ilakkiyainfo

அழுத்தம் வருமா? பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)

அழுத்தம் வருமா? பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)
March 16
21:29 2019

இலங்கை அர­சாங்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறு­கின்ற தனது கடப்­பாட்டைத் தட்­டிக் ­க­ழிக்கும் நோக்­கத்­து­ட­னேயே காலத்தை இழுத்­த­டித்துச் செல்­கின்­றது. ஐ.நா.மனித உரிமைகள் பேர­வைக்கும் சர்­வ­தேச நாடு­க­ளுக்கும் நல்ல பிள்­ளை­யாகத் தன்னைக் காட்­டிக்­கொள்­கின்ற அதே­வேளை, சர்­வ­தேச அரங்கில் விட­யங்­களை ஒப்­புக்­கொள்­வதும், பின்னர் அவற்றைத் தூக்கி எறிந்து செயற்­ப­டு­கின்ற போக்­கையும் அது கடைப்­பி­டித்து வரு­கின்­றது.

சொல்­லுக்கும் செய­லுக்கும் இடையில் முற்­றிலும் முரண்­பா­டான நிலையில் செயற்­ப­டு­வது தனக்கு சர்­வ­தேச அளவில் பாதிப்­பையே ஏற்­ப­டுத்தும் என்­பதை அரசு உண­ரா­ம­லில்லை. இருப்­பினும் சர்­வ­தே­சமோ அல்­லது ஐ.நா. மனித உரிமைகள் பேர­வையோ இலங்­கைக்கு எதி­ராக அதி­கா­ர­பூர்­வ­மாக எத­னையும் செய்ய முடி­யாது என்ற தற்­து­ணிவில் காரி­யங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

சர்­வ­தே­சத்­திற்கு ஒரு முகத்­தையும், உள்­நாட்டில் சிங்­கள மக்கள் மற்றும் போர்ப்­பா­திப்­பு­க­ளுக்கு உள்­ளா­கிய தமிழ் மக்­க­ளுக்கு இரு­வேறு முகங்­க­ளையும் காட்­டு­வதில் இது­வ­ரையில் சிங்­கள அர­சுகள் வெற்­றி­பெற்­றி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது.

யுத்தம் முடி­வுக்கு வந்து பத்து வரு­டங்­க­ளா­கின்­றன. ஐ.நா. மனித உரிமைகள் பேர­வையில், உரிமை மீறல்­க­ளுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என்ற நிபந்­தனை ரீதி­யி­லான பொறுப்பை ஏற்று நான்கு வரு­டங்­க­ளா­கின்­றன. ஆயினும் தனது கடப்­பாட்டை நிறை­வேற்­று­வதில் உளப்­பூர்­வ­மா­கவும் நேர்­மை­யா­கவும் அர­சாங்­கங்கள் நடந்து கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

பொறுப்பு கூறும் விட­யத்தில் இரா­ணு­வத்­தையும், சிங்­கள மக்­க­ளையும் காட்­டிக்­கொ­டுக்­க­வில்லை. அவர்­களை உயர்ந்த நிலை­யொன்றில் வைத்து பேணி வரு­வ­தான ஒரு போக்­கையே ஆட்­சி­யா­ளர்கள் காட்டி வரு­கின்­றனர்.

இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்­ற­தாகக் கூறப்­ப­டுகின்ற மனித உரிமை மீறல்கள், யுத்­தக்­குற்றச் செயல்கள் என்­ப­வற்­றிற்கு முதல் நிலையில் இரா­ணு­வமே பொறுப்­பேற்க வேண்டும். உரிமை மீறல்கள், போர்க்­குற்­றங்கள் தொடர்பில் முதல் நிலையில் அர­சாங்­கங்­களே பதி­ல­ளிக்க வேண்­டிய நிலையில் இருந்­தன. இருக்­கின்­றன. ஆனால் இரண்டு நிலை­க­ளிலும் எந்­த­வி­த­மான பாதிப்­புக்கும் இட­ம­ளிக்கப் போவ­தில்லை என்­பதில் ஆட்­சி­யா­ளர்கள் உறு­தி­யாக இருக்­கின்­றனர்.

