ilakkiyainfo

அர­சியல் கைதி­களும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும்-கபில் (கட்டுரை)

அர­சியல் கைதி­களும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும்-கபில் (கட்டுரை)
October 15
17:18 2018

அர­சியல் கைதிகள் உள்ளே நடத்தும் போராட்­டத்தை வைத்து வெளியே அர­சியல் செய்­வ­தற்கும் அவர்­களின் விடு­த­லைக்கு தாமே உத­வி­ய­தாக தம்­பட்டம் அடிப்­ப­தற்கும் தாரா­ள­மா­கவே அர­சி­யல்­வா­திகள் இருக்­கி­றார்கள்.

இந்த விவ­கா­ரத்தை வைத்து அர­சியல் இலாபம் தேடிக்கொள்­வதில் அர­சி­யல்­வா­திகள் மாத்­திரம் அக்­க­றைப்­ப­டு­கி­றார்கள் எனக் கூற­மு­டி­யாது. அதற்கு அப்­பா­லுள்­ள­வர்­க­ளுக்கும் அந்த ஆர்வம் உள்­ளது

தமிழ்த் தேசிய அர­சி­யலில் அவ்­வப்­போது சில பிரச்­சி­னைகள் திடீ­ரென மேற்­ப­ரப்­புக்கு வரு­வதும், பின்னர் தணிந்து போவதும் இயல்­பான ஒன்­றாகி விட்­டது.

இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பில் இருந்து காணி­களை விடு­வித்தல், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் பிரச்­சினை, அர­சியல் கைதி­களின் விடு­தலை சார்ந்த பிரச்­சினை போன்­ற­வற்றை இவ்­வாறு குறிப்­பி­டலாம்.

இந்தப் பிரச்­சி­னைகள் காலத்­துக்குக் காலம் மேல்­நோக்கி எழுந்து வரும், போராட்­டங்கள் நடக்கும். அர­சி­யல்­வா­திகள் கொதிப்­புடன் பேசு­வார்கள். மாறி­மாறி ஒருவர் மீது மற்­றவர் சேற­டித்துக் கொள்­வார்கள். கடை­சியில் எல்­லாமே தணிந்து போகும்.

இந்த வகையில் இப்­போது, மீண்டும் தலை­தூக்­கி­யி­ருப்­பது, அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கான போராட்டம்.

அநு­ரா­த­புர சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதிகள் 8 பேர், ஒன்­பது ஆண்­டு­க­ளாக சிறையில் கழித்­து­விட்ட தம்மை, குறு­கி­ய­கால புனர்­வாழ்­வுக்கு அனுப்பி விடு­விக்க வேண்டும் என்று கோரி உண்­ணா ­வி­ரதப் போராட்­டத்தை ஆரம்­பித்­தனர்.

கிட்­டத்­தட்ட ஒரு மாத­மாக நடக்கும் இந்தப் போராட்­டமும் அதனை வைத்து நடத்­தப்­படும் அர­சி­யலும் தான் இப்­போது தமிழ் அர­சியல் பரப்பின் முக்­கிய விட­ய­மாக மாறி­யி­ருக்­கி­றது.

அநு­ரா­த­புர சிறைச்­சா­லையில் 8 பேர் தொடங்­கிய போராட்­டத்தில் இப்­போது 10 பேர் பங்­கெ­டுக்­கின்­றனர். மகசின் சிறைச்­சா­லைக்கும் இந்தப் போராட்டம் பரவி அங்கும், 45 கைதிகள் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். ஆக 55 அர­சியல் கைதி­களின் போராட்டம் ஒரு பக்கம் நடக்க, அதனை வைத்துக் கொண்டு வெளி­யேயும் ஒரு அர­சியல் போராட்டம் நடந்து கொண்­டி­ருக்­கி­றது.

தமிழ் அர­சி­யல்­வா­திகள் ஒரு பக்­கமும், அர­சாங்­கத்தில் இருக்கும் அர­சி­யல்­வா­திகள் இன்­னொரு பக்­க­மு­மாக இந்த விவ­கா­ரத்தைப் பந்­தாடிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ்- குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்டு தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்கள், வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­ட­வர்கள், இன்­னமும் வழக்குத் தாக்கல் செய்­யப்­ப­டா­த­வர்கள் என்று மூன்று வகை­யா­ன­வர்கள்- இந்த அர­சியல் கைதி­களின் பட்­டி­யலில் உள்­ள­டங்­கி­யுள்­ளனர்.

இவர்­களின் பெரும்­பா­லா­ன­வர்­க­ளுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டி­ருக்கும் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு அடிப்­ப­டை­யாக இருப்­பதே, குற்­ற­ஒப்­புதல் வாக்­கு­மூலம் தான். ஆனால், நீதி­மன்­றத்தில் சுய­மாகப் பெறப்­ப­டாத குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூலம் நிரா­க­ரிக்­கப்­படும்.

வேறு ஆதா­ரங்கள் ஏது­மின்றி, குற்­ற­ஒப்­புதல் வாக்­கு­மூ­லங்­களை மாத்­திரம் வைத்­துக்­கொண்டு, பெரும்­பா­லான அர­சியல் கைதி­க­ளுக்கு எதி­ரான வழக்­கு­க­ளையும், வழக்­குத்­தாக்கல் செய்­வ­தையும் இழுத்­த­டித்துக் கொண்­டி­ருக்­கி­றது அர­சாங்கம்.

தற்­போது 107 அர­சியல் கைதிகள் இருப்­ப­தாக சில புள்ளி விப­ரங்கள் கூறு­கின்­றன. ஆனால், அர­சாங்­கமோ அர­சியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று கூறு­கி­றது.

நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள இதனைத் தாம், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் மற்றும் சுமந்­தி­ர­னிடம் கூறி­விட்­ட­தாக தெரி­வித்­துள்ளார்.

ஆனால், தமிழ் மக்­களின் அர­சியல் போராட்­டங்­களில் பங்­கேற்­ற­தற்­காக பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் அர­சியல் கைதிகள் தான் என்று, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், ஏனைய தமிழ் கட்­சிகள், அமைப்­பு­களும் வாதி­டு­கின்­றன.

அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான போராட்­டங்கள், போர் முடி­வுக்கு வந்த காலத்தில் இருந்து- கடந்த 10 ஆண்­டு­க­ளாக நடந்து வரு­கின்­றன. இந்தப் போராட்­டங்கள் முழு அளவில் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை எனக் கூற­மு­டி­யாது. முன்னர் பல நூற்­றுக்­க­ணக்கில் இருந்த அர­சியல் கைதி­களின் எண்­ணிக்கை, இப்­போது, 107 ஆக குறைந்­தி­ருக்­கி­றது. அதற்கு இந்தப் போராட்­டங்கள் தான் காரணம்.

9 தொடக்கம், 25 ஆண்­டுகள் வரை சிறையில் கழித்த அர­சியல் கைதிகள் பலர் உள்­ளனர். இவர்­களை விடு­தலை செய்­வ­தற்கு அர­சியல் ரீதி­யாக அழுத்­தங்கள் கொடுக்­கப்­பட்­டாலும், அதனை அர­சாங்கம் பெரும்­பாலும் பொருட்­ப­டுத்­த­வில்லை என்றே கூறலாம்.

அர­சியல் கைதி­களின் விடு­தலை குறித்து, ஜனா­தி­பதி, பிர­தமர், நீதி அமைச்சர், சட்­டமா அதிபர் என்று மாறி மாறி பேச்­சுக்கள் நடத்­தப்­ப­டு­கின்ற போதிலும், ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும், வாக்­கு­று­திகள் அல்­லது நழு­வ­லான பதில்­க­ளுடன் முடிந்து போகி­றது.

