Site icon ilakkiyainfo

அமெரிக்காவில் நடுரோட்டில் பெண்ணை புரட்டி புரட்டி அடிக்கும் போலீஸ் அதிகாரி (அதிர்ச்சி வீடியோ)

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது பெண்ணை நெடுஞ்சாலை காவல்துறை அதிகாரி ஒருவர் சாலையில் படுக்கவைத்து அந்த பெண்ணின் முகத்தில் பயங்கரமாக தாக்கிய சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு நடுத்தர வயது பெண் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் மீது சந்தேகம் கொண்ட நெடுஞ்சாலை காவல்துறை அதிகாரி அந்த பெண்ணை நிற்க சொன்னார்.


ஆனால் அந்த பெண் நிற்காமல் தொடர்ந்து நடந்து சென்றுகொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த காவல்துறை அதிகாரி மிகவேகமாக அவருடைய பின்னால் சென்று அந்த பெண்ணை கீழே தள்ளி அவருடைய முகத்தில் மிகக்கடுமையாக தாக்கினார்.

தனது கைகளால் காவல்துறை அதிகாரியின் தாக்குதலை தடுக்க முயற்சி செய்தும் பெண்ணின் முகத்தில் ரத்தம் கொட்டியது.

Exit mobile version