ilakkiyainfo

அவர்கள் இங்கு இளைஞர்களையும் யுவதிகளையும் கொண்டுவந்து சுட்டுத்தள்ளுகின்றனர்-கொழும்பில் கடத்தப்பட்ட இளைஞன் தாய்க்கு தெரிவித்த தகவல்

அவர்கள் இங்கு இளைஞர்களையும் யுவதிகளையும் கொண்டுவந்து சுட்டுத்தள்ளுகின்றனர்-கொழும்பில் கடத்தப்பட்ட இளைஞன் தாய்க்கு தெரிவித்த தகவல்
October 13
17:40 2019

நாகநாதன் 2008 ம் ஆண்டு செப்டம்பர் 17 ம் திகதி கொழும்பில் கடத்தப்பட்டார்.

இலங்கை கடற்படையினர் கப்பம் பெறுவதற்காக கடத்திய 11 இளைஞர்களில் இவரும் ஒருவர். இதனை இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கண்டுபிடித்தனர்.

பிரிட்டன் பல்கலைகழகத்தில் கல்வி கற்பதற்காக ராஜீவ் செல்லவுள்ளதை கொண்டாடுவதற்காக சென்றுகொண்டிருந்த ராஜீவும் அவரது நான்கு நண்பர்களும் கடத்தப்பட்டனர்.

மே 21 ம் திகதி அவர் தாயுடன் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பே இறுதி தொலைபேசி அழைப்பாக அமைந்தது.அவரது தாய் அன்றே தனது மகனின் குரலை இறுதி தடவையாக கேட்டார்.

இந்த தொலைபேசி அழைப்பு குறித்து கடந்த மாதம் சிஐடியினர் சரோஜினி நாகநாதனிடமிருந்து மீண்டும் ஒரு வாக்குமூலத்தை பெற்றிருந்தனர்.

hmm,hதிருகோணமலை கடற்படை முகாமில் தனது நண்பர்களுடன் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை ராஜீவ் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரிடமிருந்து தொலைபேசியை பெற்று தனது தாயுடன் உரையாடியுள்ளார்.

தனது மகன் கடத்தப்பட்ட பின்னர் அவர் தன்னுடன் மேற்கொண்ட உரையாடல்களை சரோஜினி முழுமையாக நாட்குறிப்பொன்றில் பதிவு செய்துள்ளார்.

தடுப்பு முகாமில் மிகவும் பயங்கரமான சம்பவங்கள் இடம்பெறுவதாக தனது மகன் தெரிவித்ததாக சரோஜினி சிஐடியினரிடம் குறிப்பிட்டுள்ளார்.

எனது மகன் மிகுந்த அச்சத்திலிருந்தான் என சரோஜினி சிஐடியினரிடம் தெரிவித்துள்ளார்.

அம்மா அவர்கள் 18 முதல் 20 வயதுடைய இளைஞர்களையும் யுவதிகளையும் இங்கு கொண்டுவந்து சுட்டுக்கொலை செய்கின்றனர்,என எனது மகன் தொலைபேசியில் தெரிவித்தார் என சரோஜினி சிஐடியினருக்கு தெரிவித்துள்ளார்.

எனது மகன் கழிவறைக்கு அழைத்துசெல்லப்பட்டவேளை இரத்தக்கறைகளையும் பெருமளவு இரத்தங்களையும் கண்டுள்ளான் தனக்கும் அந்தகதி ஏற்படுமோ என அவன் அச்சம் கொண்டிருந்தான் என அவர் சிஐடியினரிடம் தெரிவித்துள்ளார்.

நான் அவனிற்கு எந்த தீமையும் ஏற்படாது ஜயப்பனை வணங்குமாறு கேட்டுக்கொண்டேன்,கடவுள் இருக்கின்றார் உன்னை காப்பாற்றுவார் என நான் அவனிடம் தெரிவித்தேன் என சரோஜினி சிஐடியினரிடம் தெரிவித்தேன்.

இந்த வழக்கில் சாட்சியமாகவுள்ள கொத்தலாவல பண்டுகுமார தனக்கு சாப்பாடு சுற்றிவந்த பேப்பரில் ஐயப்பனின் படம் காணப்பட்டதாகவும் அதனை தன்னுடன் வைத்திருப்பதாகவும் ரஜீவ் தெரிவித்துள்ளான்.