சில சம­யங்­களில் உண்­ணா­வி­ரதப் போராட்­டங்கள் உச்­ச­ம­டை­கின்ற போது, அர­சாங்­கமும், அர­சாங்­கத்தின் சார்­பாக தமிழ் அர­சியல் தலை­மை­களும் வாக்­கு­று­தி­களை அளிப்­பதும், அதனால் போராட்­டங்கள் கைவி­டப்­ப­டு­வதும் வழக்கம்.

எனினும், இந்தப் பிரச்­சினை மாத்­திரம் முடி­வுக்கு வரு­வ­தாக இல்லை.

இப்­போ­தைய போராட்டம் ஒரு மாத­மா­கியும், உரிய தீர்வை எட்­டு­வ­தற்கு பல பேச்­சுக்கள் நடத்­தப்­பட்ட போதும்- எது­வுமே பல­ன­ளிக்­க­வில்லை. அலரி மாளி­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சட்­டமா அதிபர், நீதி­ய­மைச்சர் உள்­ளிட்­ட­வர்­க­ளுடன் இரா.சம்­பந்­தனும், சுமந்­தி­ரனும் ஒரு­முறை பேசி­னார்கள்.

அமெ­ரிக்­கா­வுக்குச் சென்­றி­ருந்த ஜனா­தி­பதி வந்­ததும் பேச்சு நடத்­தலாம் என்று அதன் போது உறுதி அளிக்­கப்­பட்­டது.

அதற்குப் பின்னர் நீதி­ய­மைச்சில் ஒரு பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டது, அதிலும் முடிவு காணப்­ப­ட­வில்லை.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன், இரா.சம்­பந்தன் பேசு­வ­தற்கு எடுத்த முயற்­சி­களும் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. சம்­பந்­த­னுடன் பேசு­வ­தற்கு இட­ம­ளிக்­காமல் ஜனா­தி­பதி நழுவிக் கொண்­டி­ருக்­கிறார்.

இந்தப் பிரச்­சி­னையை பாரா­ளு­மன்­றத்தில் எழுப்­பிய போது, நீதி­ய­மைச்சர் வெளி­நாடு சென்­றி­ருக்­கிறார். அவர் நாடு திரும்­பி­யதும் பேசி முடி­வெ­டுக்­கலாம் என்று பதி­ல­ளித்­தி­ருக்­கிறார் பிர­தமர்.

அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பாக அர­சியல் ரீதி­யான தீர்­மானம் ஒன்றை எடுப்­ப­தற்கு ஜனா­தி­ப­தியோ, அர­சாங்­கமோ தயா­ராக இல்லை.

அதனால் தான், ஜனா­தி­பதி, பிர­தமர், சட்­டமா அதிபர், நீதி­ய­மைச்சர் என்று வெளி­நாடு செல்­வதை சாட்­டாக வைத்து இழுத்­த­டித்துக் கொண்­டி­ருக்­கின்­றது அர­சாங்கம்.

அதே­வேளை, தமிழ் அர­சியல் கைதி­களை எப்­படி விடு­தலை செய்ய வேண்டும் என்ற விட­யத்­திலும் தமிழர் தரப்­புக்குள் கருத்து ஒரு­மைப்­பாடு இல்லை.

அநு­ரா­த­புர சிறையில் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் அர­சியல் கைதிகள், தம்மை குறு­கிய கால புனர்­வாழ்­வுக்கு அனுப்பி விடு­விக்க வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்­தி­ருந்­தனர்.

அதே­வேளை, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்போ, அனைத்து அர­சியல் கைதி­க­ளையும் பொது­மன்­னிப்பின் அடிப்­ப­டையில் விடு­தலை செய்ய வேண்டும் என்று கோரு­கி­றது.

ஆனால், அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான அமைப்பின் அமைப்­பா­ள­ரான அருட்­தந்தை சக்­திவேல், நிபந்­த­னை­யின்றி அர­சியல் கைதி­களை விடு­விக்க வேண்டும், பொது­மன்­னிப்பு என்ற விடயம் பொருத்­த­மற்­றது என்­கிறார்.

