ilakkiyainfo

அதிபரான அப்பாவால் பாடம் கற்பிக்க அனுப்பி ஆசிரியையுடன் மகன் காதல் லீலை

அதிபரான அப்பாவால் பாடம் கற்பிக்க அனுப்பி ஆசிரியையுடன் மகன் காதல் லீலை
April 23
23:24 2016

 

யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபராகக் கடமையாற்றுபவரின் மகன் அப் பாடசாலை ஆசிரியையுடன் பாலியல் லீலைகளில் ஈடுபட்டு வருவதுடன் அதனை தனது செல்போனில் படமெடுத்து

தனது நண்பர்கள் சிலருக்கு காட்டியும் வந்துள்ளார். இவற்றில் சில புகைப்படங்கள் நண்பர்கள் வாயிலாக பல இடங்களிலும் பரவி வருவதாகத் தெரியவருகின்றது.

குறித்த ஆசிரியை திருமாணமாகதவர் என்பதும் அதிபரின் மகன் யாழ் நகர்ப் பகுதியில் பிரபல பாடசாலையில் கல்வி கற்றுவருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2011 ம் ஆண்டு க.பொ.த சாதாரணதரத்தில் முக்கிய பாடம் ஒன்றிற்காக ஆசிரியை குறித்த மாணவனுக்கு அவனது வீட்டில் வந்து பாடம் கற்பித்துள்ளார்.

அதில் ஏற்பட்ட தொடர்பே இவ்வாறு பாலியலுறவுவரை சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

குறித்த அதிபர் பாடசாலை மற்றும் ஏனைய இடங்களிலும் நல்லொழுக்கத்துடன் இருப்பவர் என பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் மகன் தற்போது போதைக்கு அடிமையாகியுள்ளதுடன் கல்வியையும் க.பொ.த உயர்தரத்துடன் நிறுத்திவிட்டு காவாலியாகத் திரிவதாகவும் ரவுடிகள் மற்றும் வாள் வெட்டுக் குழுக்களுடனும் மகனுக்கு தொடர்பிருப்பதாகவும் தெரியவருகின்றது.

மகனின் செயற்பாடுகளை அதிபாரால் நிறுத்த முடியாது உள்ளதாகவும் பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆசிரியைக்கும் மகனுக்கு ஏற்பட்ட தவறான உறவு புகைப்படங்கள் மூலம் அதிபருக்கும் தெரிவிக்கப்பட்டதாகவும் இதனால் அதிபர் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

கணவனை இழந்த பெண் அரசஊழியர் கர்ப்பம்! அலுவலக உதவியாளர் மீது மனைவி தாக்குதல்
24-04-2016

1928-1-dcf0648f9a135ddb1d834e19385e3638யாழில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் கடந்த 3 வருடங்களுக்கு முன் கணவனை இழந்த பெண் ஊழியர் ஒருவர் இவ்வருடம் இடமாற்றம் பெற்று கடமையாற்றி வந்துள்ளார்.

இந் நிலையில் குறித்தபெண் ஊழியர் அலுவலகத்தில் வாந்தி எடுத்து மயக்கமடைந்ததால் அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற பெண் ஊழியர்களு்ககு அதிர்ச்சிச் செய்தி கிடைத்துள்ளது. மயக்கமடைந்த பெண் ஊழியர் கர்ப்பமாக இருப்பதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இந்தத் தகவல் அப் பெண் ஊழியர்களால் அலுவலகத்தில் உள்ள ஒரு சிலருக்கு மட்டும் தெரியப்படுத்தப்பட்டு தகவல் அமுக்கப்பட்டுள்ளது.

கர்ப்பமான பெண் ஊழியரும் லீவு எடுத்து சென்று கடந்த இரு வாரங்களாகியும் இன்னும் அலுவலகம் வரவில்லை என தெரியவருகின்றது.

கர்ப்பமான குறித்த பெண் ஊழியருடன் நட்புடன் நெருங்கிப் பழகி வந்த இரு பிள்ளைகளுக்கு தந்தையான 45 வயதாக அப்பாவி அலுவலக உதவியாளர் ஒருவரில் சில அலுவலர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது.

அந்த ஊழியர் கர்ப்பமான பெண் ஊழியருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுப்பது முதல் பல வேலைகள் செய்து வந்துள்ளார்.

பெண் ஊழியரின் கர்ப்பம் தொடர்பாகவும் குறித்த அலுவலக உதவியாளரில் சந்தேகம் தொடர்பாகவும் அலுவலரின் மனைவிக்கு இனந்தெரியாதவர்களால் தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்தப் பெண் அலுவலரின் தொலைபேசி இலக்கம் வைபர் இலக்கம் என்பனவும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத இலக்கத்தில் இருந்து வந்த அழைப்பை அடுத்து பத்திரகாளி வேடம் போட்டு அலுவலகம் வந்த மனைவி இது தொடர்பாக அந்த அலுவலகத்தின் பெண் அதிகாரியை சந்தித்து தனது கணவரையும் வைத்து குறித்த சம்பவம் தொடர்பாக விசாரித்ததுடன் அங்கு வைத்து அந்த அப்பாவி அலுவலரை தாக்க முற்பட்டதாகவும் தெரியவருகின்றது.

அவர் அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றதால் அவரது மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி அந்த இடத்தில் நின்று கத்திக் குளறிச் சென்றதாகவும் தெரியவருகின்றது.

குறித்த அலுவலர் எவ்வளவோ சொல்லியும் மனைவி அதை நம்பவில்லை என்றும் கர்ப்பமான பெண் அலுவலரை நேரில் சந்திக்க முற்பட்ட போது பெண் உயரதிகாரி அதற்கு மறுத்து மனைவியின் முன் அந்த பெண் அலுவலருக்க தொலைபேசி எடுக்க முற்பட்ட போது தொலைபேசி செயலிழந்து போயிருந்ததாகவும் தெரியவருகின்றது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com