கடந்த வாரம் கொழும்பு நீதவானிற்கு சமர்ப்பித்த பி அறிக்கையில் சிஐடியினர் 2009 மே 21 ம் திகதிக்கு பின்னர் ராஜீவ் நாகநாதன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரான சுமித் ரணசிங்கவின் பொறுப்பின் கீழ் காணப்பட்ட திருகோணமலை கண்சைட் முகாமில் 18 முதல் 20 வயதிற்குபட்ட  இளைஞர் யுவதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

ஒரு தசாப்தத்திற்கு மேல் தங்கள் பிள்ளைகள் உயிருடன் இருக்ககூடும் என்ற நம்பிக்கையுடன் போராடிக்கொண்டிருந்த பெற்றோர்களிற்கு சிஐடியினரின் இந்த தகவல் பெரும் மன அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

11_abduc_caseகொழும்பில் 11 இளைஞர்களும் கடத்தப்பட்;ட எட்டுமாதங்களின் பின்னர் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்ற முடிவிற்கு தனது விசாரணையாளர்கள் வருவதாக இந்த விசாரணைகளிற்கு பொறுப்பாகவுள்ள சிஐடி அதிகாரி நிசாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

ரஜீவிற்கும் அவரது தாய்க்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் மற்றும் ஏனைய சாட்சியங்களை அடிப்படையாக வைத்து இந்த முடிவிற்கு வந்துள்ளதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.விசாரணையாளர்களிற்கு சமீபத்தில் வழங்கிய மேலதிக வாக்குமூலத்தின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். ஏனைய சாட்சியங்களும் சிஐடியினர் இந்த முடிவிற்கு வருவதற்கு காரணமாக அமைந்துள்ளன.

கொலைகாரர்கள் மேற்கொள்ளும் கொலைகளிற்கு தானும் பலியாகக்கூடும் என ரஜீவ் அச்சம் கொண்டிருந்தார்.மே 21 2009 ற்கு பின்னர் ரஜீவ் கொலை செய்யப்பட்டார் என நாங்கள் கருதுவதற்கு போதியளவு ஆதாரங்கள் உள்ளன நிசாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

தமது சாட்சியங்கள் குறித்த விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சிஐடியினர் குறிப்பிட்ட கடற்படை முகாமின் புலனாய்வு அதிகாரியாக பணியாற்றிய கிரிசான் வெலகெதரவும் கடற்படை உத்தியோகத்தர் செனிவரட்ண என்பவரும் கடத்தப்பட்ட 11 பேரும் கன்சைட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை உறுதி செய்துள்ளனர் என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டனர் எனவும் அவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் சீட்டினால் போர்த்தப்பட்டு டிரக்கில் ஏற்றப்பட்டதை தான் பார்த்தேன் எனவும் வெலகெதர ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த அறிக்கை மிகவும வலுவான ஆதாரம் என தெரிவித்துள்ள நிசாந்த சில்வா இதுவே கடத்தப்பட்ட 11 இளைஞர்கள் கொலைசெய்யப்பட்டனர் என்ற முடிவிற்கு வருவதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

ரஜீவ் தனது தாய்க்கு தெரிவித்த விடயங்கள் உண்மையானவை என்பதை நாங்கள் உறுதிசெய்வதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.விசாரணையின் போது கடற்படையினர் தமிழ் சிங்கள முஸ்லீம் இளைஞர்களை சட்டவிரோத கடத்தி உடல் உள சித்திரவதைக்கு உட்படுத்திய பின்னர் அவர்களை படுகொலை செய்தனர் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என சிஐடி அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும் சிஐடியினரின் இந்த தகவல்கள் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோருக்கு சிறிதும் நிம்மதி அளிப்பதாகயில்லை.

காணாமல்போன டிலான் ஜமால்தீனின் தாய் ஜெனீபர் வீரசிங்க சிஐடியினர் தெரிவிப்பதை ஏற்பதற்கு நான் தயாரில்லை என குறிப்பிட்;டார்.

எனது மகன் இறந்துவிட்டான் என்பதை நம்புவதற்கு நான் தயாரில்லை,உறுதியாக ஆதாரத்தை சமர்ப்பித்தால் மாத்திரமே நான் அதனை நம்புவேன் எஞ்சிய உடற்பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட மரபனுபரிசோதனையை  நம்புவதற்கு நான் தயார் என அவர் தெரிவித்தார்.

நான் ஜோதிடத்தை நம்புகின்றேன் அவை எனது மகன் உயிருடன் இருப்பதாக தெரிவிக்கின்றன,அவர்கள் எங்கள் பிள்ளைகளை கண்டுபிடிக்கவேண்டும் அல்லது உறுதியான ஆதாரங்களை முன்வைக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com