அர­சியல் கைதிகள் உள்ளே நடத்தும் போராட்­டத்தை வைத்து வெளியே அர­சியல் செய்­வ­தற்கும், அவர்­களின் விடு­த­லைக்கு தாமே உத­வி­ய­தாக தம்­பட்டம் அடிப்­ப­தற்கும் தாரா­ள­மா­கவே அர­சி­யல்­வா­திகள் இருக்­கி­றார்கள்.

இந்த விவ­கா­ரத்தை வைத்து அர­சியல் இலாபம் தேடிக் கொள்­வதில் அர­சி­யல்­வா­திகள் மாத்­திரம் அக்­க­றைப்­ப­டு­கி­றார்கள் எனக் கூற­மு­டி­யாது. அதற்கு அப்­பா­லுள்­ள­வர்­க­ளுக்கும் அந்த ஆர்வம் உள்­ளது.

அநு­ரா­த­புர சிறையில் அர­சியல் கைதிகள் போராட்­டத்தை ஆரம்­பித்த ஒரு சில நாட்­களின் பின்னர், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் அங்கு சென்று அர­சியல் கைதி­களை பார்­வை­யிட்டார். அர­சுடன் பேசு­வ­தாக உறு­தி­ய­ளித்தார்.

அதற்கு சில நாட்­களின் பின்னர், மகசின் சிறைச்­சா­லைக்குச் சென்­றி­ருந்த இன்­னொரு தமிழ் அர­சி­யல்­வாதி வெளியே வந்து, கூட்­ட­மைப்­பினர் தம்மை வந்து பார்­வை­யிட்டு ஒன்­றரை வரு­டங்­க­ளா­கின்­றன என்று அர­சியல் கைதிகள் குறை கூறினர் என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை குறை­கூ­று­வது, குற்­றம்­சாட்­டு­வது, தமிழ் அர­சியல் பரப்பில் வழக்­க­மான ஒரு உத்­தி­யாக மாறி­யி­ருக்­கி­றது. அநு­ரா­த­புர சிறைச்­சா­லைக்குச் சென்று வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் கஜேந்­தி­ரனும் இதனைத் தான் கூறி­யி­ருந்தார்.

தம்மை விடு­தலை செய்­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு போதிய நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை, கடந்த முறை வர­வு-­செ­லவுத் திட்­டத்தை ஆத­ரிப்­ப­தற்கு இதனை ஒரு நிபந்­த­னை­யாக முன்­னி­றுத்த தவறி விட்­டது என்­றெல்லாம் அர­சியல் கைதிகள் குறை­பட்டுக் கொண்­ட­தாக தக­வல்கள் வெளி­யி­டப்­ப­டு­கின்­றன.

அர­சாங்­கத்­துடன் பேரம்­பேசக் கிடைக்கும் வாய்ப்­பு­களை கூட்­ட­மைப்பு தவற விடு­கி­றதா என்ற சந்­தே­கங்­களும் கேள்­வி­களும் பர­வ­லா­கவே இருக்­கின்­றன. ஆனாலும், இந்த விவ­கா­ரத்தில் கூட்­ட­மைப்பு ஒன்­றுமே செய்­யாமல் ஒதுங்­கி­யி­ருக்­கி­றது என்று கூற­மு­டி­யாது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்ட போது, அதற்கு எதி­ராக வாக்­க­ளிக்க, அர­சியல் கைதி­களின் விடு­த­லையை ஒரு நிபந்­த­னை­யாக முன் வைத்­த­தாக கூட்­ட­மைப்பு கூறி­யி­ருந்­தது.

அந்த வாக்­கெ­டுப்பில் பிர­தமர் ரணி­லுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த – ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின், சிவ­சக்தி ஆனந்தன், அலரி மாளி­கைக்குச் சென்று பிர­த­ம­ருடன் தனி­யாகப் பேச்சு நடத்­தி­யி­ருந்தார்.