இதன் அடிப்­ப­டை­யி­லேயே அவர்கள் இறுதி யுத்­தத்­தின்­போது மனித உரி­மைகள் மீறப்­ப­ட­வில்லை என்றும், போர்க்­குற்­றங்கள் இழைக்­கப்­ப­ட­வில்லை என்றும் அடித்துக் கூறு­கின்­றனர். அதே­வேளை, எந்தக் கார­ணத்தைக் கொண்டும் இரா­ணு­வத்தைக் கைது செய்­யவோ இரா­ணுவ அதி­கா­ரி­களை நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­ப­டுத்தி, விசா­ர­ணை­க­ளுக்கு ஆளாக்கப் போவ­தில்லை என்ற நிலைப்­பாட்­டையும் அவர்கள் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இறை­மை­யுள்ள ஓர் அர­சாங்கம் என்ற ரீதி­யிலும், ஒரு நாடு என்ற அந்­தஸ்­திலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மனித உரிமை மீறல்கள், போர்க்­குற்றச் செயற்­பா­டுகள் என்­ப­வற்­றிற்கு வாய்­மொழி மூல­மா­கவும், பிரே­ர­ணை­களின் வழி­யா­கவும், அறிக்­கைகள் வடி­வி­லுமே இலங்கை அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்து வந்­துள்­ளது. அதற்கும் அப்பால் அர­சுக்கு அழுத்தம் கொடுக்­கின்ற வல்­லமை இல்­லாத நிலை­மை­யையே பேர­வை­யி­னதும், மனித உரிமைகள் ஆணை­யா­ள­ரி­னதும் செயற்­பா­டுகள் இது­வ­ரை­யி­லான காலப்­ப­கு­தியில் இருந்து வந்­தி­ருக்­கின்­றன.

543304-Pillayநவ­நீ­தம்­பிள்ளை மனித உரிமைகள் ஆணை­யா­ள­ராகப் பணி­யாற்­றி­ய­போது, இலங்­கைக்கு எதி­ராகக் கடும்­போக்­கினைக் கடைப்­பி­டித்து வந்தார். அதன் கார­ண­மா­கவே ஐ.நா.வின் ஓர் உயர்­மட்ட இரா­ஜதந்­தி­ரி­யாக இருந்த போதிலும், அவர் இலங்­கைக்கு விஜயம் செய்­த­போது, அவ­ருக்கு எதி­ரான கோஷங்­களை எழுப்­பியும் கண்­ட­னங்­க­ளை எழுப்­பிய அர­சியல் ரீதி­யான எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களைக் காண முடிந்­தது.

625.500.560.350.160.300.053.800.900.160.90தற்­போ­தைய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்­விலும், ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் மிச்சேல் பச்­சலட் ஜெரியா அம்­மையார் இலங்­கைக்கு எதி­ரான கடும்­போக்­கி­லான அறிக்­கை­யொன்­றையே சமர்ப்­பித்­துள்ளார்.

இந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள பரிந்­து­ரை­களை வரிக்­கு­வரி முழு­மை­யாக இலங்கை அரசு நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று அந்த அறிக்கை வெளி­யா­கி­யதைத் தொடர்ந்து கருத்து வெளி­யிட்ட சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் தென்­னா­சிய பிராந்­தி­யத்­திற்­கான ஆய்­வாளர் தியாகி ருவன் பத்­தி­ரண சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­க­ளுக்­கான சம்­ப­வங்கள் குறித்த உண்­மைகள் கண்­ட­றி­யப்­பட்டு, நீதி நிலை­நாட்­டப்­ப­டு­வ­துடன், இழப்­பீ­டுகள் வழங்­கப்­பட வேண்டும் என்­ப­துடன், மீள் நிக­ழா­மையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணை­யா­ளரின் அறிக்கை வலி­யு­றுத்­து­கின்­றது என தெரி­வித்­துள்ள ருவன் பத்­தி­ரண, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 30-/1 தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தாக அர­சாங்கம் அளித்த வாக்­கு­று­திக்கு அமை­வாக மனித உரிமைகள் ஆணை­யா­ளரின் அறிக்­கை­யையும் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

