ilakkiyainfo

அமைதிக்கான நோபல் பரிசு பெறும் கொலம்பிய அதிபர் !

அமைதிக்கான நோபல் பரிசு பெறும் கொலம்பிய அதிபர் !
October 08
03:57 2016

உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், சமாதானம் ஆகிய துறைகளில் சாதனை படைக்கிறவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானி யோஷினோரி ஒசுமிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் தவ்லெஸ், டங்கன் ஹால்டன், மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகிய 3 பேருக்கும் கூட்டாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

வேதியியலுக்கான நோபல் பரிசு, பிரான்ஸைச் சேர்ந்த ஜீன்-பியர் சவாஜ், பிரிட்டனின்ஜே. ஃபிரேஸர் ஸ்டட்டார்ட், நெதர்லாந்து நாட்டின் பெர்னார்டு ஃபெரிங்கா ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கபட்டது.கொலம்பிய அதிபர் மேனுவல்சாண்டோஸ்க்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

தென் அமெரிக்க நாடான கொலம்பியா  50 ஆண்டுகளுக்கும் மேலாக இடது சாரி கிளர்ச்சியாளர்களால் பாதிக்கப்பட்டு இருந்தது.

இந்த கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்துவதில் மேனுவல்சாண்டோஸ் முக்கிய பங்காற்றினார்.

நார்வே தலைநகர் ஆஸ்லோவில்  நோபல் குழு தலைவர் கோலி குஸ்மன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

About Author

Editor

Editor

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

இந்த குட்டி சாத்தான்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நான் சொல்ல தேவை இல்லை , இவங்களை ஒரு நாட்டில்...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com