ilakkiyainfo

இரு குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை: வெளிநாடு சென்ற மனைவி மீது சந்தேகம் கொண்டதால் விபரீதம் (வீடியோ)

இரு குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை: வெளிநாடு சென்ற மனைவி மீது சந்தேகம் கொண்டதால் விபரீதம் (வீடியோ)
July 02
19:00 2014
எட்டியாந்தோட்டையில் கொடூரம்:  எட்­டி­யாந்­தோட்டை, வீ ஓய­வத்த – மலல்­பொல கொடஸ் பகு­தியில் உள்ள தோட்டப் புற வீடொன்றில் தந்தை ஒருவர் தனது இருகுழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்­க­வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது ஏழு­வ­ய­தான, ரம்யா சத்­து­ரங்கி என்ற மகள் மற்றும் மூன்று வய­தான சலிந்து சசன்க என்ற மகன் ஆகி­யோரே இவ்­வாறு கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும்   சந்­தேகத்தின் பேரில் இக் குழந்தைகளது தந்தையான ஜோஸப் பிரான்ஸிஸ் ராஜா என்பவரை கைது செய்­துள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண தெரி­வித்தார்.

kulanhaiஎட்­டி­யாந்­தோட்டை பொலி­ஸா­ரினால் கைது செய்­யப் பட்­டுள்ள 35 வய­து­டைய ராஜா என அறி­யப்­படும் குறித்த தந்தை, தனது மனைவி மீது ஏற்­பட்ட சந்தே­கத்தின் அடிப்­ப­டையில் இந்தக் கொலையை செய்­த­தா­கவும் தானும் தற்­கொலை செய்­து­கொள்ள முயன்ற போதிலும் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் வாக்குமூலம் அளித்­துள்­ள­தா­க சிரேஷ்ட பொலிஸ் எட்டியாந்தோட்டை… அத்­தி­யட்சர் அஜித் ரோஹன மேலும் குறிப்­பிட்டார்.

நேற்று அதி­காலை 2.10 மணி­ய­ளவில் எட்­டி­யாந்­தோட்டை பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற அழைப்­பொன்றை அடுத்து வீ ஓய­வத்தை, மலல்பொல கொடஸ் பகு­திக்கு பொலிஸார் சென்­றுள்­ளனர்.

இதன் போது அங்­குள்ள தோட்ட வீடொன்­றி­லி­ருந்து இரு பிள்­ளை­களின் சட­லங்­களை மீட்­டுள்­ளனர். இதனை அடுத்தே அப்­பிள்­ளை­களின் பாது­கா­வ­ல­னாக இருந்த 35 வய­து­டைய ஜோஸப் பிரான்சிஸ் ராஜா எனப்­படும் தந்­தையை பொலிஸார் கைது செய்­துள்ள்னர்.

சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

இந்த இரட்டைக் கொலையின் சந்­தேக நப­ரான ஜோஸப் பிரான்ஸிஸ் ராஜா அவிசாவ­ளையில் உள்ள ஆடை தொழிற்­சாலை ஒன்றில் தொழில் புரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தனது 7 வயது மகள் மற்றும் 3 வயது மகன் ஆகி­யோரை அவரே பரா­மரித்து வந்­துள்ளார். ராஜாவின் மனை­வி­யான விஜ­ய­லட்­சுமி கடந்த ஒன்­றரை  வரு­டங்­க­ளுக்கு  முன்னர் வீட்டுப்  பணிப்­பெண்­ணாக வேலை வாய்ப்பு பெற்று மத்­திய கிழக்கு நாடொன்­றுக்கு சென்­றுள்ளார்.

அங்கு வைத்து அவ­ருக்கு பிறி­தொரு நப­ருடன் தொடர்பு ஏற்­பட்­டுள்­ளது. இத் தொடர்பு குறித்து இலங்­கையில் உள்ள தனது கணவர் ராஜா­வுக்கு மனைவி அறி­வித்­துள்ளார். இதனால் கவலை கொண்­டுள்ள நிலை­யி­லேயே தனது இரு பிள்­ளை­க­ளையும் கொன்­று­விட்டு தனும் தற்­கொலை செய்யும் முடிவை எடுத்­துள்ள ராஜா தனது இரு பிள்­ளை­க­ளையும் கொலை செய்­துள்ளார்.

நேற்று அதி­காலை ஒரு மணிக்கும் இரண்­டு­ம­ணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் பிள்­ளை­களை கொலை செய்­து­விட்டு அருகில் உள்ள தனது மைத்­து­னரின் வீட்­டுக்கு சென்று எல்லாம் முடிந்­து­விட்­டது என ராஜா கூறி­யுள்­ள­துடன் தன்­னையும் கொலை செய்­து­வி­டு­மாறு கேட்­டுள்ளார்.

