ilakkiyainfo

அரசு அதிகாரி காருடன் எரித்துக்கொலை: கைதான கள்ளக்காதலியின் உல்லாச வாழ்க்கை – பரபரப்பு தகவல்கள்

June 03
07:45 2016

சேலம் அருகே அரசு அதிகாரி காருடன் எரித்துக்கொன்ற வழக்கில் கைதான கள்ளக்காதலி பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சியில் நில அளவையராக பணிபுரிந்தவர் குவளை செழியன் (வயது 42).

இவர் கடந்த 26–ந்தேதி ஒமலூர் அருகே தீவட்டிபட்டியில் காருடன் எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, குவளை செழியனின் கள்ளக் காதலியான கார்த்திகேயனி தனது மற்றொரு கள்ளக்காதலன் இக்ரமுல்லா என்பவர் மூலம் சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கூலிப்படை உதவியுடன் அவரை கடத்தி எரித்து கொன்றது தெரிய வந்தது.

இதையடுத்து கார்த்திகேயனியை பிடித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் சேலம் கிச்சிப்பாளையம் பகுதி கூலிப்படையை சேர்ந்த ராஜா, முத்து உள்பட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது கார்த்திகேயனி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–

நானும் எனது கணவர் பால்ராஜூம் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் அம்மாபேட்டையில் வசித்தோம். அப்போது சேலத்தை சேர்ந்த இக்ரமுல்லா என்பவர் நடத்தி வந்த மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்தேன்.

இதனால் எனக்கும் இக்ரமுல்லாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. பின்னர் ஏற்காடு, ஊட்டி, கொல்லிமலை ஆகிய பகுதிகளுக்கு இக்ரமுல்லா என்னை அடிக்கடி அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார்.

இதற்கிடையே எனது கணவருக்கு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் நான் எனது கணவருடன் ஓசூரில் குடியேறினேன்.

எனது கணவர் பெங்களூருக்கு அதிகாலையிலே சென்றுவிட்டு நள்ளிரவு தான் வீடு திரும்புவார். இதனை பயன்படுத்தி இக்ரமுல்லா அடிக்கடி எனது வீட்டுக்கு வந்து என்னுடன் உல்லாசமாக இருப்பார்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூரில் சொந்த வீடு கட்ட இடம் வாங்கினோம். பின்னர் அந்த இடத்திற்கான பட்டா வாங்க ஒசூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றேன். பல மாதங்கள் அலைந்தும் பட்டா கிடைக்கவில்லை.

அப்போது சர்வேயர் குவளை செழியனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் எனக்கு ஒரு வாரத்திற்குள் பட்டா வாங்கி தருவதாக உறுதி அளித்தார். மேலும் தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு அழைத்தார்.

அதற்கு நான் முதலில் சம்மதிக்கவில்லை. மேலும் வீடு கட்டவும் வங்கியில் கடன் வாங்கி தந்தார்.

இதனால் எங்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது. பின்னர் நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். வெளியூர்களுக்கும் அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார்.

இதற்கிடையே பட்டாவையும் வாங்கி தந்த அவர் என்னை அடிக்கடி உல்லாசத்திற்கு அழைத்ததால் அவர் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அவரை கழற்றி விட முடிவு செய்தேன். ஆனால் குவளை செழியன் அடிக்கடி தொந்தரவு செய்தார்.

இது குறித்து பழைய கள்ளக்காதலன் இக்ரமுல்லாவிடம் தெரிவித்தேன். பின்னர் இருவரும் சேர்ந்து குவளை செழியனை தீர்த்து கட்டவும், அவரிடம் இருக்கும் பணத்தை பறிக்கவும் முடிவு செய்தோம்.

அதற்காக கடந்த 26–ந் தேதி செல்போனில் குவளை செழியனிடம் பேசிய நான் தனக்கு தெரிந்த இக்ரமுல்லா என்பவருக்கு ஒரு நிலத்திற்கான பட்டா வாங்கி கொடுக்கும்படி கூறினேன்.

அதன்படி அவரை இக்ரமுல்லா மற்றும் அவரது நண்பர்கள் கலைவாணன், சக்திவேல் ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது நான் கூறிய படி ரூ.50 லட்சம் பறிக்க குவளை செழியனை கடத்தி சென்றனர். பணத்தை தயாராக வைக்கும்படி குவளை செழியன் அவரது மனைவியிடம் பேசியதால் அவர் ஒசூர் போலீசில் புகார் செய்தார்.

இது குறித்த செய்தி டி.வி.யில் வெளியானதை பார்த்து பயந்து போன நான் குவளை செழியனை உயிருடன் விட்டால் நாம் போலீசில் சிக்கிக்கொள்வோம். எனவே அவரை கொன்று விடுமாறு இம்ரான்கானிடம் நான் போனில் கூறினேன்.

அதன்படி 27–ந் தேதி இரவு 12.30 மணியளவில் குவளை செழியனை, இக்ரமுல்லா சேலம் கிச்சிப்பாளைத்தை சேர்ந்த கூலிப்படையினர் மற்றும் சக்திவேல், கலைவாணன் உதவியுடன் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

பின்னர் போலீசில் சிக்காமல் இருப்பதற்காக அவரது உடலை ஒமலூர் அருகே உள்ள டேனிஸ் கோட்டை மலைப்பகுதியில் வைத்து எரிக்க முடிவு செய்து காரில் எடுத்து சென்றனர்.

15 கி.மீ. முன்பாக சகதியில் கார் சிக்கி கொண்டதால் அங்கிருந்து காரை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் போலீசில் சிக்கி விடுவோமோ? என்று மேலும் பயந்து போன அவர்கள் காருடன் குவளை செழியன் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர். கார் கொளுந்துவிட்டு எரிந்ததை பார்த்த 10 பேர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இதில் சக்திவேல் மட்டும் தீக்காயம் அடைந்ததால் தப்பியோட முடியாமல் அங்கு பதுங்கி இருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அனைவரும் போலீசில் சிக்கி கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

கைதான கார்த்திகேயனி மற்றும் கூலிப்படையினர் 7 பேரை கைது செய்து போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர். தீக்காயம் அடைந்த சக்திவேல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தலைமறைவான இக்ரமுல்லா மற்றும் அவரது நண்பர் கலைவாணன் ஆகிய 2 பேரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com