ilakkiyainfo

அல் ஹுசைன் கடும் எச்சரிக்கை!! : சர்வதேச நியாயாதிக்கத்தை நோக்கி நகரவேண்டிவரும் என்றும் ஜெனிவா அமர்வில் சுட்டிக்காட்டு

அல் ஹுசைன் கடும் எச்சரிக்கை!! :  சர்வதேச நியாயாதிக்கத்தை நோக்கி நகரவேண்டிவரும் என்றும் ஜெனிவா அமர்வில் சுட்டிக்காட்டு
September 12
16:48 2017

 

*தேவைப்­படின் மேலும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டலாம்

*காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தை அமை­யுங்கள்

*படை­யி­ன­ரி­ட­முள்ள காணி­களை விடு­வி­யுங்கள்

*பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் வழக்­கு­களை முடி­யுங்கள்

*பாதிக்­கப்­பட்ட மக்கள் விரக்தி அடைந்­துள்­ளனர்

*ஜெனிவா பிரே­ர­ணையை விரை­வாக அமுல்­ப­டுத்­தவும்

*மனித உரிமை பேர­வையை தணிப்­ப­தற்கு முயற்­சிக்க வேண்டாம்

*கால அட்­ட­வ­ணை­யுடன் முன்­னேற்­றங்கள் அவ­சியம்

இலங்­கை­யா­னது சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்டம், மற்றும் சர்­வ­தேச மனித உரிமை சட்­டங்கள் மீறப்­பட்­ட­தாக கூறப்­படும் விட­யத்தில் நம்­ப­க­ர­மான பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்­கா­விடின் இந்த விவ­காரம் சர்­வ­தேச நியா­யா­திக்­கத்தை நோக்கிப் பயணிக்கும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் கடு­மை­யாக எச்­ச­ரித்­துள்ளார்.

அத்­துடன் இது ஐ.நா. மனித உரிமை பேர­வையை தணிப்­ப­தற்­காக அர­சாங்கம் மேற்­கொள்ளும் முயற்­சி­யாக இருக்­கக்­கூ­டாது. மாறாக பாதிக்­கப்­ பட்ட மக்­களின் வேத­னையை ஆராய்­வ­தாக அமை­ய­வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனி­வாவில் ஆரம்­பித்­த­தை­ய­டுத்து முத­லா­வது அமர்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இதன்­போது 40 நாடு­களின் நிலைமை தொடர்­பாக பேர­வையின் அமர்வில் உறுப்பு நாடு­க­ளுக்கு விளக்­க­ம­ளித்த செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பில் முக்­கி­ய­மான சில விட­யங்­களை குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

அவர் நேற்­றைய ஜெனிவா அமர்வில் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;

இலங்கை அர­சாங்கம் காணா­மல்­போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தை உட­ன­டி­யாக நிறு­வ­வேண்டும் என்று அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்றேன். அது­மட்­டு­மன்றி மக்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்­திட்­டங்­க­ளையும் அர­சாங்கம் உட­ன­டி­யாக முன்­னெ­டுக்­க­வேண்டும்.

விசே­ட­மாக இரா­ணு­வத்­தினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள காணி­களை உட­ன­டி­யாக விடு­விக்­க­வேண்டும். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தினால் பதி­வு­செய்­யப்­பட்­டுள்ள வழக்­கு­களை உட­ன­டி­யாக தீர்க்­க­வேண்டும். இந்த வழக்­குகள் நீண்­ட­கா­ல­மாக தேங்­கிக்­கி­டக்­கின்­றன.

அது­மட்­டு­மன்றி பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­க­வேண்டும் என்றும் அதற்குப் பதி­லாக கொண்­டு­வ­ரப்­படும் சட்­ட­மா­னது சர்­வ­தேச தரத்­திற்கு அமை­வாக  இருக்­க­வேண்டும் என்று அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுக்­கின்றேன்.

மேலும் வடக்கில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ச்­சி­யாக போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். இதன்­மூலம் அர­சாங்­கத்தின் தாம­த­மான மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­யினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் விரக்­தி­ய­டைந்­துள்­ளனர் என்­பது தெளி­வா­கின்­றது.

அது­மட்­டு­மன்றி ஐ.நா. மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­த­வேண்­டு­மென்று அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்றேன்.

அத­னூ­டாக பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை அர­சாங்கம் உரு­வாக்கி அதன் செயற்­பா­டு­களை ஒரு கால­நேர அட்­ட­வ­ணைக்குள் செயற்­ப­டுத்­த­வேண்டும் என்றும் குறிப்­பி­டு­கின்றேன்.

இதே­வேளை இந்த செயற்­பா­டு­க­ளா­னது ஐக்கிய நாடுகள் மனித உரிமைபேரவையை தணிப்பதற்காக முன்னெடுக்கும் செயற்பாடுகளாக வெளிக்காட்டப்படக்கூடாது.

மேலும் இலங்கையானது சர்வதேச மனிதாபிமான சட்டம், மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டதாக கூறப்படும் விடயத்தில் நம்பகரமான பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்காவிடின் இந்த விவகாரம் சர்வதேச நியாயாதிக்கத்தை நோக்கிப் பயணிக்கும் என்பதையும் தெரிவிக்கின்றேன் என்றார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com