இதனை அடுத்து ராஜாவின் வீட்­டுக்கு உற­வி­னர்கள் சென்று பார்த்த போது அங்கு இரு பிள்­ளை­களும் கொலை­செய்­யப்­பட்டு தூக்கிலிட்பட்டிருந்தனர். சம்பவம் தொடர்பில் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கவே பொலிஸார் விரைந்து சட­லங்களை மீட்­டுள்­ளனர்.

இந் நிலை­யி­லேயே குறித்த பிள்­ளை­களின் தந்தை பொலி­ஸா­ரினால் உடன் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

எனது மனைவி இன்­னொ­ரு­வ­ருடன் உறவு கொண்­டுள்ளார். அவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரு­கின்றார். அவ­ரது உறவு தொடர்பில் தெரிந்­து­கொண்ட பின்­ன­ரேயே இந்த முடி­வுக்கு வந்தேன்’ என சந்­தேக நப­ரான ராஜா யட்­டி­யாந்­தோட்டை பொலி­ஸா­ருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தையடுத்து ருவன்வெல்ல நீதிவான் ஸ்தலத்திற்குச் சென்று விசாரணைகளை நடத்தியுள்ளார். மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸர் முன்னெடுத்துள்ளனர்.

குடும்பத் தகராறினால் தனது 3 1/2 வயது மற்றும் 7 வயது பிள்ளைகள் இருவரையும் தந்தை கொலை செய்த சம்பவமொன்று எட்டியாந்தோட்டை வீஓயா மலல்பொல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

பிள்ளைகள் இருவரையும் கொலை செய்த பின்னர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் தந்தை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

– See more at: http://www.thinakkural.lk/article.php?local/e1zjevzeer63907298332f0416794dnbcuac004a0ca44cc69ecf6f6binzsn#sthash.BnzNU4vH.dpuf

கடிதம் எழுதி வைத்து விட்டு உயர்தர மாணவி தலைமறைவு
02-06-2014

மட்டக்களப்பு  செங்கலடி மத்திய கல்லூரியின் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவி ஒருவரை கடந்த பத்து நாட்களாக காணவில்லையென ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. வந்தாறுமூலை உப்போடை வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவி கடந்த மாதம் கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு அதிகாலை நேரம் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

தனவந்தர் ஒருவரது உதவியுடன் தான் உயர் கல்வியைத் தொடரப் போகிறேன். ஐந்து வருடங்களின் பின்னரே வீடு திரும்புவேன் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏறாவூர் பொலிஸார் இச்சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

– See more at: http://www.thinakkural.lk/article.php?local/0xqjkkoaai3177d3630410c510393kxpeh1e60941a9001a46871070ebjqrm#sthash.K3Vq4AHS.dpuf

4039_content_letter-girl-04-5533064மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவி ஒருவரை கடந்த பத்து நாட்களாக காணவில்லையென ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

வந்தாறுமூலை உப்போடை வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவி கடந்த மாதம் கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு அதிகாலை நேரம் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

தனவந்தர் ஒருவரது உதவியுடன் தான் உயர் கல்வியைத் தொடரப் போகிறேன். ஐந்து வருடங்களின் பின்னரே வீடு திரும்புவேன் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏறாவூர் பொலிஸார் இச்சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் விமல் மீது இத்தாலியில் தாக்குதல்!

indexரோம்: இத்தாலியில் பொது பலசேனாவை கடுமையாக விமர்சித்துப் பேசிய இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச மீது அக்கட்சியினர் தாக்குல் நடத்தியுள்ளனர்.இத்தாலி வாழ் சிங்கள மக்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை அமைச்சரான விமல் வீரவன்ச இத்தாலி சென்றுள்ளார். அதன்படி, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீரவன்ச அங்கு நிகழ்த்திய உரையில் புத்த துறவிகளின் அமைப்பான பொது பலசேனாவைப் பற்றி மிகக் கடுமையாக விமர்ச்சித்து பேசியதாகக் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர், விமலின் பேச்சை எதிர்க்கும் வகையில் அவரது சட்டையை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தகவலை உறுதி செய்த பொது பலசேனாவின் தேசிய அமைப்பாளரான வித்திர தெனிய நந்த தேரோ, தாக்குதல் நடத்தியவர்கள் பொதுபல சேனாவைப் பற்றி இங்கு பேசக் கூடாது என அமைச்சரிடம் தெரிவித்தாகவும், அப்போது, அமைச்சரின் பாதுகாவலர்கள் விமல் வீரவன்சவை பாதுகாத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com