மனித உரிமைகள் ஆணை­யா­ளரின் அறிக்­கையை மனித உரிமைகள் பேரவை வர­வேற்க வேண்டும். ஐ.நா. தீர்­மா­னத்தின் நிகழ்ச்சி நிர­லுக்கு அமை­வாக இலங்­கையின் நிலை­மை­களைப் பேண வேண்டும். காலக்­கெடு ஒன்றின் அடிப்­ப­டையில் இலங்கை தனது கடப்­பாட்டை நிறை­வேற்றும் வகையில் கண்­கா­ணிப்­ப­துடன், 30-/1 தீர்­மா­னத்தை மீளு­று­திப்­ப­டுத்­த­ுவ­தற்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்­வ­தேச மன்­னிப்புச் சபையைச் சேர்ந்த ஆய்­வாளர் தியாகி ருவன் பத்­தி­ரண குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

இலங்­கையின் பொறுப்பு கூறு­கின்ற செயற்­பா­டுகள் கழுதை தேய்ந்து கட்­டெ­றும்­பா­கிய கதையைப் போன்று ஐ.நா. மனித உரிமைகள் பேர­வையின் 30/-1 தீர்­மா­னத்தை நீர்த்துப் போகச் செய்­கின்ற இலக்கை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கின்ற ஒரு சூழ்­நி­லையில், ஐ.நா. மனித உரிமைகள் பேர­வையின் 2019 ஆம் ஆண்டின் முற்­ப­கு­திக்­கான அமர்வு பயன்­த­ரத்­தக்க விளை­வு­களை ஏற்­ப­டுத்­துமா என்­பது முக்­கிய கேள்­வி­யாக எழுந்­துள்­ளது.

இலங்கை அர­சாங்­கத்தின் இணை அனு­ச­ர­ணை­யுடன் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட ஐ.நா.வின் 30/-1 தீர்­மானம், இது­வ­ரையில் காலத்தை இழுத்­த­டிக்­கின்ற ஒரு செயற்­பா­டா­கவே இருந்து வந்­துள்­ளது. சிறிய அள­வி­லான முன்­னேற்­றத்தை மாத்­திரம் தனது முத­லீ­டாகக் கொண்டு மேலும் மேலும் கால அவ­கா­சத்தைப் பெறு­வ­தி­லேயே அரசு குறி­யாக இருந்து இது­வ­ரையில் வெற்­றி­பெற்­றி­ருக்கின்றது.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமக்கு ஐ.நா.வின் செயற்­பா­டு­களின் ஊடாக நீதி கிடைக்கும் என கொண்­டி­ருந்த நம்­பிக்­கையை படிப்­ப­டி­யாக இழக்­கின்ற நிலை­மைக்கே ஆளா­கி­யி­ருக்­கின்­றார்கள். மெது மெது­வாக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்ற உத்­தியைக் கைக்­கொண்­டுள்ள அர­சாங்­கத்­திற்கு அர­சியல் ரீதி­யான கார­ணங்­க­ளுக்­காக ஆத­ரவு தெரி­வித்து வரு­கின்ற தமது அர­சியல் தலை­மை­யா­கிய தமிழ்த்­ தே­சிய கூட்­ட­மைப்பின் மீதும் பாதிக்­கப்­பட்ட மக்கள் நம்­பிக்கை இழந்து, தாங்­க­ளா­கவே நீதி கோரு­வ­தற்­கான போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள்.

