ilakkiyainfo

அம்மா பக்கத்து அறையில் இருக்க நடிகையின் ஆடையை அவிழ்த்த இயக்குனர்

அம்மா பக்கத்து அறையில் இருக்க நடிகையின் ஆடையை அவிழ்த்த இயக்குனர்
October 16
14:30 2018

மும்பை: அம்மா பக்கத்து அறையில் இருக்கும்போதே நடிகையின் ஆடையை அவிழ்த்து சில்மிஷம் செய்துள்ளார் பிரபல இயக்குனர் சஜித் கான். பாலிவுட் இயக்குனர் சஜித் கான் மீது 3 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.

நடிகைகள், பெண் பத்திரிகையாளர் முன்பு தனது மர்ம உறுப்பை காட்டி அட்டகாசம் செய்துள்ளார். இந்நிலையில் நடிகை சிம்ரன் சுரி சஜித் கான் மீது புகார் தெரிவித்துள்ளார். அவர் சஜித் கான் பற்றி கூறியிருப்பதாவது,
2012ம் ஆண்டு அந்த சம்பவம் நடந்தது. ஹிம்மத்வாலா படத்திற்கு நடிகர், நடிககைளை தேர்வு செய்து கொண்டிருந்தார்.

ஆடிஷனுக்காக தனது வீட்டிற்கு வருமாறு சஜித் கான் எனக்கு போன் செய்தார். நானும் அவர் வீட்டிற்கு சென்றேன். அவர் டிரெட்மில்லில் இருந்தார். என் உடம்பை பார், எவ்வளவு நன்றாக உள்ளது என்றார்.

ஆடிஷனுக்கு வரச் சொல்லிவிட்டு இந்த சஜித் கான் ஏன் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். சிறிது நேரத்தில் அவர் என்னை ஆடையை அவிழ்க்குமாறு கூறினார்.

நான் தான் இயக்குனர். உங்களின் உடம்பை பார்க்க வேண்டும் என்றார். நான் ஆடையை அவிழ்க்காமல் நின்று கொண்டிருந்தேன்.

சஜித் கான் என் மேலாடை கீழே இழுத்து அவிழ்க்கப் பார்த்தார். உடம்பை காட்டு, இதில் என்ன இருக்கிறது என்றார். நான் அதிர்ச்சி அடைந்து அவரை திட்டத் துவங்கினேன்.

எனக்கு அழுகை வந்துவிட்டது. உடனே அவர் கத்தாதே, பக்கத்து அறையில் என் அம்மா இருக்கிறார். அவர் காதில் விழுந்துவிடப் போகிறது என்றார்.

சஜித் வீட்டில் இருந்து வெளியே வந்த நான் என் செல்போனில் அவரின் எண்ணை நீக்கிவிட்டேன். ஆனால் அவர் ஒரு மணிநேரத்தில் எனக்கு மீண்டும் போன் செய்து, நாம் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்றால் ஒருவரையொருவர் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார். நான் அவரை திட்டிவிட்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டேன்.

சஜித் பற்றி வெளியே சொல்ல வேண்டும் என்று 6 ஆண்டுகளாக நினைத்தேன். ஆனால் அவர் பெரிய ஆள். அவர் மீது நான் புகார் தெரிவித்தால் யாரும் கேட்க மாட்டார்கள். அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சஜித் பற்றி நடிகைகள் சலோனி சோப்ரா, ரேச்சல் ஒயிட் புகார் தெரிவித்ததை பார்த்து தான் எனக்கு தைரியம் வந்தது என்கிறார் சிம்ரன் சுரி

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com