ilakkiyainfo

ilakkiyainfo

33ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா: இரண்டாம் நாள் மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகளில் வட மாகாணத்திற்கு 4 தங்கம் உட்பட 7 பதக்கங்கள்

33ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா: இரண்டாம் நாள் மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகளில் வட மாகாணத்திற்கு 4 தங்கம் உட்பட 7 பதக்கங்கள்
October 13
16:57 2017

 

திய­கம மஹிந்த ராஜ­பக் ஷ விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் 33ஆவது அகில இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டு விழா மெய்­வல்­லுநர் போட்­டி­களின் இரண்டாம் நாளான நேற்­றைய தினம் வட மாகாண பாட­சா­லை­க­ளுக்கு 4 தங்கப் பதக்­கங்கள், இரண்டு வெள்ளிப் பதக்­கங்கள், ஒரு வெண்­கலம் உட்­பட 7 பதக்­கங்கள் கிடைத்­தன.

18 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான உயரம் பாய்­தலில் தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூ­ரியின் சந்­தி­ர­கு­மாரன் ஹெரீனா 1.58 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்­கத்தை வென்றார்.

இதே வயதுப் பிரிவில் ஈட்டி எறி­தலில் 37.33 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த சாவ­கச்­சேரி இந்து கல்­லூ­ரியின் சந்­தி­ர­சே­கரன் சங்­கவி தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார்.

20 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான  கோலூன்றிப் பாய்­தலில் அள­வெட்டி அரு­ணோ­தயா கல்­லூ­ரியின் பவா­னந்தன் சாத்­விகா 3.00 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார்.

இதே பிரிவில் சாவ­கச்­சேரி இந்து கல்­லூ­ரியின் பால­சுப்­பி­ர­ம­ணியம் கிரிஜா 2.85 மீற்றர் உயரம் தாவி வெண்­கலப் பதக்­கத்தை வென்றார்.

20 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் அள­வெட்டி அரு­ணோ­தயா கல்­லூ­ரியின் நெப்­தலி ஜொய்சன் (4.40 மீற்றர்) தங்கப் பதக்­கத்­தையும், தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூ­ரியின் எஸ். டிலக்ஷன் (4.20 மீற்றர்) வெள்ளிப் பதக்­கத்­தையும் வென்­றனர்.

16 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான பரி­தி­வட்டம் எறிதல் போட்­டியில் இம­யானன் அர­சினர் தமிழ் கலவன் பாட­சா­லையின் எம். சிவ­சயன் 47.89 மீற்றர் தூரத்தைப் பதி­வு­செய்து வெள்ளிப் பதக்­கதை வென்றார்.

இது இவ்­வா­றி­ருக்க, இரா­ஜ­கி­ரிய கேட்வே சர்­வ­தேச பாட­சா­லையைச் சேர்ந்த சதீப்பா ஹெண்­டர்சன் 16 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான இரண்டு நிகழ்ச்­சி­களில் தங்கப் பதக்கம் வென்­றுள்ளார்.

முதலாம் நாளன்று நடை­பெற்ற நீளம் பாய்தல் போட்­டியில் 5.66 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்ற அவர், 100 மீற்றர் ஓட்டப் போட்­டியை 12.67 செக்­கன்­களில் நிறைவு செய்து இரண்­டா­வது தங்கப் பதக்­கத்தை வென்றார்.

20 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான 100 மீற்றர் ஓட்டப் போட்­டியில் நீர்­கொ­ழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்­லூ­ரியின் சானுக்க சந்­தீப்ப (10.89 செக்.) தங்கப் பதக்கத்தையும், நிக்கவெரெட்டிய அன்புக்குளம் முஸ்லிம் மகா வித்தி யாலயத்தின் ஏ.எஸ்.எம். சப்ரான் (10.96 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் வென் றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

உண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]

bis

திருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது. ச்ட்டாபூர்வமில்லாத ஒப்பந்தம் தானாகவே வலுவற்றதாகி விடுகின்றது. Legally not bound. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News