ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசு… இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஆட்டுக்குட்டிகளுக்கு பசு மாடு பால் கொடுக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மனிதர்கள் மட்டுமல்லாமல் அனைத்து ஜீவராசிகளுக்கும் உள்ள பொதுவான தனிச்சிறப்பு தாய்மை. காலம் எவ்வளவுதான் மாறினாலும், தாய்மையின் சிறப்புகளும், இரக்க குணமும் என்றும் மாறப்போவதில்லை.
இதை நிரூபிக்கும் வகையில் பல சம்பவங்களை நம் வாழ்நாளில் பார்த்திருக்கிறோம். இது தொடர்பான பல வீடியோக்கள், புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியாகி வியக்க வைத்துள்ளன.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ஒரு பசு, ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் காட்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பசு மாடு சாலையில் நின்றபடி, ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும்போது செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment