ilakkiyainfo

அடுத்­த­டுத்து ஏற்­பட்ட காதல் மோகத்தால் அழிந்துபோன இளம் தாய்

அடுத்­த­டுத்து ஏற்­பட்ட காதல் மோகத்தால் அழிந்துபோன இளம் தாய்
July 01
12:03 2014

மடுல்­கலை ஸ்ரீ முத்­து­மா­ரி­யம்மன் ஆலய புக­ழேந்தி அற­நெறி பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு இந்து சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தால் வழங்­கப்­பட்ட சீரு­டைகள் வழங்கும் நிகழ்வு அண்­மையில் நடை­பெற்­றது.

நிகழ்வில் ஆலய பிர­தம குருக்கள் சிவஸ்ரீ தர்­ச­ன­கு­ருக்கள் மங்­கள விளக்­­கேற்­று­வ­தையும், அதி­தி­யாகக் கலந்து கொண்ட சமுக சேவை­யா­ளரும் சமய தொண்­ட­ரு­மா­கிய பீ. முத்­தையா பிள்ளை மற்றும் வர்த்­தகர் ஆனந்­தராஜ் சீருடை வழங்­கு­வ­தையும் சீருடை பெற்­றுக்­கொண்ட மாண­வர்­க­ளையும், ஆசி­ரி­யர்­க­ளையும் படங்களில் காணலாம் (படங்கள்: மடுல்கலை நிருபர் )

ஆசை அறு­பது நாள் மோகம் முப்­பது நாள் என்­பார்கள். எந்­த­வொரு விட­யமும் ஒரு கட்­டத்­துக்கு மேல் சலிப்­பையே தரும். அது எத்­த­கைய சொர்க்கலோக வாழ்க்­கை­யாக இருந்­தாலும் இதுவே உலக நியதி.

அமிர்­த­மா­கவே இருந்­தாலும் கூட அதுவும் ஒருநாள் திகட்­டவே செய்யும். அதே­போல தான் காதலும் காமமும் எத்­த­கைய இனி­மை­யான மென்­மை­யான சுக­மான அனு­ப­வங்­களை தந்து ஆசு­வா­சப்­ப­டுத்­தி­னாலும் கூட ஒரு எல்­லைக்­கப்பால் வெறுப்­பு­ணர்வு எமை ஆட்­கொள்­வதே இயல்பு.

ஆனால், சிலர் இவற்­றுக்கு விதி­வி­லக்­கா­ன­வர்­க­ளாக இருப்­பார்கள். இயற்­கை­யா­கவே மனித மன­மா­னது கூடு­விட்டுக் கூடு பாயும் இயல்பு கொண்­டது. ஒன்றை விட பிறி­தொன்றின் பால் கவ­ரப்­பட்டு அதனை அடைய ஏங்கித் தவிக்கும்.

இச்­ச­மூ­கத்தில் ஒருசில கண­வன்­மா­ருக்கு எத்­த­கைய சற்­கு­ண­வதி மனை­வி­யாக அமைந்­தாலும் தனக்கு பிடித்த வேறொ­ருத்தி கண் முன்னே தோன்­று­கையில் மனது சற்றுத் தடு­மா­றவே செய்யும்.

மனம் தடம் மாறவே எத்­த­னிக்கும். ஆனால் நான் இப்­போது இவ்­வ­ளவு தூரம் பீடி­கை­யெல்லாம் போட்டு கூறப்போகும் கதையில் வரும் மனை­வியும் முற்றிலும் வித்­தி­யா­ச­மா­னவள். இப்­ப­டி­யு­மொரு பெண் உலகில் இருப்­பாளா என்றும் எண்ணத் தோன்றும்.

நல்ல குணா­தி­ச­யங்­களைக் கொண்ட பொறுப்­பான, அன்­பான மணா­ளனை கண­வ­னாக அடையும் பாக்­கியம் பெற்­றி­ருந்­தாலும், தன்­னுள்ளே தணி­யா­தி­ருந்த விரச உணர்­வினால் தான் சந்­திக்க நேரிடும் ஆட­வர்­க­ளு­ட­னெல்லாம் குடித்­தனம் நடத்­தி­யுள்ளார் இந்தப் பெண். அந்த பெண்­ணுக்கு நேர்ந்த கதியே இம்­முறை பதிவு செய்­யப்­ப­டு­கின்­றது.

ஆம். வெலி­ம­டையைச் சேர்ந்த குறித்த பெண். நல்ல அழ­கான தோற்றம் கொண்­ட­வ­ளாக இருந்­துள்ளார்.

அவ­ளுக்கு பிறப்­பி­லேயே கிடைத்த இந்த அழகு காமத் தேனை உறிஞ்சிப் பருக ஆசைப்­படும் நிறைய பட்டாம் பூச்­சி­க­ளுக்கு வாய்ப்­பா­கவே அமைந்­தது. பார்ப்­பவர் உள்ளம் கொள்ளை போகு­ம­ள­வுக்கு அவ­ளது வனப்பு இருந்­தது .

பாட­சா­லைக் ­கா­லங்­க­ளி­லி­ருந்தே தான் நினைத்­ததை யார் தடுத்­தாலும் கூட கேட்­காமல் செய்யும் துணி­வு­டை­ய­வ­ளா­கவும், விளை­யாட்டுப் போட்­டி­களில் பிர­கா­சித்­த­வ­ரா­கவும் படிப்பில் கெட்­டிக்­கா­ரி­யா­கவும் இருந்­துள்ளாள்.

இதனால் பாட­சா­லையில் எல்­லோ­ராலும் நன்கு அறி­யப்­பட்ட பிர­ப­ல­மா­னவராக இருந்­துள்ளாள். இப்­படிப் போன அவ­ரது பாட­சாலை வாழ்க்­கையும் கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்சை எழு­தி­ய­தோடு முடி­வ­டைந்­தது.

அத்­துடன் பாட­சாலைக் கல்­விக்கு முற்­றுப்­புள்ளி வைத்­து­விட்டு இல்­லற வாழ்க்­கைக்குத் தொடக்கப் புள்ளி வைத்­துள்ளார். அநு­ராதபுரத்தைச் சேர்ந்த இரா­ணு­வத்தில் பணி­பு­ரியும் ஒரு­வரின் மேல் காதல் வயப்­பட்ட இப்பெண் அவ­ரையே கரம்­பி­டித்­துள்ளாள்.

இவர்­க­ளது காதல் திரு­ம­ணத்­துக்குச் சாட்­சி­யா­கவும் ஒரு குழந்தை பிறந்­தது. அக்­கு­ழந்தை பிறந்­த­தை­ய­டுத்து வாழ்வின் இன்­னொரு பரி­ணா­மத்தைச் சந்தித்த அவள் குழந்­தையை கவ­னிப்­ப­தி­லேயே தனது பெரும்­பா­லான நேரத்தை செல­வ­ழித்தாள்.

இவ­ளது கண­வ­னான இரா­ணுவ சிப்பாய் மாதத்­துக்கு ஒரு முறை கிடைக்கும் விடு­மு­றையில் வீட்­டுக்கு வரு­வதை வாடிக்­கை­யாகக் கொண்­டுள்ளார். அவ­ரது உத்­தி­யோகம் அப்­ப­டிப்­பட்­டது.

இப்­ப­டி­யி­ருந்த சம­யத்தில் இன்­னொரு குழந்­தைக்கும் தாயாகும் பாக்­கி­யத்தைப் பெற்­றுள்ளாள். அப்பெண் வீட்டில் கணவன் இல்­லாத நிலையில் பெரும் சுதந்­தி­ர­மாக இருந்­துள்ளாள்.

இரு குழந்­தை­க­ளுக்கு தாயென்றே அவளை குறிப்­பிட இய­லா­த­ள­வுக்கு அவ­ளது மேனியின் வனப்பும் இள­மையும் மெரு­கே­றிக்­கொண்டே இருந்­துள்­ளது. இந்த நேரத்தில் இப்­பெண்ணின் வீட்­டுக்கு அருகில் வேலை­செய்து கொண்­டி­ருந்த ஒரு இளை­ஞனின் கண்­களை இவ­ளது அழ­கானத் தோற்றம் ஈர்த்­துள்­ளது.

இவள் வீட்டில் தனி­யாக இருக்கும் போதெல்லாம் ஜன்னல் வழி­யாக இவ­ளது அழகை கண்­களால் பருகி இன்­புற்­றுள்ளான். இவளை தன­தாக்கிக் கொள்ள வேண்­டு­மென்ற நோக்கில் பல­முறை முயற்­சி­களை மேற்­கொண்­டுள்ளான்.

இவ்­வாறு இவன் கள­வாக ஜன்­னலில் பார்ப்­பதை பார்த்த அவ­ளுக்கு முதலில் சற்று ஆத்­தி­ர­மாக இருந்­தாலும், பிறகு அவ­ளது இள­மைக்­கு­ரிய உணர்ச்சிகளால் வசப்­பட்டு அவன் மீது இச்சைக் கொண்­டுள்ளாள்.

கணவன் இல்­லாத பொழு­து­க­ளை­யெல் லாம் இந்த இளை­ஞ­னு­டனேயே கழித்­துள்ளாள். இவர்­க­ளது இந்த தகாத உறவு நான்கு சுவ­ருக்குள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தாலும், நாள­டைவில் ஊர் மத்­தியில் அம்­ப­ல­மா­னது.

showImageInStory

கத்­த­ரிக்காய் முற்­றினால் சந்­தைக்கு வரத்­தானே வேண்டும். அப்­பெண்ணின் கணவன் விடு­மு­றையில் வீடு வரும்­போ­தெல்லாம். ஊரார் இச்­செய்­தியை அவ­னது காதில் ஊதி வத்­தி­வைக்க மறக்­க­வில்லை. இருந்­தாலும் அவன் எடுத்த எடுப்­பி­லேயே அவள் மீது சந்­தேகம் கொள்­ள­வில்லை. அவ­ளுக்கு இது குறித்து அறி­வு­றுத்­தவே செய்தான் .

“ஏய் இங்க பாரு அக்­கம்­பக்­கத்­துல எல்லாம் ஒன்ன பத்தி ஏதே­தோ­வெல்லாம் பேசிக்­கி­றாங்க. ஒவ்­வொ­ருத்­தரும் என்­னி­டமே வந்து ஒன்னப் பத்தி தரக்­கு­றைவா பேசு­றாங்க.

இவங்க எல்லாம் இப்­படி பேசு­றாங்­கன்னு ஒன்ன நான் வெறுத் தொதுக்க மாட்டேன். ஆனாலும் நீ இப்ப ரெண்டு குழந்­தை­க­ளுக்குத் தாய்ங்கிறத மட்டும் மன­சுல வச்­சுக்க “

இருந்­த­போ­திலும் அவன் திரும்பி உத்­தி­யோ­கத்தைக் கவ­னிக்கச் சென்­ற­வுடன் அந்த இளை­ஞ­னோடு முன்­னரைப் போலவே தனது தொடர்­பு­களை பேணி­யுள்ளாள்.

அவள் பழகும் இளை­ஞ­னுக்கு பணம் நகைகள் தேவைப்­படும் போதெல்லாம் வீட்­டி­லுள்ள பொருட்­களை விற்று அல்­லது அடகு வைத்­தா­வது பணம் கொடுத்­துள்ளாள். கடை­சியில் அவ­ளது பெரிய மகளை பாட­சா­லைக்கு கூட்டிச் செல்­வ­தற்­காக வாங்­கிய முச்­சக்­கர வண்டி மட்­டுமே இருந்­துள்­ளது.

