கோலாலம்பூர்: மாயமாவதற்கு முன்பாக மலேசிய விமானத்தின் விமானியின் அறையில் நடந்த சம்பாஷனைகளின் முழு பதிவின் விவரங்கள் பிரிட்டிஷ் செய்தித்தாளான டெலிகிராப்பில் வெளியாகியுள்ளது.இந்த பதிவானது மலேசிய விமானம் ஓடுபாதையில் இருந்து கிளம்பியதில் இருந்து அதனுடைய கடைசி செய்தி 1.07க்கு பதிவான வரையிலான 54 நிமிடங்களை விவரிக்கிறது. விமானி மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு இடையேயான இந்த பேச்சு மாண்டரின் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளார்கள் இதைபற்றி கூறும்போது,இவை எப்போதும் நடைபெறும் சாதாரண தகவல் பரிமாற்றம்தான் என்ற போதும்,சில செய்திகள் வழக்கத்திற்கு மாறாக உள்ளன என்று கூறியுள்ளனர்.
அந்த ஆராய்ச்சி தகவலின் படி, விமானிகள் 35,000 அடி உயரத்தில் பறப்பதாக அந்த உயரத்தை அடைவதற்கு 6 நிமிடங்கள் முன்னதாகவே பதிவு செய்துள்ளனர். இது ஏன் என்று தெரியவில்லை.இன்னொரு அசாதாரணமான விஷயம் என்னவென்றால், விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும், ஹோசி மின் சிட்டியில் உள்ள விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானத்தின் கட்டுப்பாட்டை கோலாலம்பூர் விமானக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் மாற்றிய சமயத்தில்தான், விமானம் தனது வழக்கமான பாதையிலிருந்து திரும்பி மேற்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி ஸ்டீபன் பஸ்டிகன் இதைப்பற்றி கூறியபோது, “விமானத்திற்கும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்தில் இடையூறு ஏற்பட்டால், விமான திருட்டிற்கான சாத்தியகூறுகள் அதிகமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
இந்த பதிவானது துணை-விமானியின் “ஆல் ரைட், குட் நைட்” என்ற செய்தியுடன் முடிவடைந்துள்ளது.
அதன்பின்னர் ரேடாரில் கூட விமானத்திற்கான தகவல்கள் பதிவாகவில்லை.14 நாட்களுக்கு மேல் ஆகியும் விமானத்தின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.
அந்த சம்பாஷனையின் முழுப் பதிவுகள்:
விமானிகள் பேசிய முழு உரையாடலையும், அதற்கான சில விளக்கங்களையும், இதோ பாருங்கள்:
மலேசிய விமானம் MH370-ன் காக்பிட்டில் இருந்து, கோலாலம்பூர் கன்ட்ரோல் டவருடன் நடத்தப்பட்ட உரையாடல் (இதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரம், கோலாலம்பூர் நேரம். உரையாடல் நள்ளிரவு 12 மணி 36 நிமிடம் 30-வது செக்கனில் தொடங்குகிறது)
00:36:30 மலேசிய விமானம் MH370: ATC, this is MH370, good morning
(ATC என்பது, ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் என்பதன் சுருக்கம்)
டவர்: Good morning, MH370, This is KL control tower, please remain in A10 32R
(ரன்வே இலக்கம் 32-க்கு செல்லுமுன் விமானம் டாக்சி வேயில் நிற்பதை குறிக்கிறது. ரன்வே இலக்கங்கள் 1 முதல் 36 வரை இருக்கும். இவை 360 டிகிரியின் ஒவ்வொரு 10 பாகையை குறிக்கும். ரன்வே 09 என்பது, கிழக்கு நோக்கிய 90 டிகிரி. ரன்வே 18 என்பது தெற்கு நோக்கிய 180 டிகிரி. அந்த வகையில் கோலாலம்பூரின் 32R ரன்வே 320 டிகிரி. இதில் R என்பது வலது பக்கம் – Right)
00:36:50 மலேசிய விமானம்: A10, MH370 copies that
(தகவலை சரியாக கிரகித்துக் கொண்டதை உறுதி செய்ய திரும்ப சொல்வார்கள்)
00:38:43 டவர்: MH370, please get on the runway from 32R A10
(டாக்சி-வேயில் இருந்து ரன்வேக்கு செல்ல அனுமதி)
மலேசிய விமானம்: runway from 32R A10, copy that
(தகவல் சரியாக கிரகிக்கப்பட்டது)
00:40:38 டவர்: MH370, position 32R, runway ready, permitted to takeoff. Good night
(டேக்-ஆஃப் செய்ய அனுமதி)
மலேசிய விமானம்: position 32R, runway ready, permitted to take off. MH370 copies that. Thank you, goodbye.
