ilakkiyainfo

அப்துல் கலாம் கொல்லப்பட்ட வகையிலே ஜெயலலிதாவும் கொல்லப்படலாம்! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தமிழச்சி!

அப்துல் கலாம் கொல்லப்பட்ட வகையிலே ஜெயலலிதாவும் கொல்லப்படலாம்! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தமிழச்சி!
October 08
03:17 2016

இந்தியாவில் அப்துல் கலாம் உடலில் தொற்றுக் கிருமிகள் பிரயோகிக்கப்பட்டது. தற்போது இவ்வகையிலேயே ஜெயலலிதாவும் பாதிக்கப்பட்டுள்ளார் என தமிழச்சி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இது குறித்து தமிழச்சி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை,

ஜெயலலிதாவின் நுரையிரலில் இருப்பது தொற்று கிருமி இல்லை. Sepsis என்ற செலுத்தப்பட்ட கிருமி என்று கூறியதற்காக சிலர் Sepsis என்பது கிருமி இல்லை bacteria, fungi, virus or parasites மூலமாக ஏற்படும் infection என்று கூறுகிறார்கள்.

bacteria, fungi, virus அனைத்தும் அறிவியல் கிருமிகள் / நுண்ணுயிர்கள் என்றுதான் கூறுகிறது. infection ஏற்படுவதற்கு மூலகாரணமே கிருமி / நுண்ணுயிர்கள் தான்.

Sepsis குறித்த விரிவுகளை மருத்துவ விளக்கங்கள் கூறும் அதிகாரபூர்வமான இணையதளங்களில் வாசித்து பாருங்கள். அல்லது விக்கிபீடியா இணைப்பில் உள்ள தகவல்களை வாசியுங்கள்: https://en.wikipedia.org/wiki/Sepsis

தொற்றுக் கிருமிகள் இயல்பாக ஏற்படுவது ஒரு வகை. தொற்றுக் கிருமிகளை உடலில் செலுத்தி பக்க விளைவுகளை ஏற்படுத்தவது மற்றொரு வகை.

அமெரிக்காவில் மைக்கேல் ஜாக்சன் இரண்டாவது வகையில்தான் கொல்லப்பட்டார். ஐரோப்பிய / அமெரிக்க அரசியல்வாதிகளில் அரசுக்கு வேண்டப்படாதவர்களும் இவ்வகையிலேயே கொல்லப்படுகிறார்கள்.

காஸ்ட்ரோவை 730 வகைகளில் கொல்ல முயன்ற வரலாற்று தகவல்களை அறியுங்கள். லெவேனியா ஜனாதிபதி கொல்லப்பட்டதும் இதே வகையில்தான். இந்தியாவில் அப்துல் கலாம் மீது பிரயோகிக்கப்பட்டது. தற்போது பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு அரசியல்வாதி தான் ஜெயலலிதா.

அப்பல்லோ கடைசியாக அறிவித்துள்ள ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை பாருங்கள். ஜெயலலிதா நீண்டகாலம் மருத்துவமனையில் இருக்கவேண்டும் என்று மட்டுமே கூறி இருக்கிறார்கள்.

அரசு பணிகளை தொடர்வதற்கு ஜெயலலிதா சுயநினைவுடன் இருக்கிறாரா? என்பதை குறித்து மருத்துவ அறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை.

physical fitness, mental fitness ஜெயலலிதாவிற்கு எந்த நிலையில் உள்ளன என்பதை அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை எதையும் சுட்டிக்காட்டாதது ஏன்?

அப்பல்லோ மருத்துவமனைக்கு ஜெயலலிதா நுழைவு வாயில் வழியாக கொண்டு வரப்பட்டாரா? அல்லது ஹெலிக்காப்டரில் கொண்டு வரப்பட்டாரா? நுழைவு வாயிலில் வீடியோ கருவிகள் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா வரும் போது மயங்கிய நிலையில் இருந்தாரா? சுயநினைவுடன் இருந்தாரா? என்பதற்கு அந்த வீடியோ காட்சியில் இருந்திருக்க வேண்டும். அப்படி ஏதாவது அப்பல்லோ நிர்வாகிகளிடம் இருக்கிறதா? இல்லையா?

அப்பல்லோவில் ஜெயலலிதா சேர்க்கப்பட்ட சில நாட்களிலேயே சாதாரண ஜுரம் என்று மருத்துவ அறிக்கை குறிப்பிட்ட போதும் சுப்ரமணி சுவாமி ஜெயலலிதாவை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார்.

அதே வாய் இன்று தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்பட வேண்டும் என்கிறது.

எல்லாம் திட்டமிட்டு நடைபெறுகின்றன. ஜெயலலிதா தமிழ்நாட்டில் இல்லை. வேறொரு நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார் என்றுகூட தகவல்கள் அப்போதே வந்தன. அவை உறுதி செய்ய முடியாத தகவலாக இருந்ததால் அவை குறித்து பேச முடியவில்லை.

சுவாதி ராம்குமார் சசிகுமார் ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்துடனும் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இருக்கிறது.

சுவாதி படுகொலையை இஸ்லாமியர்கள் செய்ததாக கூறி தமிழ்நாட்டுக்குள் கலவரம் ஏற்படுத்த முயன்ற அவர்களது திட்டம் தோற்றுப் போன போது ராம்குமாரை மாட்டிவிட்டார்கள். ராம்குமாருக்காக நாங்கள் போராட ஆரம்பத்த போது அதிலும் தோற்றுப் போய் ராம்குமாரை வெளியே விட்டால் ஆபத்து என்று சாகடித்தார்கள்.

ராம்குமார் சாகடிக்கப்பட்ட மறுதினத்தில் கோவையில் சசிகுமாரை அதே அமைப்பைச் சேர்ந்த இந்து முன்னணி சாகடித்துவிட்டு பழியை இஸ்லாமியர்கள் மீது திணித்து கோவையில் கலவரத்தை ஏற்படுத்தி ராம்குமார் படுகொலையை திசை மாற்றம் செய்ய முயன்றார்கள்.

இதிலும் தோற்றுப் போய் ஜெயலலிதாவும் முரண்டு பிடிக்கவே அவரையும் விட்டு வைக்கவில்லை. அதுவும் தற்போது அம்பலத்தில் இருக்கிறது.

ஒருவேளை தனியார் மருத்துவமனை அப்பல்லோவில் ஜெயலலிதா இருந்தால் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அரசு மருத்துவர்கள் கண்காணிப்பிற்குள் கொண்டு வரவேண்டியதே இப்போதைய முக்கிய பணி. இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்?

அப்பல்லோவில் ஜெயலலிதாவின் மருத்துவ செலவு எவ்வளவு தெரியுமா?

About Author

Editor

Editor

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com