டெல்லியில் பொறியியல் கல்லூரி மாணவர் குறும்புத்தனமாக எடுத்த ஒரு வீடியோவை, யூடியூப் இணையதளத்தில் இரண்டே நாட்களில் சுமார் 5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
அப்படி என்னதான் இருக்கின்றது அந்த வீடியோவில்? அந்த மாணவன் தனது தந்தையிடம் “அப்பா என்னுடைய காதலி கர்ப்பமாக இருக்கிறாள்” என்று தனது தந்தையிடம் அந்த மாணவன் கூறியதற்கு தந்தை காட்டும் ரியாக்ஷன் என்ன என்பதை காட்டுவதுதான் அந்த வீடியோ.
20 வயது கல்லூரி மாணவனான பிரதீக் வர்மா என்பவர் வீடியோ கேமரா ஒன்றை மறைத்து வைத்துவிட்டு, பின்னர் தனது தந்தையை தனிமையில் அழைத்து தான் ஒரு விஷயம் கூறப்போவதாகவும், அதை கேட்டு அவர் கோபப்படக்கூடாது என்றும் கூறிவிட்டு பின்னர் தனது காதலி கர்ப்பமாக இருக்கிறாள்.
அதனால் எனக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரதீக் வர்மாவின் தந்தை சுந்தர் வர்மா, காலால் எட்டி உதைத்ததோடு, மாறி மாறி கையால் அடிக்கிறார். பின்னர் ஒரு வாட்டர் பாட்டிலை எடுத்து அடிக்க வருகிறார்.
அதன்பின்னர் பிரதீக்வர்மா, தனது தந்தையிடம் ஒரு வீடியோவை விளையாட்டுக்காக எடுகக் நினைத்ததாகவும், தான் சொன்னது எல்லாமே பொய் என்றதுதாம் சுந்தர்வர்மா நிம்மதியுடன் செல்கிறா.ர்
இந்த வீடியோவை பிரதீக் வர்மா, யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்த இரண்டே நாட்களில் சுமார் 5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். யூடியூப் இணையதளம் இந்த வீடியோவிற்காக பிரதீக் வர்மாவுக்கு மில்லியன் கணக்கில் பணம் கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.