இந்த நிலையில் மேலும் மேலும் அர­சுக்குக் கால அவ­காசம் வழங்­கு­வதை அவர்கள் கடு­மை­யாக எதிர்த்­துள்­ளார்கள். ஐ.நா.வின் கண்­கா­ணிப்பு இலங்கை மீது தொடர வேண்டும் என்­பதே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்புத் தலை­மையின் நிலைப்­பா­டாகும். அத்­த­கைய கண்­கா­ணிப்பு இல்­லாமல் போனால்,இலங்கை மீதான சர்­வ­தே­சத்தின் கவனம் அற்றுப் போய்­விடும். அத்­த­கைய ஒரு நிலையில் இழைக்­கப்­பட்ட அநி­யா­யங்­க­ளுக்கும், அநீ­தி­க­ளுக்கும் நீதி கிடைப்­பதும் அரி­தா­கி­விடும் என்­பதும் கூட்­ட­மைப்பின் நிலைப்­பா­டாகும்.

ஆனால் பாதிக்கப்­பட்ட மக்கள் நீதி­யையும் நியா­யத்­தையும் பெறு­வ­தற்கு எத்­தனை காலம் பொறுத்­தி­ருப்­பது? எத்­தனை காலம் காத்­தி­ருக்க முடியும் என கேள்வி எழுப்­பி­யி­ருக்­கின்­றார்கள்.

மனித உரி­மைகள் நிலை­மையில் இலங்கை முன்­னே­று­வ­தற்குப் பதி­லாக பின்­ன­டைவை நோக்­கிய சரிந்து செல்­கின்­றது என்­பதே யதார்த்­த­மாகும்.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கு­கின்ற பொறுப்பை தந்­தி­ரோ­பாய ரீதியில் தட்­டிக்­க­ழிக்­கின்ற போக்கைக் கடைப்­பி­டித்­துள்ள அர­சாங்­கங்கள், சிறு­பான்மை தேசிய இன­மா­கிய தமிழ் மக்­களின் இருப்பை கேள்­விக்கு உள்­ளாக்­கு­கின்ற நட­வ­டிக்­கை­களில் துணி­க­ர­மான தந்­தி­ரோ­பாய செயற்­பா­டு­க­ளையே முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றன.

எதேச்­ச­ாதி­கா­ரத்தைத் தகர்த்து, நல்­லாட்­சியை நிறு­விய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் தலை­மை­யி­லான அர­சாங்கம், கடும் போக்கில் செயற்­பட்ட மஹிந்த ராஜ­ப­க் ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் போக்கை மென்­வலு ரீதி­யான முறையில் ஆர­வா­ர­மின்றி வெற்­றி­க­ர­மாகக் கடைப்­பி­டித்துச் செல்­கின்­றது.

மேலோட்டப் பார்­வையில் எதிர்ப்­ப­ர­சியல் செய்து வந்த தமிழர் தரப்பு அர­சியல் தலை­மையின் ஆத­ரவைப் பெற்று அவர்­களின் ஒத்­து­ழைப்­புடன் நல்­லாட்சி அர­சாங்கம் தனக்­கான பல காரி­யங்­களை வெற்­றி­க­ர­மாகச் சாதித்­துள்­ளது.

இந்தக் காரி­யங்­களின் மூலம் தமிழர் தரப்பு அர­சியல் பல­வீ­ன­ம­டைந்­துள்­ளது மட்­டு­மல்­லாமல், அந்த அர­சி­யலின் ஆணி­வே­ரா­கிய வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், சுய­நிர்­ணய உரிமை, பகி­ரப்­பட்ட இறை­மை­யுடன் கூடிய பிராந்­திய அர­சியல் நிர்­வாக உரிமை போன்­றவை மட்­டு­மல்­லாமல், அந்த அர­சி­யலின் பாது­காப்பு, அதன் எதிர்­கால இருப்பு என்­ப­னவும் இன்று கேள்விக்குள்ளாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