இவள் தொடர்பு வைத்­தி­ருந்த அவ்­வி­ளை­ஞனின் கண்­க­ளுக்கு இந்த முச்­சக்­கர வண்டி பட்­டு­விட்­டது. உடனே அப்பெண் தனது ஆசை நாய­கனின் தேவையைப் பூர்த்தி செய்­வ­தற்­காக அதனை விற்­கக்­கூடத் துணிந்­துள்ளாள். அதனை அவ­ளது மூத்­த­ம­க­ளி­டமே கூறி அவளை சமா­தா­னப்­ப­டுத்­தி­யுள்ளாள்.

“என் செல்­ல­மில்ல. நமக்கு இந்த ஆட்டோ இனிமேல் வேணாம். நாம் இந்த வீட்­டி­லி­ருந்து நம்ம பாட்டி வீட்­டுக்குப் போவோம்” என்று குழந்­தையை சம­ரசம் செய்தாள்.

இப்­ப­டியே இருக்கும் பொழுது ஒருநாள் தனது மனை­விக்கும் அவ்­வி­ளை­ஞ­னுக்கும் ரக­சிய தொடர்­பி­ருப்­பதை கண்­ணெ­திரே கண்­டுள்ளான். உடனே ஆத்­தி­ரத்தின் உச்­சிக்கே சென்ற அவ­ளது கணவன் அவளை அறை­வ­தற்­காக கை ஓங்­கி­யுள்ளான். அவ­னது கையை திமி­ராக தட்­டி­விட்ட அவள்.

“என் மீது கையை வைக்­கிற வேலை­யெல்லாம் வேணாம். எனக்கு ஒன்ன விட இவன தான் புடிச்­சி­ருக்கு. இனி­மேலும் ஓங்­கூட வாழ்ந்து நான் என்ன சொகத்தக் கண்டேன் நான் என் அம்மா வீட்­டுக்குப் போறேன் “

என்று பெட்டிப் படுக்­கை­யெல்லாம். எடுத்­துக்­கொண்டு தனது இரண்டு பிள்­ளை­க­ளையும் கூட்­டிக்­கொண்டு அவ­ளது அம்­மாவின் வீட்­டுக்குச் சென்­றுள்ளாள். அங்கே சென்­ற­வுடன் தனது பிள்ளைகளை அம்­மாவின் பாது­காப்பில் விட்டு விட்டு கொழும்பில் நகை அடவு பிடிக்கும் நிலை­ய­மொன்றில் வேலைக்குச் சேர்ந்­துள்ளாள்.

தனது கணவன், பிள்­ளை­க­ளை­யெல்லாம் பிரிந்து வாட­கை­ய­றை­யொன்றை யெடுத்து அதில் தனியே இருந்து வந்­தி­ருக்­கிறாள். அவ்­வா­றான தொரு சூழலில் தான் பொலன்­ன­று­வையைச் சேர்ந்த ஒரு­வ­ருடன் காதல் தொடர்பை ஏற்­ப­டுத்­திக்­கொண்­டுள்ளாள். அதன்­பி­றகு தான் வேலை செய்த இடத்­தி­லி­ருந்தும் விலகி கொழும்பு வாழ்க்­கைக்கு விடை­கொ­டுத்­து­விட்டு இரு­வரும் கம்­ப­ளைக்குச் சென்­றுள்­ளனர்.

அங்கு ஒரு வீட்டை வாட­கைக்கு எடுத்து இரு­வரும் குடும்பம் நடத்தி வந்­துள்­ளனர். நோயா­ளிகள் பரா­ம­ரிப்பு நிலை­ய­மொன்றில் இரு­வரும் வேலைக்குச் சேர்ந்­துள்­ளனர். அன்று முதல் இரு­வரும் மகிழ்ச்­சி­யா­ன­தொரு வாழ்க்­கையை உல்­லா­ச­மாக கழித்து வந்­துள்­ளனர். ஆனால் நோயா­ளிகள் பரா­ம­ரிக்கும் நிலை­யத்தில் வேலை­செய்து கிடைக்கும் ஊதியம் போதா­மையால் இரு­வ­ருக்­குள்ளும் ஒவ்­வொரு நாளும் சண்டை மூண்­டது.

அவர்­க­ளது காத­லு­ற­விலும் விரிசல் ஏற்­பட்­டது. அப்­ப­டி­யி­ருக்­கையில் ஒருநாள் இப்­பெண்­ணுக்கும் இவர்கள் வசித்­து­வந்த வீட்­டுக்­க­ருகில் வாக­னங்­களை பழு­து­பார்க்கும் கராஜ் வைத்­தி­ருக்கும் இளை­ஞ­னுக்கும் காதல் மலர்ந்­துள்­ளது.

அன்று முதல் இப்பெண் இவ­னுடன் உல்­லாச உலகில் சஞ்­ச­ரித்­துள்ளாள். இது இவளின் முன்னாள் காத­ல­னுக்குத் தெரிந்து விட அவன் இப்­பெண்னை அடித்து உதைத்து எச்­ச­ரித்­துள்ளான். அதன் போது ஆத்­தி­ர­ம­டைந்த அப்பெண் “இனிமேல் எனக்கு நீயும் வேண்டாம்”

என்று அங்­கி­ருந்தும் வெளி­யேறி அவ்­வி­ளை­ஞ­னுடன் கம்­ப­ளையை அண்டிய பிறி­தொரு பிர­தே­சத்­துக்குச் சென்­றுள்ளாள். அங்கே இரு­வரும் தமது காதல் உலகில் எல்லாக் கவ­லை­க­ளையும் மறந்து வாழ்ந்து வந்­துள்­ளனர்.

அப்­பெண்­ணுக்கே தான் எத்­தனை பேருடன் வாழ்க்கை நடத்தி இருக்­கிறோம் என்ற உணர்வே இருக்­க­வில்லை. புதிதாய் பூப்­பெய்­திய ஒரு உணர்­வுடன் அவள் இருந்­தி­ருக்­கிறாள்.

தனது பிள்­ளை­க­ளைப்­பற்­றியும் எந்த அக்­க­றையும் அவள் செலுத்­தி­ய­தாகத் தெரி­ய­வில்லை. தனது வயது முதிர்ந்த அம்­மா­விடம் குழந்­தை­களை ஒப்­ப­டைத்து விட்டு வந்­த­தையே அவள் அடி­யோடு மறந்­து­விட்­டி­ருந்தாள்.

அத்­தோடு அவள் வேலைக்குச் சென்று ஈட்டும் பணத்­தை­யெல்லாம் அவள் புதிது புதி­தாக ஏற்­ப­டுத்­திக்­கொள்ளும் கள்ளத் தொடர்­பு­க­ளுக்­காக செல­வு­செய்தாள். தனது அம்­மாவின் தேவைக்­கா­கவோ அல்­லது தனது குழந்­தை­களின் பரா­ம­ரிப்புச் செல­வு­க­ளுக்கோ கொடுக்­க­வில்லை. இவ்­வா­றி­ருக்­கையில் அப்­பெண்ணின் முன்னாள் காதலன் (பொலன்­ன­று­வையைச் சேர்ந்­தவர்) இவளை மறக்­க­மு­டி­யாமல் தவித்­துள்ளான்.

அவ­ளுடன் உல்­லா­ச­மாக இருந்த காலங்­க­ளை­யெல்லாம் மறந்­து­வி­ட­வில்லை. அவற்றை எண்ணி எண்ணி மனம் புழுங்­கினான். அவளை மறு­ப­டியும் அடையத் துடித்தான். இதற்­காக அவன் ஒரு உபா­யத்தைக் கையாண்டான். அப்­பெண்­ணுக்கு தொலை­பேசி வாயி­லாக அழைப்­பொன்றை மேற்­கொண்டான்.

