ilakkiyainfo

ilakkiyainfo

80கோடி ரூபாய் கொடுக்காமல் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஏமாற்றிய எமில்காந்தன்??

80கோடி ரூபாய்  கொடுக்காமல்   விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை  ஏமாற்றிய  எமில்காந்தன்??
September 09
09:13 2016

எமில்காந்தன் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ரூபா 80 கோடி கொடுக்காமல் ஏமாற்றி விட்டான் என்று தெரிய வருகிறது.

சென்ற 2005ஆம் ஆண்டு  நவம்பர் 19ம் திகதி  நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு, மகிந்த ராஜபக்ஸ தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்த தேர்தலுக்கு முன் ரூபா 18 கோடியும், தேர்தலுக்கு பின் ரூபா 80 கோடியும் புலிகளுக்கு வழங்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

இவ்வாறு வழங்கப்பட்ட பணம் எமில் காந்தன் என்று அழைக்கப்படும் அன்ரன் சமால் லக்ஸ்மி கண்ணன் எனும் பெயர் உடைய வவுனியாவைப் பிறப்பிடமாகவும் கொண்டவரிடம்; வழங்கப்பட்டது.

நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழ் மக்கள் ஜக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்ப்பாளரான ரணில் விக்கிரமசிங்காவுக்கு வாக்களிப்பார்கள் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டது.

அவ்வாறு நடக்கும் என்று அன்றைய நிலையில் நம்பகத்தக்க வட்டாரங்கள் எல்லாம் உறுதிப்படுத்தின.

இவ்வாறு தமிழ் மக்கள் ரணில்விக்கிரமசிங்காவுக்கு வாக்களித்தால் மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் படு தோல்வி அடைந்து விடுவார் என்பது வெள்ளிடைமாலை.

எனவே தமிழ் மக்களை வாக்களிக்காமல் பண்ணுவதற்கான நடவடிக்கைகளை மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் குழுவினர் திட்டம் போட்டார்கள்.

அந்த திட்டத்தின் படி வடக்கு கிழக்கு மாகாண மக்களை வாக்களிக்காமல் நிற்பாட்டக்கூடிய ஒரே ஒரு சக்தி வாய்ந்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்தான் என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

srilankaஅதையடுத்து, இது சம்பந்தமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு ரிறான் அலஸ் மூலமாக தமிழீழ விடுதலைப்புலிகளை சேர்ந்த எமில் காந்தனை அறிமுகம் செய்தார்கள்.

எமில் காந்தன் – பசில் ராஜபக்ஸ  சந்திப்பு ரிறான் அலஸ் காரியாலயத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது வடக்கு மாகாண தமிழ் மக்கள் யாரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க கூடாது அதற்கான ஒழுங்குகளை செயற்படுத்துமாறு பசில் ராஜபக்ஸ கேட்டதாக தெரியவருகிறது.

அந்த கோரிக்கையை அடுத்து ,எமில் காந்தன் தனது காரியாலயத்தை விட்டு வெளியில் சென்று தொலைபேசியில் யாருடனோ தொடர்பு கொண்டதாக தெரிய வருகின்றது.

சுமார் அரை மணியில் இருந்து நாற்பத்தைந்து நிமிடத்திற்கு பின்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் உதவி செய்ய இணங்கியுள்ளதாக எமில் காந்தன் பசில் ராஜபக்ஸவுக்கு தெரிவித்ததாக தெரிகிறது.

எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் வேகமாக செல்லும் வள்ளம் வாங்குவதற்கு பணம் வேண்டும் என்றும் இதற்து ரூபா 18 கோடி வேண்டும் என விடுதலைப் புலிகளின் தலைவர் கூறியதாக எமில் காந்தன் பசில் ராஜபக்ஸவிடம் கூறினான்.

அதையடுத்து பசில் ராஜபக்ஸ ரூபா 18கோடியை எமில்காந்தனிடம் கொடுத்ததாக தெரிகிறது.

தேர்தல் வென்ற பிற்பாடு விடுதலைப்புலிகளுக்கு கொடுக்க முன்வந்த 2வது கட்ட கொடுப்பனவாக ரூபா 80 கோடி சுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் வீடுகட்டுவதற்கு என்று எமல் காந்தன் உருவாக்கப்பட்ட போலி கம்பனிகளுக்கு வழங்கப்பட்டது.