யெவைாயஅதமிழ் மக்­களின் நலன்­களில் அக்­கறை உள்­ள­வர்­க­ளா­கவும், அவர்­க­ளது அர­சியல் நலன்­களில் ஆர்வம் உள்­ள­வர்­க­ளா­கவும் தோற்றம் தரு­கின்ற ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அவர்­களின் தலை­மை­யி­லான அர­சாங்­கமும், தோலி­ருக்க சுளையை விழுங்­கு­வதைப் போன்று தமிழர் பிர­தே­சங்­களை ஆக்­கி­ர­மிப்­ப­திலும், அத்­து­மீ­றிய வகையில் சிங்­களக் குடி­யேற்­றங்­களை மேற்­கொள்­வ­திலும், பௌத்­தர்­களே இல்­லாத போதிலும், பூர்­வீக தமிழ்ப் ­பி­ர­தே­சங்­களில் பௌத்த சின்­னங்­க­ளையும் புத்தர் சிலைகள் மற்றும் பௌத்த விகா­ரை­களை நிறு­வு­வ­திலும் கேட்­பா­ரின்­றியும், தடுப்­பா­ரின்­றியும் வெற்­றி­க­ர­மாகச் செயற்­பட்டு வரு­வதைக் கண்­கூ­டாகக் காண முடி­கின்­றது.

எதிர்க்­கட்சி என்ற நிலையில் இருந்த போதிலும், அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­கின்ற தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையும் அதன் செயல் வல்­ல­மை­யுள்ள முக்­கி­யஸ்­தர்­களும் இது விட­யத்தில் பேசா மடந்­தை­க­ளா­கவும், எதை­யுமே கண்­டு­கொள்­ளா­தவர்­க­ளா­க­வுமே காணப்­ப­டு­கின்­றார்கள். இதன் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள மக்கள் தாங்­க­ளா­கவே இந்த அநி­யா­யங்­க­ளுக்கும் அப்­பட்­ட­மான உரிமை மீறல்­க­ளுக்கும் நியாயம் கேட்­ப­தற்கு வீதி­யிலும் களத்­திலும் இறங்­கி­யி­ருக்­கின்­றார்கள்.

காணி உரித்­துக்­காக கேப்­பாப்­புலவு மற்றும் மன்னார் மாவட்­டத்தில் சிலா­வத்­துறை, அரிப்பு போன்ற பிர­தே­சங்­களைச் சேர்ந்த மக்கள் அடங்­க­லாக வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக நியாயம் கேட்­ப­தற்­காக அவர்­களின் உற­வி­னர்­களும் வீதியில் இறங்கி கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேலாகப் போராடி வரு­கின்­றார்கள்.

வலிந்து ஆட்­களைக் காணாமல் ஆக்­கி­யி­ருப்­பது என்­பது அப்­பட்­ட­மான மனித உரிமை மீறல் என்­பது சொல்லித் தெரிய வேண்­டிய விட­ய­மல்ல. அதே­போன்று குடி­யி­ருந்த காணி­க­ளையும், கிரா­மத்­தையும் தேசிய பாது­காப்பு என்ற போர்­வையில் அப­க­ரித்து வைத்துக் கொண்டு, காணி உரி­மை­யா­ளர்­க­ளிடம் உரித்­துக்­கான ஆவ­ணங்­களைக் கோரு­கின்ற ஓர் இன அழிப்பு நட­வ­டிக்கை இடம்­பெற்று வருகிறது என்­பதும் இர­க­சி­ய­மான விட­ய­மல்ல.

பூர்­வீகக் குடிகள் என்ற ரீதி­யிலும், பிறப்­பு­ரிமை வழி­யாக பிர­ஜைகள் என்ற ரீதி­யிலும் இந்த நாட்டின் தேசிய இனங்­களில் ஒன்­றாகத் திகழ்­கின்ற சிறு­பான்­மை­யின மக்­க­ளா­கிய தமிழ் மக்­களின் பூர்­வீக நிலங்­களில் அரச அதி­கார பலத்தைப் பிர­யோ­கித்து பேரின மக்­க­ளா­கிய சிங்­கள மக்­களை அத்­து­மீறி குடி­யேற்­று­கின்ற கைங்­க­ரியம் துணிச்­ச­லா­கவும் சட்­ட­ரீ­தி­யா­கவும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது.

