லண்டனில் ஸ்டாக்போர்ட்டில் வசிக்கும் வயதான தம்பதியினர் சபைப்பதற்காக அவனை திறந்தபோது அதிலிருந்து பாம்பொன்றை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

அதன்பின் இது குறித்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்ததையடுத்து, வனஜீவராசி அதிகாரிகள் பாம்பினை பாதுகாப்பாக பிடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து வனஜீவராசிகள் அதிகாரிகள் குறிப்பிடுகையில்,  82 வயதான மூதாட்டி சமைப்பதற்காக அவனை திறந்தபோது அதிலிருந்த 3 அடி நீளமுள்ள பாம்ப‍ை கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அவனில் இருப்பது பாம்பு தானா என அவருக்கு சந்தேகம் எழ அவரது கணவரை அழைத்து காண்பித்துள்ளார்.

அப்போது அவரின் கணவர் அவனில் இருப்பது பாம்பு தான் என கூறிய பின்னரே அப் பெண் நம்பியுள்ளார்.

இதன் பின் எங்களுக்கு வழங்கிய தகவலின் பிரகாரமே பம்பினை நாங்கள் பாதுகாப்பாக மீட்டோம், அந்த பாம்பினை வளர்ப்பதற்கு எவரேனும் ஆர்வமாக இருந்தால் எங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.

மேலும் அந்த பாம்பிற்கு மீட்பு குழுவினர் சமி என்று பெயரிட்டுள்ளனர்.