ilakkiyainfo

அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: மஹிந்த உட்பட 48 எம்.பி.க்கள் பங்கேற்பு

அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: மஹிந்த உட்பட 48 எம்.பி.க்கள் பங்கேற்பு
March 17
16:22 2016

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் முக­மாக இன்­றைய தினம் பொது எதி­ர­ணி­யி­னரால் ஹைட் பார்க் மைதா­னத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த கூட்டத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலைமையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் 48 எம்.பி.க்கள்   கள­மி­றங்­  கி­யி­ருந்­தனர்.

அத்துடன் சுதந்திரக்கட்சியின் 30 இற்கும் மேற்பட்ட எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அத்துடன் இந்த போராட்­டத்­தில் பல்­லா­யிரக் கணக்­கான கட்சி ஆத­ர­வாளர்கள் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

 ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­காளி கட்­சியின் தலை­வர்­களும் கலந்து கொண்­டி­ருந்­த­மையை அவ­தா­னிக்க முடிந்­தது.

makinthasdஇன்று நடை­பெற்ற போராட்­டத்தின் கார­ண­மாக  கொழும்பில் பல பகு­தி­க­ளிலும் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமையை அவ­தா­னிக்க முடிந்­தது.

இதன்­போது வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை இணைக்காதே , எட்காவை உட­ன­டி­யாக நிறுத்து போன்ற கோஷங்­களை எழுப்­பிய வண்­ணமும் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் புகழ்­பா­டிய வண்­ணமும்  ஆத­ர­வா­ளர்­கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பல்வேறு காரணங்களை முன்வைத்து மஹிந்த அணியினர் இன்று இந்த கூட்டத்தை நடத்தியிருந்தனர்.

கூட்டத்தில் முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ , முன்னாள் சபா­நா­ய­கரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சமல் ராஜ­பக்ஷ, மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முன்னாள் தலைவர் சோமா­வன்ஸ அம­ர­சிங்க, முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் சரத் என் சில்வா , முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com