வன­வள திணைக்­களம், தொல்­பொருள் திணைக்­களம், வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­களம், பௌத்த விவ­கா­ரங்­க­ளுக்­கான திணைக்­களம், கம­ந­ல­சேவைகள் திணைக்­களம் ஆகிய முக்­கி­ய­மான திணைக்­க­ளங்­களை ஒன்­றி­ணைத்து, நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியின் நேரடி கண்­கா­ணிப்பின் கீழ் தமிழர் பிர­தே­சங்­களில் காணி­களைக் கைய­கப்­ப­டுத்­து­கின்ற நட­வ­டிக்­கையும், சிங்­கள மக்­களைக் குடி­யேற்­று­கின்ற நட­வ­டிக்­கையும், புத்தர் சிலை­களை நிறு­வுதல், பௌத்த விகா­ரை­களை நிர்­மா­ணித்தல் போன்ற நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

மனிதன் இயற்­கையை ஆதா­ர­மாகக் கொண்டு வாழ்­பவன். இயற்­கை­யுடன் வாழ்­வ­தென்­பது அவ­னு­டைய பிறப்­பு­ரிமை. அது அவ­னு­டைய வாழ்­வு­ரிமை. மண்ணில் வாழ்­கின்ற மனி­த­னுக்கு மண்­ணு­ரிமை உண்டு. அது யாராலும் கொடுக்­கப்­பட முடி­யா­தது. அதே­போன்று யாராலும் பறிக்­கப்­படக் கூடா­ததும் ஆகும்.

ஆனால் இலங்­கையில் இந்த உரிமை தமிழ் மக்­க­ளுக்கு – குறிப்­பாக யுத்­தத்­தினால் இடம்­பெ­யர்ந்­துள்ள மக்­களில் ஒரு பகு­தி­யி­ன­ருக்கு மறுக்­கப்­பட்­டுள்­ளது. அவர்கள் வாழ்ந்த இடங்­களும், வாழ்ந்த பிர­தே­சத்தைச் சேர்ந்த இடங்­களும் அரச நிர்­வாகம் என்ற அதி­கார பலத்தின் மூலம் அப்­பட்­ட­மாக அப­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

இது, தமிழ் மக்­க­ளு­டைய தாய­கத்தின் இரு­தயப் பகு­தி­யா­கிய முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அடிப்­படை மனித உரிமை, அடிப்­படை வாழ்­வு­ரிமை என்­ப­வற்றை மீறி­யுள்ள இந்தச் செயற்­பா­டுகள் குறித்து, தமிழர் மர­பு­ரிமைப் பேர­வையின் இணைத் தலைவர் வி.நவ­நீதன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் உறுப்பு நாடு­களின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேர­வையின் அமர்­வை­யொட்டி ஜெனி­வா­வுக்குச் சென்­றுள்ள அவர், இந்த விடயம் தொடர்­பாக விரி­வான அறிக்­கை­யொன்றை சமர்ப்­பித்­துள்ளார். மகா­வலி அபி­வி­ருத்­தித் ­திட்­டத்தின் ஊடாக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற சிங்­களக் குடி­யேற்­றங்கள், தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் அனு­ச­ர­ணை­யுடன் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற பௌத்த மய­மாக்கல், வன­வள திணைக்­களம், வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­களம் என்­பவற்றின் ஊடாக தமிழ் மக்­களின் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்டு, அவர்­களின் பொரு­ளா­தாரம் சூறை­யா­டப்­ப­டு­கின்ற நட­வ­டிக்­கைகள் என்­பவை குறித்து இந்த அறிக்கை ஆதா­ரங்­க­ளுடன் பேசு­கின்­றது.

