ஆசிய மட்டப்போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு மாணவிக்கு பாராட்டு விழா

ஆசிய மட்ட பளு தூக்கல் போட்டியிலே வெற்றியீட்டிய முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன்குளம் மகா வித்தியாலய மாணவி தேவராசா தர்சிகா மற்றும் அவரை பயிற்றுவித்த ஆசிரியர் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு செல்வபுரம் கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை 3.45 மணியளவில் நடைபெற்றது.
ஆசிய மட்ட பளு தூக்கல் போட்டியிலே 48 கிலோ எடை பிரிவிலே 90 கிலோ எடையை தூக்கி பெருமை சேர்த்த மாணவிக்கு செல்வபுரம் கலைமகள் விளையாட்டு கழகம் மற்றும் செல்வபுரம் கமக்கார அமைப்பு ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த பாராட்டு நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிதிகள், பாடசாலை சமூகம், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டள்ளனர்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment