முக்வேகய், நடியா முராத் தேர்வு: வன்புணர்வு எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் 103725439 gettyimages 459604766டெனிஸ் முக்வேகய்

காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள முக்வேகய்யும் அவரது சகாக்களும் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். போர் நிகழ்வுகளில் நடத்தப்படும் வன்புணர்வால் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இவர்கள் ஒரு நிபுணத்துவத்தை வளர்த்தெடுத்துள்ளனர்.

_103725433_gettyimages-541940924  2018 நோபல் அமைதி பரிசுக்கு டெனிஸ் முக்வேகய், நடியா முராத் தேர்வு: வன்புணர்வு எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் 103725433 gettyimages 541940924நடியா முராத்

2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐ.எஸ். பிடியில் இருந்து தப்பிவந்த நடியா முராத் யாசிதி சமூக மக்களை விடுதலை செய்வதற்கான, ஆள் கடத்தலை தடுப்பதற்கான இயக்கத்தின் முகமாக ஆகியுள்ளார்.

இந்த வாரத் தொடக்கத்தில் 2018ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு கனடாவை சேர்ந்த டோன்னா ஸ்ட்ரிக்லேண்டுக்கு அறிவிக்கப்பட்டது.

இதுவரை இயற்பியலுக்கு நோபல் பரிசு பெறும் மூன்றாவது பெண் இவர். கடந்த 55 ஆண்டுகளில் முதல் முறையாக இயற்பியல் நோபல் பரிசு பெற்றவரும் இவரே.

அமெரிக்காவின் ஆர்தர் அஷ்கின் மற்றும் பிரான்சின் ஜெரார்ட் மொரூ ஆகியோருடன் இணைந்து டோன்னா ஸ்ட்ரிக்லேண்ட் இந்தப் பரிசைப் பெற்றார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

இவர் ஒரு பிற்போக்குவாதி , கோழை அதனால் தான் இப்படி சொல்கின்றார் , எவருக்கும் எந்த [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

உண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News