“ஏய் நீ போனால் போ. அதைப்­பற்றி நான் கவ­லைப்­ப­ட­வில்லை. நீ எனக்­காக அடகு வைத்த ஒரு சோடி தோடு­களை நான் மீட்­டு­விட்டேன். நான் சொல்லும் இடத்­துக்கு நாளை இரவு வந்தால் அதை உன்­னி­டமே தந்து விடுவேன். அதி­லி­ருந்து நீ யாரோ நான் யாரோ “என்று தொலை­பேசி தொடர்பைத் துண்­டித்­துள்ளான்.

ஆனால் அவன் மனது அவளை பழி­வாங்கத் துடித்­தது. தன்­னுடன் வாழ மறுக்கும் அவ­ளது கதையை முடிப்­ப­தாக நினைத்­துக்­கொண்டான். அவ­ளைப்­பார்க்கச் செல்லும் முன் இரண்டு கத்­தி­க­ளையும் நஞ்சு போத்­த­லொன்­றையும் தயார்­செய்து வைத்­துக்­கொண்டான்.

இவன் தொலை­பே­சியில் கதைத்த அவ்­வ­ளவு விட­யங்­க­ளையும் ஒரு வரி கூட விடாமல் தனது புதிய காத­ல­னிடம் சொல்ல அப்பெண் தவ­ற­வில்லை.

“நீ போய் தோடு­களை வாங்கி வா. ஆனால் இரவு நேரம் செல்­லாதே பகல் நேரம் வரு­வ­தாக சொல்” என்று கூறி­யுள்ளான். இதை­ய­டுத்து மறுநாள் குறித்த இடத்­துக்கு அவள் சென்­றுள்ளாள். அப்­போது அங்கு வந்த அவன் தன்­னுடன் வந்­து­வி­டு­மாறு கூறி­யுள்ளான்.

அவன் எவ்­வ­ளவோ வற்­பு­றுத்தியும் அவ­னுடன் செல்ல மறுத்துவிட்டாள். கட்டுக்கடங்காத வெறியை மனதில் வைத்து புதைத்திருந்த அவன் தனது இடுப்பில் மறைத்து வைத்­தி­ருந்த இரு கத்­தி­களில் ஒன்றை திடீ­ரென்று வெளியில் உருவி எடுத்து அவ­ளது கழுத்தில் குத்­தி­யுள்ளான்.

அவ்­வாறு செய் தும் வெறி அடங்­காத கார­ணத்­தினால் இன்னும் இரண்டு மூன்று தட­வைகள் கத்தியால் குத்­தி­யுள்ளான். கத்­திக்­குத்­துக்கு இலக்­காகி அவள் கீழே சாய்ந்­த­வுடன் தனது காற்­சட்­டைக்குள் வைத்­தி­ருந்த நஞ்சை எடுத்து அருந்தி அவனும் அவ­ள­ருகில் சாய்ந்­துள்ளான்.

ஆனால் அவள் இறந்­தாலும் இவ­னது உயிர் பிரிந்­து­வி­ட­வில்லை. இவன் குற்­று­யி­ராக உயி­ருக்குப் போரா­டிக்­கொண்­டி­ருந்த தரு­ணத்தில் சம்­பவ இடத்­துக்கு வந்­தி­ருந்த பொலி­ஸாரின் கைக­ளுக்கு சிக்­கி­யுள்ளான். அத்­துடன் இந்­நபர் ஏற்­க­னவே திரு­மணம் முடித்­த­வ­ராவார். இவருக்கும் பிள்ளைகள் உள்ளனரெனவும் தெரியவந்துள்ளது.

கே.நிரோஷ்குமார்

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com