ilakkiyainfo

ilakkiyainfo

Matrimonial-ல் இணையதளம் மூலம் பல ஆண்களை ஏமாற்றியதாக இளம்பெண் உட்பட 3 பேர் கோவையில் கைது

Matrimonial-ல் இணையதளம் மூலம் பல ஆண்களை ஏமாற்றியதாக இளம்பெண் உட்பட 3 பேர் கோவையில் கைது
January 11
14:20 2018

ஜெர்மனியில் பணியாற்றி வரும் சேலம் பொறியாளரிடம், திருமணதகவல் இணையதளம் மூலம் அறிமுகமாகி, 45 லட்சம் ரூபாய் பறித்த புதுமுக நடிகை, வாடகை பெற்றோருடன் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் எடப்பாடியை சேர்ந்தவர் கணினி பொறியாளர் பாலமுருகன். ஜெர்மனியில் பணிபுரிந்து வரும் இவர் மேட்ரிமோனியல் மூலம் திருமணத்துக்கு பெண் தேடி உள்ளார்.

அப்போது பாலமுருகனை பேஸ்புக் மூலமாக தொடர்பு கொண்ட இளம் பெண் தன்னை மைதிலி என்றும், கோவையில் வசிப்பதாகவும் அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.

மேலும் அந்த இளம் பெண் பேஸ்புக் சாட்டிங்கில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பி பாலமுருகனை காதல் வலையில் வீழ்த்தினார் புகைப்படங்களை கண்டு பாலமுருகனும் மைதிலியுடன் தனது தொடர்பை வலுப்படுத்தியதுடன் அவரை திருமணம் செய்து கொள்ளவும் தீர்மானித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கோவை வந்த பாலமுருகன் மைதிலிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.

இதனை பயன்படுத்திக்கொண்ட மைதிலி ஒரு கட்டத்தில் தனக்கு புற்றுநோய் அறிகுறி இருப்பதாக கூறி மருத்துவ செலவிற்கு பணம் வேண்டும் என கூறி பாலமுருகனிடம் இருந்து சிறிது சிறிதாக பணம் பெற்றுள்ளார்.

மைதிலியின் புற்று நோய் அறிகுறி பேச்சை நம்பிய பால முருகனும், சுமார் 45 லட்சம் ரூபாய் வரை கொடுத்து உதவியுள்ளார்.

இந்த நிலையில் மைதிலியின் நடத்தையில் சந்தேகம் ஏற்படவே அவரது நடவடிக்கைகளை பாலமுருகன் ரகசியமாக கண்காணித்துள்ளார்.

இதனை தெரிந்து கொண்ட மைதிலி பாலமுருகனிடமிருந்து சிறிது சிறிதாக விலகி ஒரு கட்டத்தில் தொடர்பை முழுவதுமாக துண்டித்துள்ளார்.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்த பாலமுருகன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள மைதிலியின் வீட்டிற்கு விசாரணை நடத்த சென்றனர்.

அங்கிருந்த மைதிலியின் ஆண் நண்பர்கள் மற்றும் பெற்றோர் காவலர்களை தாக்க முற்பட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து அங்கிருந்த 5 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது மைதிலி என்ற பெயரில் பாலமுருகனுடன் பழகியவரின் உண்மையான பெயர் ஸ்ருதி பட்டேல் என்பதும் அவர் ஆடி போனா ஆவணி, சோழ வம்சம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருவதும் தெரியவந்தது.

நடிகை ஸ்ருதி பட்டேல் வி.கே.எஸ் மேட்ரி மோனியல் என்ற இணையதளம் மூலம் வசதியான ஆண்களை தொடர்பு கொண்டு அழகில் மயக்கி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்ததும்  வெளிச்சத்துக்கு வந்தது.

அவரது தாய், தந்தை என கூறப்பட்ட சித்ரா மற்றும் பிரசன்னா ஆகியோர் மோசடி பணத்தில் பங்கு வாங்கிக்கொண்டு வாடகைக்கு நடித்தது வந்ததும் தெரியவந்தது.

மூவரும் சேர்ந்து இதேபோன்ற பலரிடம் மோசடியில் ஈடுபட்டு அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து தங்களை வசதியான குடும்பத்தினர் போல காட்டிக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததுள்ளனர்.

மோசடி பணத்தில் படம் தாயாரிப்பில் ஈடுபட்டதும் அம்பலமானது.

கடந்த ஆண்டு நாமக்கலை சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற இளைஞரிடம் 43 லட்சம் ரூபாயும், கடலூர் மாவட்டம் சிதம்பரம்  குமரகுருராஜா என்ற பொறியாளரிடம் 50 லட்சம் ரூபாயும் மோசடி செய்திருப்பதையும் சென்னையை சேர்ந்த இரண்டு இளைஞர்களை ஸ்ருதி ஏமாற்றி பல லட்சம் பணம் பறித்ததும், பல இடங்களில் இளைஞர்களிடம் ஆசை வார்த்தை கூறி தனது கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பி லட்சகணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதும், பணத்தை திருப்பி கேட்டவர்களை பாடிகார்டுகளை வைத்து மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.

மூவர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடிகை ஸ்ருதி படேல், அவரது வாடகை தாய் சித்ரா, வாடகை தந்தை பிரசன்னா ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

விசாரணையின் போது காவல்துறையினரை தாக்கிய புகாரில் நடிகை ஸ்ருதிபடேலின் பாடிகார்டுகளான சபரிநாத் மற்றும் சுபாஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

திருமண தகவல் மையங்களின் இணையதளங்கள் மூலம் நடக்கின்ற மோசடிகள் அதிகரித்து வருவதால் திருமணத்தகவல் மையங்களின் இணையத்தில் வரன் தேடுவோர் உஷாராக இருக்க வேண்டியது அவசியம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News