ilakkiyainfo

அனுஷ்காவுக்கு கண்ணாடி அணியும் ஆண்களை எனக்கு பிடிக்காதாம்: காரணம் என்ன தெரியுமா??

அனுஷ்காவுக்கு கண்ணாடி அணியும் ஆண்களை எனக்கு பிடிக்காதாம்: காரணம் என்ன தெரியுமா??
May 04
07:55 2016

கண்களை மறைக்க கண்ணாடி அணியும் ஆண்களை எனக்கு பிடிக்காது’’ என்று நடிகை அனுஷ்கா கூறினார். நடிகை அனுஷ்கா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

‘‘ஒருவர் கண்ணை பார்த்து அவர் எந்த மாதிரி ஆண் என்று கணிக்க முடியும்.

கண்களுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. அதுபோல் முகபாவம், பேச்சு, உடல் மொழிகளை வைத்தும் ஒருவரை எடை போடலாம். சிரிப்பும் ஒருவரின் தரத்தை வெளிப்படுத்தும்.

நான் ஆண்களின் கண்களைத்தான் முதலில் பார்ப்பேன்.

நல்ல மனிதர் என்றால் பார்வையில் நேர்மை தெரியும். நேர்மையான ஆண்களை எனக்கு பிடிக்கும். அவர்களிடம் பேசி பழகுவேன். சில ஆண்கள் கண்ணாடி அணிந்து கண்களை மறைத்து விடுகின்றனர்.

அவர்கள் தங்கள் குணாதிசயம் வெளியே தெரியக்கூடாது என்று மறைக்கிறார்கள். எனக்கு கண்ணாடி அணியும் ஆண்களை சுத்தமாக பிடிக்காது. அவர்களை விட்டு விலகி சென்று விடுவேன்.

சிரிப்பும் ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை புரிய வைக்கும். ஒளிவு மறைவு இல்லாமல் சிரிக்கும் ஆண்களை எனக்கு பிடிக்கும். அவர்களிடம் கள்ளம் கபடம் இருக்காது. அத்துடன் எளிமையாக இருக்கும் ஆண்களையும் விரும்புவேன்.

என்னை சுற்றிலும் நேர்மையானவர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதிர்ஷ்டவசமாக அப்படிப்பட்டவர்கள்தான் என்னோடு இருக்கிறார்கள்.

சிறந்த முழுமையான மனிதருக்கு அடையாளம் எனது தந்தை. அவருக்கு இணையாக எந்த ஆணும் இல்லை என்பேன்.

சினிமாவில் அறிமுகமான புதிதில் கவர்ச்சி, காதல் படங்களில் நடித்தேன். அந்த படங்கள், வெளிநாடுகளில் சுற்றும் மகிழ்ச்சியை எனக்கு அளித்தது.

அதையும் மீறி ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற உந்துதலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.

இதுபோன்ற படங்களில் நடிப்பது சிரமமாகத்தான் இருக்கிறது. அதையும் மீறி அந்த படத்துக்காக கிடைக்கும் வரவேற்புகளை நினைக்கும்போது சிரமங்கள் மறைந்து விடுகிறது.

மூன்று நாளில் 1 கோடி ஹிட்ஸ்: கபாலி டீசரின் அதிரடி
04-05-2016

201605041306031847_Kabali-Teaser-hits-10-crore_SECVPF.gif
மூன்றே நாட்களில் யூடியூப் இணையதளத்தில் 1 கோடி ஹிட்ஸை தாண்டி ‘கபாலி’ டீசர் புதிய சாதனை படைத்துள்ளது.

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘கபாலி’. இப்படத்தின் டீசர் கடந்த மே 1-ந் தேதி உழைப்பாளர் தினத்தில் யூடியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட நாள் முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இந்த டீசர், 3 நாளில் 1 கோடி ஹிட்ஸ்களை வாங்கி சரித்திர சாதனை படைத்துள்ளது.

கபாலி படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் மலேசியா, தாய்லாந்து மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது.

கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து படத்தின் டிரைலரை விரைவில் வெளியிடவுள்ளனர்.

வருகிற ஜுன் மாத இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com