ilakkiyainfo

ilakkiyainfo

2,185 போர் விமானங்கள்; 42 லட்சம் வீரர்கள்… இந்திய ராணுவத்தின் வலிமை!

2,185 போர் விமானங்கள்; 42 லட்சம் வீரர்கள்… இந்திய ராணுவத்தின் வலிமை!
February 27
03:48 2019

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியபோது 4 மணிநேரம் தாக்குதல் நடத்தியதாகச் செய்திகளை வெளியிட்டது இந்திய பாதுகாப்புத் துறை.

ஆனால் இன்று நடந்த பதிலடி தாக்குதலுக்கு இந்திய விமானப் படை வெறும் 21 நிமிடங்களே எடுத்துக் கொண்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி, அதிகாலை 12:30 மணி. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சுமார் 2 கி.மீ. தூரம் ஊடுருவி ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ எனப்படும் போர் நடத்தி 38 பயங்கரவாதிகளைக் கொன்றது இந்திய ராணுவம்.

செப்டம்பர் 18, 2016 அன்று இந்தியாவிற்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கான பதிலடியே இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்.

அதேபோல மற்றுமொரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை இன்று அதிகாலை 3:30 மணியளவில் நடத்தியுள்ளது இந்திய விமானப் படை. இரு வாரங்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் – போர் விமானம்

இந்திய ராணுவம் 2016-ம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியபோது, நான்கு மணிநேரம் தாக்குதல் நடத்தியதாகச் செய்திகள் வெளியாகின.

ஆனால் தற்போது நடத்தப்பட்டுள்ள பதிலடித் தாக்குதலுக்கு இந்திய விமானப்படை வெறும் 21 நிமிடங்களையே எடுத்துக் கொண்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

12 மிரஜ் ரக போர் விமானங்களில் சுமார் 1,000 கிலோ வெடிகுண்டுகள் கொண்டு இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி தெரிவித்துள்ளது.

மேலும் மூன்று இடங்களில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது. பாகிஸ்தானின் பாலகோட் (Balakot) பகுதியில் அதிகாலை 3:45 மணியிலிருந்து 3:53 மணிக்குள்ளாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாஃபராபாத்தில் (Muzaffarabad) அதிகாலை 3:48 மணியிலிருந்து 3:55 மணிக்குள்ளாகவும், சக்கோட்டி (Chakothi) பகுதியில் 3:58 மணி முதல் 4:04 மணிவரையிலும் இந்திய விமானப்படையின் தாக்குதல்கள் அரங்கேறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பதிலடி தாக்குதலுக்குப் பொதுமக்கள் தரப்பிலும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் மத்திய அரசுக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் சர்ஜிக்கல் ஸ்டிரைக்-2, இந்தியன் ஏர் ஃபோர்ஸ், இந்தியா ஸ்டிரைக்ஸ் பேக், ஜெய்ஹிந்த், ஏர் ஸ்டிரைக் என டாப் ட்ரெண்டிங்கை ஆக்கிரமித்துள்ள அனைத்து ஹேஷ்டேக்குகளும் விமானப்படையின் தாக்குதல் சம்பந்தமானவைதான்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்குப் பிறகு அதிகளவு படை பலமும் ஆயுத பலமும் கொண்ட உலகின் நான்காவது வலிமையான ராணுவத்தைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது இந்தியா.

இந்திய ராணுவத்தின் படை பலத்தைக் கீழுள்ள இன்ஃபோகிராபிக்ஸில் காணலாம்…

இந்திய ராணுவம்

Indian_Army_(2)_13469 2,185 போர் விமானங்கள்; 42 லட்சம் வீரர்கள்... இந்திய ராணுவத்தின் வலிமை! 2,185 போர் விமானங்கள்; 42 லட்சம் வீரர்கள்... இந்திய ராணுவத்தின் வலிமை! Indian Army 2 13469 e1551239184630

Related Articles

1 Comment

  1. arya
    arya February 27, 20:21

    எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி கூடடத்திடம் அவமானகர தோல்வியை கண்டு விடடாள் போதும் என்று குண்டியில் கால் பட இந்தியாவுக்கு ஓடிய இந்திய ராணுவம் பாகிஸ்தானை வெல்லும் என்பது மிக பெரிய நகைசுவை , இது ஒன்றும் 1970 ஆண்டு அல்ல.

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

0 comment Read Full Article
    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

0 comment Read Full Article

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News