இந்த நட­வ­டிக்­கைகள் கடந்த நான்கு வரு­டங்­க­ளாக நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­னாலும், யுத்தம் முடி­வ­டைந்­ததைத் தொடர்ந்து ஆறு வரு­டங்­க­ளாக முன்­னைய அர­சாங்க காலத்­திலும் இடம்­பெற்று வரு­கின்­றன. ஆனால் இந்த நட­வ­டிக்­கைகள் குறித்தும் இத­னால் தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­புக்கள் குறித்தும் இது­வ­ரை­யிலும், தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மை­யா­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஆக்­க­பூர்­வ­மான முறையில் அர­சாங்­கத்தின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­த­தாகத் தெரி­ய­வில்லை. அதே­போன்று மனித உரி­மைகள் அடிப்­படை உரி­மைகள் என்­பன மீறப்­ப­டு­வ­துடன், இன அழிப்பு நட­வ­டிக்­கை­யாக தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற இந்த நட­வ­டிக்­கைகள் குறித்து ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் கவ­னத்­திற்கோ அல்­லது ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் கவ­னத்­திற்கோ உரிய முறைப்­படி கொண்டு சென்­ற­தா­கவும் தெரி­ய­வில்லை.

057-1140x798இத்­த­கைய ஒரு நிலை­யில்தான் தமிழர் மர­புரிமைப் பேரவை என்ற பெயரில் உத­ய­மா­கி­யுள்ள அமைப்பு தமிழ் மக்­களின் பூர்­வீகக் காணி­களும், வாழ்­வி­டங்­களும் அப­க­ரிக்­கப்­ப­டு­கின்ற அநி­யா­யத்­திற்கு எதி­ராகக் குரல் கொடுத்து, வீதியில் இறங்கி போராட்டம் நடத்­தி­ய­துடன் நின்­று­வி­டாமல் ஐ.நா.வின் நேரடி கவ­னத்­திற்கும் இந்த விட­யத்தைக் கொண்டு சென்­றுள்­ளது.

மகா­வலி ‘எல்’ வலயத்தின் கீழ் ஆறாயிரம் சிங்களக் குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு மற்றும் வவுனியா மாவட்டத்தின் வடக்கு பிரதேச செலயகப் பிரிவு என்பவற்றில் குடியேற்றப்பட்டுள்ளன. இந்தக் குடியேற்றத்திற்காக 1984 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த தமிழ் மக்களுடைய வாழ்வாதார காணிகள் 2000 ஏக்கர் நிலப்பகுதி கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபை யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் இந்த சிங்களக் குடியேற்றத்திற்காக மூவாயிரம் மில்லியன் ரூபா நிதியை செலவிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு தமிழ்க் குடும்பம் கூட நன்மை அடையவில்லை.

தொட்டக்கண்டல் குளத்தில் 26 ஏக்கர், சிவந்தமுறிப்பில் 120 ஏக்கர், எரிஞ்ச காட்டில் 490 ஏக்கர், குஞ்சுக்கல்வெட்டியில் 12 ஏக்கர், நெலும்வௌ என சிங்களத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள உந்தராயன்குளத்தில் 264 ஏக்கர், அடையாகருந்தனில் 144 ஏக்கர், ஆமையன் குளத்தில் 239 ஏக்கர், கூமாவடி கண்டலில் 68 ஏக்கர், பூமடு கண்டலில் 120 ஏக்கர், மரியாமுனையில் 520 ஏக்கர் காணி என மொத்தமாக 2003 ஏக்கர் காணிகள் இந்தத் திட்டத்திற்கென தமிழ் மக்களுடைய பிரதேசங்களில் இருந்து அபகரிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற பல விடயங்களை உள்ளடக்கிய அந்த அறிக்கை இதுகால வரையிலும் இல்லாத வகையில் ஆதாரபூர்வமான தகவல்களுடன் தமிழ் மக்கள் மீது அரசு மேற்கொண்டுள்ள இன அழிப்பு நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கின்றது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் உரிய முறையில் கவனம் செலுத்தி முறையான அழுத்தங்களின் ஊடாக இலங்கை அரசாங்கத்தை நெறிப்படுத்துவார்களா என்பது தெரியவில்லை.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com