அமெரிக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் பேய் ஒன்று நடந்து சென்று கொண்டிருந்த ஒரு மனிதனை கீழே தள்ளி சிறிது தூரம் இழுத்து சென்ற அதிர்ச்சியான காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியானபோது பல மில்லியன் இணைய பயனாளிகள் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் 24 வயதுள்ள ஒரு இளைஞன் காரிடார் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென எதிரே தோன்றிய கரிய நிழல் உருவம் ஒன்று அந்த இளைஞனை பிடித்து கீழே தள்ளியது.
பின்னர் அந்த இளைஞனின் வலது காலை சிறிது தூரம் இழுத்து சென்றது. இளைஞர் பயத்தில் பயங்கரமாக அலறினார். பின்னர் அந்த உருவம் திடீரென மறைந்தது, இளைஞர் மிகுந்த பயத்துடன் திரும்பி ஓடிவந்துவிட்டார்.
இந்த அதிர்ச்சி காட்சிகள் அனைத்தும் அந்த ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த ஓட்டலில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் இந்த வீடியோவை யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்.
சிலமணி நேரத்தில் பல மில்லியன் இணைய பயனாளிகள் இந்த வீடியோவை பார்த்து தங்களுடைய அதிர்ச்சியை தெரிவித்துள்ளனர். சமூக இணையதளமான ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரிலும் இந்த வீடியோ பதிவாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.