அதன்­போது எழுத்­து­மூல உடன்­பாடு காணப்­பட்­டது என்றும், ஒரே ஒரு உறுப்­பி­னரைக் கொண்ட தம்மால் பேரம் பேசி இதனைச் செய்ய முடிந்த போது, 15 பேரைக் கொண்ட கூட்­ட­மைப்­பினால் செய்ய முடி­யாது போனது எப்­படி என்றும் அப்­போது கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

ஆனாலும், அந்த எழுத்­து­மூல உடன்­பாட்­டுக்கு என்ன நடந்­தது என்று தெரி­யாது. அது­போன்ற நிலை தான், கூட்­ட­மைப்­புக்கும் ஏற்­பட்­டது.

கடந்த முறை அர­சியல் கைதி­களின் போராட்டம் தீவிரம் பெற்ற போது, யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களும் போராட்­டத்தில் குதித்­தனர். கடை­சியில் அந்தப் போராட்டம் கைவி­டப்­பட்­டது.

ஆனால் இம்­முறை அர­சியல் கைதி­களின் போராட்டம் மூன்று வாரங்­க­ளாக தொடரும் வரை, யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் வாயைத் திறக்­க­வே­யில்லை.

கடந்த வாரம், அர­சியல் ஆய்­வாளர் ஒருவர், தனது பத்­தியில் இதனைச் சுட்­டிக்­காட்­டிய மறு­நாளே, யாழ். பல்­க­லைக்­க­ழகம் முன்­பாக போராட்டம் நடத்­தப்­பட்­டது. அதில் ஒரு மாணவன், ‘தமிழ்த் தலைமை தூங்­கு­கி­றதா?” என்று கேள்வி எழுப்பும் பதா­தை­யுடன் காணப்­பட்டார்.

மூன்று வாரங்­க­ளாக உண்­ணா­வி­ரதப் போராட்டம் நடந்து கொண்­டி­ருந்த போது அதனைக் கண்டு கொள்­ளாமல் இருந்­த­வர்கள், திடீ­ரென விழித்துக் கொண்டு போராட்­டத்­துக்கு வந்து, ”தமிழ்த் தலைமை தூங்­கு­கி­றதா?” என்று கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர்.

அவர்கள் அந்தப் போராட்­டத்­தையும், அதற்­க­டுத்த நாள் அநு­ரா­த­புர நோக்­கிய நடை­ப­வ­னி­யையும் ஆரம்­பிப்­ப­தற்கு இடையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மூன்று முறை அர­சாங்­கத்­துடன் பேசி­யி­ருந்­தது. மன்­னாரில் ஜனா­தி­பதி பங்­கேற்ற நிகழ்வில் சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் எம்.பி, இந்தப் பிரச்­சி­னையை எழுப்­பினார். ஆனாலும் எந்தப் பதிலும் கிடைக்­க­வில்லை. தீர்வும் கிடைக்­க­வில்லை.

அர­சியல் கைதிகள் விடயத்தில், அரசாங்கம் உருப்படியான தீர்மானம் எடுக்கும் நிலையில் இல்லை என்பதையே இது காட்டுகிறது. ஆளை ஆள் கைகாட்டி நழுவிக் கொள்வது தான், நடந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தை வைத்துக் கொண்டு, தமிழ் அரசியல் பரப்பில் அரசியல் இலாபம் தேடுவதும் தாராளமாக நடந்து கொண்டிருக்கிறது.

கடந்தவாரம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசிய போது, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதங்களை எழுதியும், பேச்சுக்களை நடத்தியும் களைத்துப் போய் விட்டேன் என்று அலுத்துக் கொண்டு கூறியிருந்தார்.

ஐந்து ஆண்டுகளாக அரசியல் செய்யும் அவருக்கே, களைத்துப் போய் விட்டது என்றால், 15, 20 ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தும் அரசியல் கைதிகளின் நிலை எத்தகையதாக இருக்கும்?

அவர்கள் சலிப்படைவது, தம் மீது சமூகமும், அரசியல்வாதிகளும் அக்கறைப்படவில்லை. குற்றம் சுமத்துவதிலும் அர்த்தம் உள்ளது.

அதனை வைத்துக் கொண்டு, வெளியே நிற்கும் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு அப்பட்டமாக அரசியல் செய்வது அபத்தமானது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com