’ராஜா ராணி’ படத்தின் மூலம் வெற்றிப்பட இயக்குநராக மாறிய அட்லிக்கும்-நடிகை ப்ரியாவிற்கும் ஓணம் திருநாளான நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது.
கடந்த 8 வருடங்களாக நண்பர்களாக இருந்து வந்த அட்லியும், சின்னத்திரை மற்றும் ‘நான் மகான் அல்ல’, ’சிங்கம்’ உள்ளிட்ட ஓரிரு படங்களில் நடித்த ப்ரியாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. தற்போது இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இருவீட்டாரின் சம்மதத்துடன் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அட்லியின் நண்பர்களான நயன்தாராவும், ஆர்யாவும் கலந்து கொண்டனர்.
அட்லி மற்றும் ப்ரியாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்ட நிச்சயதார்த்த விழா இனிதே நடந்து முடிந்தது.
பாலியல் தொழிலில் ஈடுபட்ட தெலுங்கு நடிகை, நடிகர்கள் கைது!
08-09-2014
குண்டூர்: பாலியல் தொழில் ஈடுபட்ட பிரபல தெலுங்கு நடிகை மற்றும் இரண்டு நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநில திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த பிரபல நடிகை ஸ்வேதா பாசு விபசார வழக்கில் சில வாரங்களுக்கு முன்பு ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். தற்போது பெண்கள் மறுவாழ்வு இல்லத்தில் அவர் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.
இந்த பரபரப்பு ஓய்வதற்குள் தற்போது, விபசார வழக்கில் மற்றொரு தெலுங்கு நடிகையான திவ்யஸ்ரீயும் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தெலுங்கில் “பிடெக் பாபு” என்ற படத்தில் நடித்துள்ளார்.
குண்டூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் செய்வதாக வந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து உடனடியாக அந்த வீட்டை காவல்துறையினர் முற்றுகையிட்டனர். அப்போது, விபசாரத்தில் ஈடுபட்ட நடிகை திவ்யஸ்ரீ மற்றும் இவருடன் அதே வீட்டில் இருந்த தெலுங்கு நடிகர்கள் பவன் குமார், சந்து ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆந்திராவில் விபசாரம் செய்ததாக நடிகைகள், நடிகர்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வரும் சம்பவம் அம்மாநில திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடவுள் பாதி மிருகம் பாதி – மீனம்மா மீனம்மா பாடல் வீடியோ!
வெண்நிலா வீடு – ஜானி ஜானி பாடல் மேக்கிங் வீடியோ!
அமரகாவியம் – மௌனம் பேசும் பாடல் மேக்கிங் வீடியோ!