“ஜெய லங்கா வீட்டுத்திட்டம்” என்ற இந்த  திட்டத்தில் 1200 வீடுகள் திருகோணமலை,  மட்டக்களப்பு,   அம்பாறை, வவுனியா, மன்னார் ஆகிய இடங்களில் கட்டுவது என்றும் இந்த  வீட்டுத் திட்டத்திற்கு   GS Builders & Consultants of 371, Mahavadi lane, VepamKulam, vavuniya எனும் கம்பனி ஆலோசனை வழங்கும் கம்பனியாகவும் தெரிவு செய்யப்பட்டது.

திருகோணமலையில் ஒரு வீடு 500 சதுர அடியில் 400 வீடுகள் கட்டுவதற்கு ரூபா 624,725 தேவை என்றும் BK Holding (pvt) என்ற கம்பனியின் கேள்வி பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதே போல் மட்டக்களப்பில் 500 வீடுகள் கட்டுவதற்கு  Everest Civil Engineering Service  கேள்வி பத்திரம் ஏற்க்கொள்ளப்பட்டது.

1200 வீடுகள் கட்டுவதற்கு மொத்தமாக ரூபா 7,5716,600 பணம் தேவை என முடிவு செய்யப்பட்டது. இந்த கம்பனிகளுக்கு எல்லாம் எமில் காந்தனின் சகோதரர்களும், மைத்துணியும் தான் பங்குதாரர்கள் என்று பின்னர் தெரியவந்துள்ளது.

இந்த கம்பனிகள் வீடுகள் கட்டுவதற்கு என்று மொத்தமாக ரூபா 80கோடி பணம் வழங்கப்பட்டது.

selvan-720x480-300x200  80கோடி ரூபாய்  கொடுக்காமல்   விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை  ஏமாற்றிய  எமில்காந்தன்?? selvanஇந்த பணத்திற்கு என்ன நடந்தது?

இது தான் எம் முன் நிற்கும் கேள்வி. யூன் மாதம் 2006ம் ஆண்டு பணத்தை பெற்றுக் கொண்ட எமில்காந்தன் தமிழீழ விடுதலைப்புலிகளின் கஜானாவிற்கு இந்த பணம் கொடுத்தானா? இல்லையா ?

ஆனால் இந்த பணத்தை பெற்று வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் உளவு படையை சேர்ந்த பலரை வேலுப்பிள்ளை பிரபாகரன் டுபாயில் ஒழிந்திருந்த எமில்காந்தனை கண்டு பணத்தை வாங்கி வருமாறு அனுப்பி வைத்தார். ஆனால் இந்த பணம் கொடுக்கப்பட்டதா? இல்லையா ?

ஏமில்காந்தன் டுபாயில் மிகவும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு மட மாளிகைகளில் இருந்து பணத்தை அள்ளி அள்ளி இறைத்து தமிழ் சினிமா படங்களை தென் இந்தியாவில் தயாரித்து வருவதாக தெரிய வருகிறது.

ஆனால் ரூபா 80கோடி விடுதலைப்புலிகளை சேர்ந்ததா? இந்த பணம் யுத்தத்திற்கு பாவிப்பதற்கான ஆயுதங்கள் கொள்வனவு செய்ய பயன்படுத்தப்பட்டதா? டுபாயில் ஒழிந்து கொண்டு இருக்கும் எமில்காந்தன் இதற்கு பதில் தர வேண்டும்.

இதற்கிடையில்தமிழீழ விடுதலை அமைப்பின் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு எமில் காந்தனுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், செவ்வம் அடைக்கல நாதன் பல முறை டுபாய் சென்று எமில் காந்தனை சந்தித்து அவனுடன் தங்கி இருந்ததாக  செய்திகள் கசிந்துள்ளது.

-தினச்செய்தி-

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2017
M T W T F S S
« Jan    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Latest Comments

நாட்டிற்கு மிகவும் தேவையான விடயம். இதில் பெற்ற அறிவு -"சொந்த வீட்டில திருகுதாளங்கள் செய்ய வேண்டாம்" [...]

சீன ஆசியாவின் பாதுகாவலன் , அவர்களுக்கு இத்தகைய ஆயுதம் அவசியம், ஆனால் கக்கூசு புகழ் நாடு ஆசியாவின் துரோகி, அமெரிக்காவுக்கு [...]

This news good [...]

awesome dance [...]

Who is this bastard to tell to our great Mahinda Rajapakse ? we want Rajapakse [...]

இலங்கை பத்திரிகைகள்

English News