Site icon ilakkiyainfo

ஆபாசக்காட்சிகளைக் காண்பித்து மாணவிகளை வல்லுறவுக்குட்படுத்திய அதிபர் கைது

கேகாலை பகுதியில் கணனி மூலம் ஆபாசக் காட்சிகளைக் காண்பித்து தமது பாடசாலை மாணவிகள் எட்டுப் பேரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பாடசாலை அதிபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த அதிபர்சிறுமிகளை தமது காரியாலய அறைக்கு அழைத்து ஆபாசக்காட்சிகளைக் காட்டி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கேகாலை சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பொலிஸ் பிரிவினர் அதிபரை கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேற்படி சந்தேக நபரிடமிருந்து ஆபாசக்காட்சிகள் அடங்கிய பெண்டரைவ் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கேகாலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யுவதி மீது பாலியல் வல்லுறவு;காதலன் உட்பட ஆறு பேர் கைது
07-06-2014

17 வய­து­டைய தனது காத­லியை துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் யுவதியின் காதலன் உள்­ளிட்ட ஆறு பேர் கைதுசெய்­யப்­பட்டு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக முந்தல் பொலிஸார் தெரி­வித்­தனர்.

முந்தல் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட உடப்பு பகு­தியைச் சேர்ந்த யுவதியே இவ்­வாறு பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

குறித்த யுவதி உடப்பு பகு­தியில் முடி வெட்டும் நிலையம் ஒன்றில் பணி புரியும் இளைஞர் ஒரு­வ­ருடன் காதல் தொடர்­பினை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் குறித்த யுவதி கடந்த ஒரு மாதத்­திற்கு முன்னர் தனது காத­லனைச் சந்­திப்­ப­தற்­காக அவர் பணி­பு­ரியும் இடத்­திற்கு சென்­றுள்ளார்.

இதன் போதே அங்­கி­ருந்த தனது காதலன் உள்­ளிட்ட ஆறு பேர் தன்னை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தி­ய­தாக அந்த யுவதி பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார். இச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்­தே­க­ ந­பர்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்ள  போதிலும் அவர்கள்  பிர­தே­சத்தை விட்டு   தலை­ம­றை­வா­கி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

பாதிக்­கப்­பட்ட யுவதி வைத்­திய பரி­சோ­த­னைக்­காக சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

Exit mobile version