விமானம் கிளம்பியபின் உரையாடல்:
00:42:05 மலேசிய விமானம்: MH370 has left the port
(விமானம் கோலாலம்பூர் ரன்வேயை விட்டு மேலெழுந்து விட்டது)
00:42:10 டவர்: MH370 position confirmed, flight altitude 180, follow the command and turn right, target IGARI waypoint.
(IGARI வேபாயின்ட் என்பது வான் பாதை லொகேஷன். மலேசியாவுக்கும், வியட்நாமுக்கும் இடையே உள்ள வான் பாதையின் நடுவே IGARI உள்ளது. அதாவது, அந்த இலக்கை வைத்து விமானத்தை செலுத்துமாறு சொல்கிறது டவர்)
00:42:40 மலேசிய விமானம்: Alright, altitude 180, direction IGARI waypoint, MH370 copies that
(altitude 180 என்பது, தரையில் இருந்து 18,000 அடி உயரம். அந்த உயரத்தில் IGARI வான்பாதை லெகேஷனை நோக்கி விமானம் செல்வதாக விமானி சொல்கிறார்)
00:42:52 டவர்: MH370, you’ve entered KL Radar 132.6, good night
(கோலாலம்பூர் ராடார் 132.6-ல் மலேசிய விமான நகர்வு பதிவாக தொடங்குகிறது)
மலேசிய விமானம்: 132.6, MH370 copies that
(தகவல் சரியாக கிரகிக்கப்பட்டது)
00:46:51 மலேசிய விமானம்: KL ATC, This is MH370
(காக்பிட்டில் இருந்து டவரை அழைக்கிறார் விமானி)
டவர்: MH370, please climb to flight altitude 250
(இந்த இலக்கத்தை எப்போதும் நூறால் பெருக்க வேண்டும். அதாவது 250X100 = 25,000 அடி உயரத்துக்கு மேலெழ அனுமதி வழங்கப்படுகிறது)
00:46:54 மலேசிய விமானம்: MH370 is climbing to flight altitude 250
(தகவல் சரியாக கிரகிக்கப்பட்டது)
00:50:06 டவர்: MH370, climbing to flight altitude 350
(35,000 அடி உயரத்துக்கு மேலெழ அனுமதி வழங்கப்படுகிறது)
00:50:09 மலேசிய விமானம்: This is MH370, flight altitude 350
(தகவல் சரியாக கிரகிக்கப்பட்டது)
01:01:14 மலேசிய விமானம்: MH370 remaining in flight altitude 350
(35,000 அடி உயரத்திலேயே தொடர்ந்து பறக்கிறது விமானம்)
01:01:19 டவர்: MH370
(‘சரி’ என்பதற்கு பதிலாக விமானத்தின் இலக்கத்தை குறிப்பிடுவார் ஏர் ட்ராபிக் கன்ட்ரோலர்)
01:07:55 மலேசிய விமானம்: MH370 remaining in flight altitude 350
(35,000 அடி உயரத்திலேயே தொடர்ந்து பறக்கிறது விமானம்)
01:08:00 டவர்: MH370
(சரி)
01:19:24 டவர்: MH370, please contact Hu Chi Minh City 120.9, goodnight
(விமானம் மலேசிய வான் எல்லையை கடக்க போகிறது. இனி தொடர்புகளை வியட்நாம் ஹோ சி மிங் சிட்டி விமான நிலைய டவருடன் 120.9 அலைவரிசையில் ஏற்படுத்திக் கொள்ள சொல்கிறது மலேசிய டவர்.
01:19:29 மலேசிய விமானம்: All right, good night
(இறுதி வாக்கியம்)