ilakkiyainfo

ilakkiyainfo

நீர்க்கொழும்பு பகுதியில் 402 செல்பேசிகளுடன் இயங்கிய சட்டவிரோத தகவல் தொடர்பு மையம் (படங்கள் இணைப்பு)

நீர்க்கொழும்பு பகுதியில் 402 செல்பேசிகளுடன் இயங்கிய சட்டவிரோத தகவல் தொடர்பு மையம் (படங்கள் இணைப்பு)
June 07
15:15 2019

நீர்கொழும்பு பகுதியில் மிக சூட்சமமான முறையில் நடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் தொடர்பாடல் நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத தொடர்பாடல் நிலையம் இன்று முற்றுகையிடப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

நீர்கொழும்பு – ஏத்துகால பகுதியிலுள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் சிலர் இருப்பதாக, போலீஸ் விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பொன்றின் போதே இந்த தொடர்பாடல் நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சட்டவிரோத தொடர்பாடல் நிலையத்திலிருந்து சீன பிரஜையொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சட்டவிரோத தொடர்பாடல் நிலையத்திலிருந்து 402 அதிநவீன கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அந்த கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்படும் சந்தர்ப்பத்தில் அனைத்து கையடக்கத் தொலைபேசிகளிலும் டேடா (இணைய வசதி) செயற்படுத்தப்பட்டிருந்ததாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், குறித்த வீட்டிலிருந்து பல்வேறு தொலைபேசி நிறுவனங்களுக்கு சொந்தமான செயற்படுத்தப்பட்ட 17,421 தொலைபேசி சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

nee3 402 ஐபோன்,17,400 சிம் காட்கள், 60 ரௌட்டர்கள் நீர்கொழும்பில் மீட்பு (படங்கள் இணைப்பு) நீர்க்கொழும்பு பகுதியில் 402 செல்பேசிகளுடன் இயங்கிய சட்டவிரோத தகவல் தொடர்பு மையம் (படங்கள் இணைப்பு) nee3

அதேபோன்று 60 ரவுட்டர்ஸ்களும், 3 மடிக்கணினிகளும் உள்ளிட்ட மேலும் பல்வேறு தொலைத் தொடர்பு சாதனங்கள் பல கைப்பற்றப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

கைது செய்யப்பட்டவர்களிலுள்ள சீன பிரஜைக்கு, விஸா மற்றும் கடவுச்சீட்டு ஆகியன இல்லாமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சட்டவிரோத தொலைத்தொடர்பு நிலையமாக இதனை கருத்தில் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டவிரோதமான முறையில் தொலைத்தொடர்பு நிலையமொன்றை நடாத்தி சென்றதன் ஊடாக, இலங்கைக்கு கிடைக்க வேண்டிய பெருந்தொகை வருமானத்தை கொள்ளையிட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

குறித்த பகுதிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம், தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகள் அழைக்கப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ள அதேவேளை, மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

nee1 402 ஐபோன்,17,400 சிம் காட்கள், 60 ரௌட்டர்கள் நீர்கொழும்பில் மீட்பு (படங்கள் இணைப்பு) நீர்க்கொழும்பு பகுதியில் 402 செல்பேசிகளுடன் இயங்கிய சட்டவிரோத தகவல் தொடர்பு மையம் (படங்கள் இணைப்பு) nee1

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News