ilakkiyainfo

அப்பல்லோ முதன்மை மருத்துவரை மிரட்டிய ஸ்டாலின்?

அப்பல்லோ முதன்மை மருத்துவரை மிரட்டிய ஸ்டாலின்?
October 24
04:51 2016

முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு முக்கிய அரசியல் கட்சியின் வாரிசு தலைவர் போனைப் போட்டு உண்மை நிலவரம் என்ன என கேட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பல்லோவில் ஒரு மாதமாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அவ்வப்போது அறிக்கைகள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கின்றன.

இதனிடையே முன்னணி ஆங்கில ஊடக குடும்பத்தினர் தெரிவித்த சில கருத்துகள் ஜெயலலிதா நலமுடன் தேறிவருவதை உறுதி செய்தன. ஆனால் அப்பல்லோ வந்து செல்லும் தலைவர்கள் அனைவருக்கும் அதிமுகவினர்தான் விளக்கம் தருகின்றனர்.

அந்த முன்னணி ஆங்கில ஊடகத்தைச் சேர்ந்த ஒருவர் முக்கிய அரசியல் கட்சியின் வாரிசு தலைவரை அண்மையில் சந்தித்து பேசியுள்ளார்.

ஜெயலலிதா உடல்நிலை குறித்து வாரிசு தலைவரிடம் சில விவரங்களையும் அவர் அந்த வாரிசு தலைவரிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அந்த ஊடகவியலாளர் முன்னிலையிலேயே அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டிக்கு போனடித்திருக்கிறார் வாரிசு தலைவர்.

அப்போது ‘உங்க பெர்சனல் நம்பருக்கு எத்தனை முறை அழைப்பது? நான் என்ன பொறுப்பில் இருக்கிறேன் தெரியும்தானே… எனக்கு உண்மையான நிலவரத்தை சொல்லித்தான் ஆக வேண்டும் என கண்டிப்பான குரலில் பேசியிருக்கிறார்.

இதில் அலறிப்போன பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து சில உண்மை தகவல்களை சொல்லியதுடன், கூடவே இந்த விவகாரத்தால் தனது மருத்துவமனையின் வருமான இழப்பையும் சேர்த்துச் சொல்லி புலம்பியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து முக்கிய கட்சியின் வட்டாரங்கள் தற்போதைக்கு மவுனம் காப்பதாக கூறப்படுகிறது.

About Author

Editor

Editor

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

April 2021
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com