ilakkiyainfo

ஆசனப்பகிர்வு இவ்வாறுதான் கணிப்பிடப்பிடும்!

ஆசனப்பகிர்வு  இவ்வாறுதான்  கணிப்பிடப்பிடும்!
August 06
15:22 2020

தற்போது முதலாவது ஆசனம் மாவட்டத்தில் முதலாம் அதிகூடிய வாக்குகளைப்பெற்ற கட்சிக்கு வழங்கப்படும். அதனை போனஸ் (Bonus)ஆசனம் என்றும் சொல்லப்படும்
இதனடிப்படையில் இங்கு 140,000 வாக்குகளைப்பெற்ற கட்சி A ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்ளும்.

அடுத்து வெட்டுப்புள்ளி –

5% என்ற வெட்டுப்புள்ளிக்கு குறைவான வாக்குகளை பெற்ற கட்சியின் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. அதைதவிர்த்து வரும் கட்சிகளின் வாக்குகள் கவனத்திற்கெடுத்துக்கொள்ளப்பட்டு அதனை எஞ்சிய 6ஆசனங்களால் பிரித்தால் வெட்டுப்புள்ளி வரும் .

இதனடிப்படையில்
400, 000 x 0.05 = 20,000

எனவே 20,000 இற்கு குறைவான வாக்குகளை பெற்ற கட்சிகள் F,G,H பெற்றுக்கொண்ட வாக்குகள் கணக்கெடுக்கப்படாது.

போனஸ் ஆசனம் தள்ளி மீதம் உள்ள 6 ஆசனங்கள், இவை கட்சிகள் பெற்ற வாக்குகள் அடிப்படையில் பிரிக்கப்படும்
தொடர்ந்து போட்டியில் இருக்கும் கட்சிகளின் மொத்த வாக்குகள்

140,000 + 110000 +52, 500+ 30,000 + 27,500 = 360,000
எனவே ஒரு ஆசனத்தை பெற தேவையான வாக்குகள் 360,000/6 = 60,000

முதல் சுற்று –

முதல் சுற்றில் 60,000 வாக்குகளுக்கு ஒரு ஆசனம் வீதம் வழங்கப்படும்.
அதன் படி
கட்சி A – 2 ஆசனங்கள்
140,000 – 120,000= 20,000 மீதி
கட்சி B – 1 ஆசனம்
110, 000- 60,000= 50,000 மீதி

ஏனைய C,D,E கட்சிகளுக்கு 60,000 வாக்குகள் இல்லாததால் முதல் சுற்றில் ஆசனங்கள் கிடைக்காது, இருந்தும் அவர்களின் வாக்குகள் மீதியாக கணிக்கப்பட்டு இரண்டாம் சுற்றில் போட்டி போடும்

இது வரை
A – 1 (போனஸ்) + 2 ஆசனங்கள்
B – 1 ஆசனம்
மொத்தமாக 4 ஆசனங்கள் வழங்கப்பட்டு விட்டன. மீதம் 7- 4 = 3 ஆசனங்கள் மீதியாக உள்ளன.

இரண்டாம் சுற்று (மீதி வாக்குகள்)
A – 20,000
B – 50,000
C – 52,500
D – 30,000
E – 27,500

இதன் அடிப்படையில் மீதி வாக்குகள் அதிகம் உள்ள முதல் மூன்று கட்சிகளுக்கும் தலா ஒரு ஆசனம் வீதம் வழங்கப்படும்
C – 52,500 ஒரு ஆசனம்
B – 50,000. ஒரு ஆசனம்
D – 30,000 ஒரு ஆசனம்

இறுதி முடிவு:

கட்சி A – 1+2+0 = 3 ஆசனங்கள்
கட்சி B – 1+1 = 2 ஆசனங்கள்
கட்சி C- 0+1 = 1 ஆசனம்
கட்சி D- 0+1 = 1 ஆசனம்
கட்சி E- 0+0 = 0

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com